Skip to Content

10. அஜெண்டா

"Agenda"

Sri Aurobindo does not want Mother to work for 2 days before Darsan

தரிசனத்திற்கு 2 நாள் முன் அன்னை வேலை செய்யக் கூடாது என்றார் பகவான் ஸ்ரீ அரவிந்தர்

- அஜெண்டா

1962 வரை அன்னை காலை 6.15க்கு ஆசிரமத்தின் வடக்குப் பகுதியில் உள்ள பால்கனியில் வந்து நின்று தரிசனம் சுமார் 15 நிமிஷம் தருவார்.

1964லிருந்து ஆசிரமத்தின் கிழக்குப் பகுதியில் 3ஆம் மாடியில் உள்ள பால்கனியில் மாலை 5.15க்கு தரிசனம் 1973 ஆகஸ்ட் 15 வரை தந்தார்.

தரிசன சமயம் அன்னை கீழே குழுமியுள்ள அனைவரையும், ஒருவர் விடாமல், பார்ப்பார். பார்த்தபின், ஆகாயத்தை நோக்கிப் பார்த்தபடி 15 நிமிஷம் நிற்பார். அத்துடன் தரிசனம் கலையும். "அனைவருடைய ஆர்வத்தையும் ஒன்று சேர்த்து, இறைவனுக்கு நான் தினமும் அர்ப்பணிப்பேன்'' என அவர் தரிசனத்தை விவரித்துள்ளார்.

பரீட்சைக்குப் படிப்பவர்கள், கதை கட்டுரை எழுதுபவர்கள், வழக்கை உருவாக்கும் வக்கீல், சிந்தனையாளர்கள் அதிகாலையில் மனம் தெளிவாக இருப்பதையும், எண்ணங்கள் எளிதில் வருவதையும் காண்பார்கள். இரவு உடல் அமைதியாகத் தூங்குவதால் காலையில் மனம் தெளிவாக இருக்கும். மனிதன் தூக்கத்தில் சச்சிதானந்தத்தைத் தொட்டு தானிழந்த தெம்பைப் பெறுகிறான் என்கிறார் அன்னை.

  • எண்ணங்கள் உடலில் உற்பத்தியாகின்றன என்றார் பகவான்.
  • உடல் அமைதியானால் பெரிய எண்ணங்கள் உற்பத்தியாகும்.
  • தூக்கத்தில் உடல் அமைதியாவது போல் தியானத்தில் பேரமைதியுறும்.
  • அந்த அமைதி சமாதியில் முழுமை பெற்று உச்சியைத் தொடும்.
  • தரிசனத்தில் அன்னை பக்தனையும், பரமாத்மாவையும் இணைப்பதால் அன்னைக்கு உயர்ந்த அமைதி தேவைப்படுகிறது.
  • ஒரு குரு ஒரு சமயம் ஒரு சிஷ்யனுக்கு மட்டும் அப்படிப்பட்ட அனுக்கிரஹம் செய்ய முடியும். அன்னை பலஆயிரம் பக்தர்கட்கு ஒரே சமயத்தில் அதைச் செய்கிறார். அது போன்றவர் உலகில் இதுவரைப் பிறந்ததில்லை.
  • அமைதி என்பது Peace. மௌனம் என்பது Silence. மௌனத்திற்குப் பின் மௌனம் Silence behind Silence என்பதும் உண்டு.
  • அதை உடல் ஏற்று பக்தர்கட்களிக்க உடலுக்குத் தூக்கம் தரும் அமைதியோ, தியானம் தரும் அமைதியோ, சமாதி தரும் அமைதியோ போதாது. விழிப்பில் சமாதி நிலையை எய்துபவராலேயே அதைச் செய்ய முடியும். அதுவும் சித்தித்தவர் அன்னையும், பகவானும்.
  • அந்த சித்தி பெற்றிருந்தாலும் அது நடைமுறையில் செயல்பட உடலுக்கு வேலையில்லாமல் நீண்ட அமைதி தேவை.
    அதைக் குறிப்பிட்டு பகவான் இரு நாட்கள் வேலை செய்யக் கூடாது என்றார்.
    வேலை செய்தால் உடல் படபடக்கும்.
    படபடப்பு அடங்கிய பின்னரே அமைதியை அடுத்தவர்க்கு அளிக்க முடியும்.
    நினைத்தால் மனம் பதைக்கும்.
    உணர்ந்தால் நாடி நரம்பு பதைக்கும்.
    அசைந்தால் உடல் படபடக்கும்.
    உடலிலும், ஜீவியம், பொருள்என இரு பாகங்களுண்டு.
    ஜீவியம் அமைதி பெற்றாலும், பொருள் அமைதியுறாது.
    பொருளும் அமைதியுற தியானம், சமாதியைக் கடந்த அமைதி தேவை.

 

*******

 



book | by Dr. Radut