Skip to Content

08.அஜெண்டா

“Agenda”

Indians have a discernment as to the nature of forces.

யார் நல்லவன், யார் ஏமாற்றுபவன் என்ற தெளிவு இல்லாதவன் எளிதில் ஏமாறுவான்.

திருவனந்தபுரத்திற்கு வெளியிலிருந்து வருபவர்கள் அடிக்கடி மழையில் மாட்டிக்கொண்டு நனைவார்கள். மழை 'சோ' என வரும் அறிகுறிகள் உள்ளூர்வாசிகட்கிருப்பதால் அவர்கள் தப்பித்துக் கொள்வார்கள். நாட்டில் பணப்புழக்கம் அதிகமாகிறது. அதனால் ஏமாறுவதும் அதிகமாகிறது. மேல் நாட்டாருக்கு மனிதனுடைய வலிமை தெரியும். அவனுடைய சூட்சுமம் தெரியாது. அபிப்பிராய பேதம் வலுத்தால் எதிரியானால் நேரடியாகத் தாக்குவான். மறைமுகத் தாக்குதலோ, சூட்சுமமான எண்ணமோ மேல்நாட்டாருக்குத் தோன்றுவதில்லை.

ஓர் ஆங்கில நிலச் சுவான்தாருடைய எஸ்டேட் அவருக்கும் அவருடைய இரண்டு அண்ணன் மகள்கட்கும் சொந்தம். பெண்கள் அவருடைய பராமரிப்பில் வாழ்கின்றனர். ஒருத்தி இறந்துவிட்டாள். ஏன் என்று தெரியவில்லை. இறக்கும்பொழுது வாயடைத்துவிட்டது. கையால் பாம்பின் ஜாடை காட்டினாள். தங்கைக்கு அது பாம்பு எனப் புரியவில்லை. உதவியை நாடுகிறாள். அவருக்கு விஷயம் புரிகிறது. சொத்திற்காகப் பெண்களைக் கொலை செய்யும் திட்டம். அடுத்தவளுக்கு பீதி ஏற்பட்டுவிட்டது. அதைவிட்டுப் போகமுடியாது. சித்தப்பா இல்லாதபொழுது பெண், நண்பரை வந்து மாளிகையைப் பார்வையிடச் சொல்கிறாள். அவருடைய சோதனை சித்தப்பாவின் அறையில் உள்ள இரும்புப் பெட்டி மீது பட்டது. அதனுள் பாம்பிருக்கிறது. மேலும் விசாரிக்கிறார். சித்தப்பா கல்கத்தாவில் டாக்டராக வேலை செய்தவர் என அறிகிறார். "ஆசியருக்கே சூட்சுமமான, மறைமுகமான தாக்குதல் தோன்றும்'' என்கிறார்.

பெண்கட்குச் சித்தப்பா தங்கள் சொத்தின் மீது கண்ணாக இருக்கிறார் எனத் தோன்றவில்லை. நாட்டில் மனிதன் நல்லபடியாக வாழ அங்குலவும் சக்திகளை அறிந்திருக்க வேண்டும். தொழில், சமூகம், பணம், அரசியல், ராணுவச் சக்திகள் ஜடமான சக்திகள்.ஆங்கிலேயர் நம்மைவிட நன்றாக அவற்றை அறிவர். ஒரு பெரிய திட்டம் ஆரம்பிக்கும்பொழுது அடுத்த 50 ஆண்டுகளில் இத்திட்டம் எவ்வகை சக்திகளால் பாதிக்கப்படும், ஆதரிக்கப்படும் என்று கூறும் சக்திகள் உலகிலில்லை.இந்தியர் அந்த ஞானம் பெற்றவர். காலம், நேரம், சகுனம் என்பவை அவர் கருதுவது. அவற்றையெல்லாம் கடந்து,

               .இது 50 ஆண்டானால் நல்ல அபிவிருத்தியாகும்

அல்லது

. இது எனக்கு என்னமோ சரியாகப் படவில்லை

 

என்பார்கள். விபரம் தெரிந்தவர் அதுபோல் பேசுவது 50ஆம் ஆண்டில் பலிக்கும். ஒரு தம்பதி 'ஓஹோ' என வாழ்ந்தால், "இவர்கள் திருமணத்தில் நான் இவர்கள் நன்றாக இருப்பார்கள் எனக் கூறியது நினைவிருக்கிறதா?'' என்பார்கள். பிற்கால விளைவுகளை நிர்ணயிப்பது மற்ற உலகங்கள். நாம் தெய்வ லோகம், ஆவி உலகத்தை அறிவோம். சூட்சும லோகம், காரண லோகம் உண்டு. சூட்சும லோகம் 8, 10 வகைகளாகப் பிரிந்துள்ளது. பூமியின் ஞாபகம் பதிக்கப்பட்ட லோகம் உண்டு. சிவலோகம், வைகுந்தம், கோலோகம்,சுவர்க்கம் என்பன மோட்ச லோகம் எனப் பல வகைகளுண்டு. சக்திகள் எல்லா லோகங்களிலிருந்தும் நம்மிடையே உலவுகின்றன. அச்சக்திகள் சஞ்சாரம் செய்வதை அதிகமாக உணரக்கூடிய திறமையுள்ளவர்கள் இந்தியர் என்கிறார் அன்னை.

****
 


 


 



book | by Dr. Radut