Skip to Content

04.அன்பர் கடிதம்

அன்பர் கடிதம்

ஓம் நமோ பகவதே ஸ்ரீ அரவிந்தாய!

நான், என் குடும்பத்தினர் அனைவரும் அன்னையின் ஆசீர்வாதத்தாலும், அனுக்கிரஹத்தாலும் பாதுகாக்கப்பட்டும் பல நன்மைகளைப் பெற்றும் வருகிறோம்.

1997-ஆம் ஆண்டு அமெரிக்காவில் இருக்கும் என் சகோதரர், நாங்கள் அமெரிக்கா செல்ல visa papers அனுப்பியிருந்தார். ஆனால் visa interviewவில் எங்களது visa மறுக்கப்பட்டுவிட்டது. எங்களுக்கு visa கிடைக்கவில்லை என்று அறிந்தவுடன் என் சகோதரர் மிகவும் மனம் வருந்தினார். அதன் பிறகு 1999-இல் என் தாய், தந்தை,மகள் மற்றும் எனக்கும் மறுபடியும் sponsor papers அனுப்பியிருந்தார். இம்முறை எங்களுக்கு visa கண்டிப்பாகக் கிடைத்துவிடும் என்ற நம்பிக்கையில் அவர் airticketகூட book செய்துவிட்டார். மையத்திற்குச் சென்று ஸ்ரீ அன்னையிடம் பிரார்த்தனை செய்துவிட்டு April-'99 முதல் வாரத்தில் American consulateஇல் visa interviewக்குச் சென்றோம்.

ஸ்ரீ அன்னையிடம் மிகவும் ஆத்மார்த்தமாக வேண்டிக்கொண்டு, அன்னையின் படத்தை, நான் எடுத்துச் சென்ற fileக்குள் வைத்துச் சென்றேன். consulate வாசலில் திடீரென்று,உள்ளே passport, file தவிர வேறு எதுவும் எடுத்துச் செல்லக்கூடாது என்று கூறியதால் சற்று குழப்பம் ஏற்பட்டு வரிசையில் நின்றவர்கள் முன்னும் பின்னும் நகர்ந்ததால் என் கையிலிருந்த fileஐத் தட்டிவிட்டார்கள். அதனுள் இருந்த ஸ்ரீ அன்னையின் படம் தவறி கீழே விழுந்துவிட்டது. உடனே பாய்ந்து அதை எடுத்துக் கண்களில் ஒற்றிக்கொண்டேன். ஏனோ மனம் மிகவும் சங்கடமாகிவிட்டது. ஏனம்மா இப்படியெல்லாம் நடக்கிறது என்று வருத்தப்பட்டேன். இந்த முறை என் பெற்றோருக்கு மட்டும் 2 மாதத்திற்கான விசா கிடைத்தது. எனக்கும் என் மகளுக்கும் reject ஆகிவிட்டது. எங்களுக்கு என்ன செய்வதென்றே புரியவில்லை. அன்னையிடம் வேண்டிக்கொண்டும் இப்படியாகிவிட்டதே என்று வருந்தி, என் பெற்றோருக்கு மட்டும் visa fees செலுத்திவிட்டு வந்துவிட்டோம். இவ்வாறெல்லாம் நடந்தபோதிலும் மனதுள் அன்னை எனக்கு வேண்டியதைக் கண்டிப்பாகச் செய்து கொடுப்பார்கள் என்ற திடமான நம்பிக்கையிருந்தது. எப்படி என்று தெரியவில்லை, ஆனால் அமெரிக்கா கண்டிப்பாகச் செல்வோம், என்ற நம்பிக்கை மட்டும் உள்ளுக்குள் இருந்துகொண்டேயிருந்தது. வீட்டிற்கு வந்து consulateஇல் நடந்தவற்றை என் சகோதரருக்குத் தெரிவித்தோம். அவருக்கு மறுபடியும் ஓர் ஏமாற்றம். என் மகளை தேற்றுவதும் கடினமாகிவிட்டது. வழக்கம்போல் அடுத்த நாள் அலுவலகம் சென்றுவிட்டேன். மதியம் மூன்று மணியளவில் அலுவலகத்திற்கு எனது வீட்டிலிருந்து phone call. என் அம்மா, "உன்னை நாளை visa interviewக்கு வரச்சொல்லியிருக்கிறார்கள், உடனே கிளம்பி வா'', என்று சொன்னார்கள். எனக்கு ஒன்றும் புரியவில்லை. நேற்றுதான் reject செய்தார்கள். இன்று வரச்சொல்கிறார்களே, அன்னையின் திருவிளையாட்டில் இதுவும் ஒன்று என்று எண்ணி வீட்டிற்குச் சென்றேன்.

எங்களது visa reject ஆனது குறித்து என் சகோதரர் consulate generalக்கு ஒரு email அனுப்பியிருந்தார். அன்னையின் அருளால் consulate அதிகாரிகள் மிக அதிசயமாக எங்களது caseஐ மறுபரிசீலனை செய்து என்னை மீண்டும் அழைத்திருந்தார்கள். மறுநாள் எங்கள் இருவருக்கும்கூட visa கிடைத்துவிட்டது. ஸ்ரீ அன்னையின் அருளை நினைத்து மெய்சிலிர்த்து மனம் நெகிழ்ந்துவிட்டேன். எங்களுக்கு இரண்டு மாதங்கள் Americaவில் இருப்பதற்கான விசா வழங்கினார்கள்.

பத்து தினங்கள் கழித்து நாங்கள் நால்வரும் அமெரிக்கா செல்ல புறப்பட்டோம். ஏர்போர்ட்டில் நமது டிக்கெட்டுகளைக் காண்பிக்கும் இடங்களில் formal question "நீங்கள் எத்தனை பேர்?'' என்று கேட்பார்கள். உடனே நான் மனதுள் '5' என்று சொல்லிவிட்டு, பிறகு "நான்கு பேர்'' என்று கூறுவேன். அதாவது அன்னையையும் சேர்த்து நாங்கள் ஐந்து பேர் அல்லவா? ஏரோபிளேனில் ஏறியதும் முதலில் Motherக்கு seat offer பண்ணிவிட்டுத்தான் பிறகு நான் அமர்ந்துகொள்வேன். இப்படி எங்களது அமெரிக்கா பயணத்தை ஆரம்பித்து நியூயார்க் கென்னடி ஏர்போர்ட்டில் இறங்கினோம். 1½ மாதம் தங்கப்போகிறோம் என்று நினைத்துக்கொண்டிருந்த எங்களுக்கு அங்கு மற்றும் ஓர் அதிசயம் காத்துக்கொண்டிருந்தது.

ஏர்ப்போர்ட் இமிகிரேஷன் சென்டரில் எங்களது பாஸ்போர்ட்ஐப் பெற்றுக்கொண்டு, "எவ்வளவு நாட்கள் இங்கு இருக்க உங்களுக்கு ஆசை?'', என்று கேட்டுக்கொண்டே சிரித்த முகத்துடன் அந்த அதிகாரி நாங்கள் அங்கு 6 மாதங்கள் தங்க அனுமதி அளித்துவிட்டார். எதையுமே அபரிமிதமாக வழங்கும் ஸ்ரீ அன்னையின் கருணையை எண்ணி நாங்கள் பூரித்துவிட்டோம். நியூயார்க் மாநகரம், Niagara Falls, Florida Disneyland, Washington போன்ற இடங்களை நிதானமாகப் பார்த்துவிட்டு சென்னை நல்லபடியாகத் திரும்பினோம். இவ்வாறு தொடர்ந்து பல நன்மைகளைச் செய்து, நமக்குத் துணையாக என்றென்றும் இருந்துவரும் ஸ்ரீ அன்னைக்கு நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

ஸ்ரீ அன்னையின் ஆசீர்வாதமும், அனுக்கிரஹமும் எனக்கும், என் குடும்பத்தினருக்கும் எப்பொழுதும் கிடைக்கவேண்டும் என்று வேண்டிக்கொண்டு இக்கடிதத்தை முடிக்கிறேன்.

****


 



book | by Dr. Radut