Skip to Content

06.லைப் டிவைன் - கருத்து

The Life Divine கருத்து

Evolution can be speeded up, but no step can be escaped.

பரிணாமத்தைத் துரிதப்படுத்தலாம், எந்தக் கட்டத்தையும் தவிர்க்க முடியாது.

. இது பரிணாமத்திற்கும், சமூக முன்னேற்றத்திற்கும், எந்தச் சாதனைக்கும், வாழ்விற்கும் பொதுவான விதி. அடிப்படையான விதியுமாகும்.

. புத்தகம் அச்சடிக்க வேண்டும் என்றால் எழுத வேண்டும், டைப் செய்ய வேண்டும், கம்போஸ் செய்ய வேண்டும், அச்சடிக்க வேண்டும், பைண்டிங் செய்ய வேண்டும் என்று ஏராளமான கட்டங்கள் உண்டு.

. 1 மணி நேரத்தில் 20,000 பேப்பர் பிரதிகள் அச்சடிக்கும் மெஷின் 100 ஆண்டுகட்குமுன் வந்துவிட்டது. என்றாலும் வேகத்தைக் கூட்டலாம், எந்தக் கட்டத்தையும் விட முடியாது.

. வீடு கட்டுவதானாலும், மாநாடு நடத்துவதானாலும், ஆப்பரேஷன் செய்வதானாலும் விதி ஒன்றே.

. உலகம், காலத்தால் இடத்தில் இயங்குகிறது.

. அதனால் காலம் மாறும் நேரம் காலத்தைச் சுருக்கலாம்.

. காலம் சுருங்கினால் இடம் சுருங்கும்.

. காலம் சுருங்கினால், கட்டம் தவிர்க்கப்பட முடியாது.

. கட்டங்கள் அமைப்பு (structure).

. காலம் செயல் நிகழும் லோகம்.

. அமைப்பை மாற்ற பரிணாமமே மாறவேண்டும்.

. அது இந்த சிருஷ்டிக்குரியதன்று.

. நரசிம்மராவ் நேரடியாகப் பிரதமராகலாம். ஆனால் MPயாக தேர்ந்தெடுக்கப்படுவதைத் தவிர்க்க முடியாது. அது இந்திய ஜனநாயகப் பரம்பரைக்கு நாம் செலுத்தும் மரியாதை.

. எந்த வயதிலும் விட்ட படிப்பைத் தொடரலாம். ஆனால் விட்ட இடத்தினின்றுதான் ஆரம்பிக்க வேண்டும்.

. காலம் கடுமையானது. பரிணாமம் சக்தி வாய்ந்தது. காலத்தையும் கடந்து செல்லவல்லது பரிணாமம்.

. அமைப்பு ஆண்டவனுடையது. மனிதனாக ஆண்டவனே பிறந்தாலும் மனிதச் சட்டப்படியே ஆண்டவனும் வாழவேண்டும். அவதாரப் புருஷன் என்பதால் அந்தச் சட்டத்தை மீற முடியாது.

****


 

ஸ்ரீ அரவிந்த சுடர்

நெடுநாள் நீடித்த காரியம் முடியும்பொழுது, நாம் ஒரு விஷயத்தை அறிகிறோம். அது உணர்வைப் பற்றியதாகவோ,நோக்கத்தைப் பற்றியதாகவோ இருக்கும்.

அனுபவம் அறிவில் முடியும்.


 


 

புதிய வெளியீடு

 

ரிஷிகள் கண்ட பிரம்மம்

 

விலை : ரூ.150/-


 


 


 


 


 



book | by Dr. Radut