Skip to Content

07.பிரார்த்தனை பலிக்க வேண்டும்

பிரார்த்தனை பலிக்க வேண்டும்

                                                                      (சென்ற இதழின் தொடர்ச்சி....)

தம்பி - துறவி வாழ்வைவிட்டு விலகியவனாயிற்றே. அவன் தேடுவது ஆத்மா (being) ஆயிற்றே. வாழ்வுடன் தொடர்பற்ற ஆத்மாவுக்கு அதற்குமேல் திறனிருக்காது.

அண்ணன் - ஸ்ரீ அரவிந்தம் தேடும் ஆத்மா வாழ்வினுடைய ஆத்மா (being of the becoming). இது வாழ்வில் உள்ள ஆத்மா என்பதால் இதற்கு அபரிமிதம், அனந்தம் உண்டு.

தம்பி - ஸ்ரீ அரவிந்தர் முக்கியமாகக் கூறியதே இதுதான். வாழ்வை ஏற்றுக்கொள் என்றார். இல்லறம் என்பது இயற்கை, பிரகிருதி (becoming). துறவறம் என்பது ஆத்மா, வாழ்வைவிட்டு விலகியது. அது being of the becoming. இந்த ஆத்மா வாழ்வு முழுவதையும் ஆத்மாவாக மாற்றுவதால் அபரிமிதம் எழுகிறது.

அண்ணன் - இது தத்துவம், தெளிவாக இருக்கிறது. ஆனால் அனைவருக்கும் புரிய உதாரணம் வேண்டும்.

தம்பி - உதாரணம் தருவது சிரமம்.

அண்ணன் - Glenn Doman டோமான் படிப்பு முறையை உதாரணமாகக் கூறலாம். ஆனால் அதுவும் மனதில் பதியாது. வேறில்லை என்பதால் அதையே சொல்வோம்.

தம்பி - அது எனக்குத் தெரியும். குழந்தை பள்ளிக்கூடம் போக அழுவது வாழ்வு becoming. அழுதாலும் படிப்பது கட்டுப்பாடு, அது being. அழுவது இல்லறம். படிப்பது துறவறம். குழந்தை டோமான் முறையில் ஆர்வமாகப் படிக்கும்பொழுது அதன் ஆத்மா வெளிவருகிறது. ஏராளமாகப் படிக்கிறது.

அண்ணன் - அழாமல் சந்தோஷமாகப் படிப்பது முக்கியம். U.K.G குழந்தை 5ஆம் வகுப்பு மாணவன் அளவு படிக்கிறது. 4 வயதில் Readers Digest முழுவதும் படிக்கிறது. இது பெரிய சாதனை.

தம்பி - இப்படிச் சொல்லலாமா? Goods பொருள்களை உற்பத்தி செய்வது உடல் வாழ்வு. அதில் பணம் கொஞ்சம் வரும். சேவை service செய்வதால் அதிக உற்பத்தியாகும். அதிகப் பணம் வரும். நாணயம் என்பது மனத்தாலான வாழ்வு. இதனால் சம்பாதிப்பது ஏராளம். இதற்கடுத்தாற்போல் ஆன்மீகம், சத்திய ஜீவியம், அன்னையுண்டு.

அண்ணன் - ஓரளவு சரிவரும். நாணயமும் திறமையும் முழுவதுமிருந்தால் உதவியாக ஓரளவு சேவை இருந்தாலும் அபரிமிதமாகச் சம்பாதிக்கலாம். இப்படிச் சொன்னாலும் சந்தேகம் தெளியாது.

தம்பி - நாணயம், நம்பிக்கை நாட்டில் வளர வளர, நாணயமானவனின் சம்பாதிக்கும் திறமை பெருகுகிறது.

அண்ணன் - சரி, தத்துவம் தெளிவாக இருக்கிறது. உதாரணம் சொல்லாவிட்டால் பயன்படாது.

தம்பி - இன்று உதாரணம் கூற ஒன்றில்லை. ஏனெனில் நாணயம், திறமை, போக பொறாமை, போட்டி, பொய், தில்லுமுல்லு ஆகியவை அழியவேண்டும்.

அண்ணன் - value பண்பு என்பதே அதுதான். நாட்டில் உயர்மட்டத்தில் வெளிப்படையாக உயர்ந்த பண்புகள் அதிகம். Planning Commission கூட்டத்தில் ஒருவர் அடுத்தவரை "நீங்கள் மடத்தனமாகப் பேசுகிறீர்கள்'' என்று சொல்வதில்லை. அசெம்பிளியில் திட்டுவது சகஜம். முனிசிபாலிட்டியில் அடிதடி உண்டு.

தம்பி - மேல்மட்டத்தில் உயர்ந்த பண்புகள் மட்டும் வெளிப்படையாக உண்டு. Visa அப்படி ஏற்பட்டதுதான். உயர்ந்த பண்புகள் மட்டும் உயர்ந்த ஸ்தாபனங்களில் உண்டு. தனிப்பட்ட முறையில் உயர்ந்த பண்புகள் குறைவு.

அண்ணன் - பண்புகள் உயரும்பொழுது பணம் பெருகுகின்றது. இக்கருத்து மனதில் படும்படி எனக்குச் சொல்லத் தெரியவில்லை.

தம்பி - நமக்கு ஸ்தாபனம் முக்கியமன்று. அது economics பொருளாதாரம். நமக்கு தனி நபர் முக்கியம். தனி மனிதன் இந்த உயர்ந்த பண்புகளை அதிகமாக வெளிப்படுத்தினால் அவனுக்கு அதிர்ஷ்டம் தேடி வரும்.

அண்ணன் - ஸ்தாபனத்திலிருந்து தனிமனிதனிடம் போகும்பொழுது தெளிவு குறைகிறது. எப்படிப் பணம் வரும்? எங்கிருந்து வரும்? தானே உற்பத்தியாகுமா? என்ற கேள்விகள் எழும்.

தம்பி - இதற்கடுத்தாற்போன்ற இடமும் உண்டு. அது goodwill, நல்லெண்ணம். அதை விளக்குவது சிரமம். தனிமனிதனுடைய நல்லெண்ணமும், ஸ்தாபனத்தின் உயர்ந்த பண்புகளும் ஒன்றே என்பது புரியாது. ஸ்தாபனம் உயர்ந்த பண்புகளால் எப்படிப்பணத்தை உற்பத்தி செய்யும் என்பதும் புரியாது.

அண்ணன் - கல்வி, மொழி ஆகியவை இனி உலகில் அழியாது என்று கூறலாம். அவை தானே மரம்போல வளரும். இனி தண்ணீர் ஊற்ற வேண்டாம் என்பது புரியும்.இனி அமெரிக்காவில் பணப்பஞ்சம் வாராது என்றும் ஏற்றுக்கொள்வார்கள். பணம் இனிமேல் தானே பெருகும் என்பது அவ்வளவு எளிதாகப் புரியாது. பணம் பெருகும் என்றால் வட்டி மூலம் பெருகும் என்பது சரி. பணம் பெரும்பணமானால், ஒரு வீடு 5 இலட்சம் என்றால் அதைப் பணக்காரன் 4½ இலட்சத்திற்கு, வாங்குவான் என்பது அனைவருக்கும் தெரியாது. பணக்காரனுக்குத் தெரியும். பணக்காரன் அதிக விலைக்கு வாங்குவான் என்று சாதாரண மக்கள் நினைப்பார்கள். பணமிருந்தால், காரியங்கள் அந்தஸ்தால் செலவில்லாமல் நடக்கும் என்பதும் புரியும்.அதற்கு மேல் புரியாது.

தம்பி - படிப்பு அளவுகடந்து போனால் அறிவு தானே விருத்தியாகும் என்பதை ஓரளவு ஏற்பார்கள். பாட்டும் அப்படி, பதவியும் அப்படியே என ஓரளவு மனம் ஏற்கும். பணமும் அப்படியே என்றால்,

அண்ணன் - எப்படிப் பணம் தானே பெருகும்? புரியவில்லை என்பார்கள்.

தம்பி - உளறுவதாகக் கூறுவார்கள்.

அண்ணன் - செடிக்கு, பூமியில் உள்ள நீரை எட்ட முடியாதவரை தண்ணீர் ஊற்றுகிறோம். வேர் வளர்ந்து, பூமியில் உள்ள நீர் மட்டத்தைத் தொட்டபின் தண்ணீர் ஊற்றினாலும் ஊற்றாவிட்டாலும் தானே வளர்வது போல், கல்வி, மொழி வளர்கிறது என்று புரிவது கஷ்டம்.

தம்பி - கல்வியும் மொழியும் இனி உலகத்தில் அழியாது எனப் புரியும். ஏன் அழியாது என்று தெரிவது கஷ்டம். விளக்குவதும் கஷ்டம்.

அண்ணன் - இது ஆன்மீக உண்மை.

தம்பி - ஆன்மீகத்தை எப்படி லௌகீகமாக விளக்குவது?

அண்ணன் - அறிவு என்பது நாட்டில் அஸ்திவாரத்தில் பூமிக்கடியில் நீரிருப்பது போலிருக்கிறது. நாம் படிப்பால் பெறும் அறிவு செயற்கை முறையான அறிவு. செயற்கையாக வளரும் அறிவு இயற்கையான அஸ்திவாரத்தைத் தொடும்வரை தண்ணீர் ஊற்றவேண்டும்.

தம்பி - அறிவு நாட்டில் ஆழத்திலுள்ளது. ஆத்மாவில் உள்ளது என்பதைத் தயாராக ஏற்கமாட்டார்கள். ஆனால் சொல்லலாம். பணம் நாட்டில் இயற்கையாக ஆழத்திலுள்ளது என்று எப்படிச் சொல்வது?

அண்ணன் - அறிவு உண்டு என்று ஏற்றுக்கொண்டால், அறிவே பணம் என ஏற்பது கடினமென்றாலும், ஏற்கலாம் என எதிர்பார்க்கலாம்.

தம்பி - செயற்கையாக இதுவரை பணம் சம்பாதித்தோம். பணம் பெருகிவிட்டதால் பணம் அதன் இயற்கை அஸ்திவாரத்தை இப்பொழுது எட்டிவிட்டது.

அண்ணன் - மொழி இனி உலகில் அழியாது, தானே வளரும் என்பதும் ஒரே கருத்து.

தம்பி - இதை ஏற்பதும், ஏற்றபின் தன் சொந்த வாழ்வில் அது நடக்கும் என்பதை அறிவதும் எவ்வளவு எளிது என்று முயன்றால்தான் தெரியும்.

அண்ணன் - ஆத்மா உள்ளே இருக்கிறது. ஆத்மாவே ஞானம். ஞானம் மொழியாக வெளிப்படுகிறது. எனவே மொழி, கல்வியின் அஸ்திவாரம் உள்ளே ஆத்மாவிலுள்ளது எனலாம். அறிவு பணம் சம்பாதிப்பதால், ஞானம் பணத்தின் அஸ்திவாரம் என்றுக் கூறலாம்.

தம்பி - உலகில் பணம் ஏற்பட்டது செயற்கை முறை. உணவு, உடை, வீடு, கல்வி, சேவை எல்லாம் செயற்கையாக மனிதன் ஏற்படுத்தியதுபோல் பணமும் செயற்கையாக ஏற்பட்டது. செயற்கையான மேல்மன வாழ்வு இயற்கையான அதன் அஸ்திவாரத்தை வளர்ந்துத் தொட்டால், அதன்பிறகு அது தானே வளரும்.

அண்ணன் - பணம் இன்று உலகில் அந்நிலையை எட்டிவிட்டது என்பதைக் கேட்பவர் ஏற்றுக்கொள்வதாக வைத்துக் கொள்வோம். இங்கு விளக்க வேண்டிய விஷயங்கள் பல இருந்தாலும், அவற்றைப் பிறகு சொல்லலாம்.

தம்பி - தனி மனிதனின் அதிர்ஷ்டம் எப்படி வருகிறது என்று சொல்லி, இவையிரண்டையும் இணைத்துப் பார்ப்போம், சொல்லுங்கள்.

அண்ணன் - உலகம் பணத்தைப் பெருக்கிய பின், தனி மனிதன் பெறுவான் என்பது சுலபமாகக் கூறக்கூடியது.

தம்பி - ஒரு புத்தகம் எழுதினால், அது வெளிவந்தபின் அனைவருக்கும் கிடைப்பதுபோல் அது எளிமையானது.

அண்ணன் - புத்தகம் வெளிவருமுன் அதைப் படிக்கவேண்டும் என்பது நம் பிரச்சினை. புத்தகம் வெளிவர 1 வருஷமாகலாம், 10 வருஷங்களும் ஆகலாம், வெளிவராமலுமிருக்கலாம்.பணத்தைப் பெருக்க சமூகம் திறன் பெறுவது 5 அல்லது 50 வருஷங்களில் நடக்கலாம். நடக்காமலும் போகலாம். தனி மனிதன் இப்பொழுதே பெற முடியும்,வழியுண்டு.

தம்பி - ஆசிரியர் தெரிந்தவரானால், அல்லது அவர் ஸ்தாபனத்துடன் நாம் தொடர்புகொள்ள முடியுமானால், ஒரு பிரதி பெற்றுப் படிக்கலாம். அதுபோல் இது முடியுமா?

தொடரும்.....

****


 


 book | by Dr. Radut