Skip to Content

03.லைப் டிவைன்

"ஸ்ரீ அரவிந்தம்''

                                       லைப் டிவைன்

                                             (சென்ற இதழின் தொடர்ச்சி....)                                      கர்மயோகி

 

XII. Delight of Existence : The Solution

            Page No.102, Para No.6

12. ஆனந்தம் - விளக்கம்

We can look at World-Existence differently.

உலகை நாம் வேறு வகையாகக் காணலாம்.

It can be in relation to the self-delight of being.

ஜீவனின் சுய ஆனந்தக் கண்ணோட்டத்தில் அதைக் காணலாம்.

It is an eternally existing being.

அது என்றும் நிலையான ஜீவன்.

We may regard it as Lila.

அதை லீலை எனலாம்.

We may describe it as Lila.

அதை லீலை என விளக்கலாம்.

Lila is a play.

லீலை என்பது ஆட்டம்.

It is the child's joy, the poet's joy.

குழந்தையின் ஆனந்தம், கவியின் ஆனந்தம் போன்றது அது.

It is the mechanician's joy of the Soul of things.

கருமானின் ஆனந்தம் ஆத்மாவை அனுபவிப்பது போன்றது.

The Soul of things is eternally young.

ஆத்மா அழியாத இளமையுடையது.

It is perpetual, inexhaustible.

நிரந்தரமானது, முடிவற்றது.

It creates and recreates Himself in Himself.

அவனை அவனுள் படைத்து, மீண்டும் படைக்கிறது.

It does so for the sheer bliss of self-creation.

சிருஷ்டியின் ஆனந்தத்திற்காக அப்படிச் செய்கிறது

Self-creation is self-representation.

சுய-சிருஷ்டி சுய பிரதிநிதித்துவம்.

Himself the play.

அவனே ஆட்டம்.

Himself the player.

அவனே ஆடுபவன்.

Himself the playground.

அவனே அரங்கம்

There are three generalisations.

இவை மூன்று சூத்திரங்கள்.

They are the play of existence.

அவை சிருஷ்டியின் விளையாட்டு.

It is a play in its relation to the eternal.

அனந்தனுடன் ஆடும் ஆட்டமது.

The eternal is stable.

அனந்தன் நிலையானவன்.

It is the immutable Sachchidananda.

இது சச்சிதானந்தத்தின் அழியாத ரூபம்.

They start from three conceptions.

அவை மூன்று கருத்துகளில் ஆரம்பிக்கின்றன.

They are Maya, Prakriti, Shakti.

அவை மாயை, பிரகிருதி, சக்தி.

It is our philosophic system.

அவை நம் நாட்டுத் தத்துவங்கள்.

They are mutually contradictory.

அவை முன்னுக்குப்பின் முரணானவை.

In reality they are perfectly consistent with each other.

உண்மையில் அவை சுமுகமானவை.

They are complementary and necessary.

ஒன்றுக்கு மற்றது அவசியமானது, பொருத்தமானது.

It is so in their totality.

அவற்றின் முழுமையில் அப்படியுள்ளன.

An integral view of life reveals it.

வாழ்வை முழுமையாகக் கண்டால் அது புரியும்.

It is an integral view of the world.

உலகை முழுமையாகக் கண்டாலும் அது புரியும்.

We are part of the world.

நாம் உலகின் பகுதி.

It is a view of movement of Force.

இது சலன சக்தியின் பார்வை.

It is quite obvious.

இது தெளிவானது.

We can penetrate that Force.

நாம் சக்தியை ஊடுருவலாம்.

It is only an appearance.

இது வெறுந்தோற்றம்.

It is a mutable rhythm.

இது மாறக்கூடிய அலையோசை.

The rhythm is constant.

அலையோசை நிலையானது.

It is a creative consciousness casting up.

சிருஷ்டித்திறனுள்ள ஜீவியம் அச்சிடுவது.

It projects phenomenal truths.

இது தோற்றத்தின் சத்தியத்தைக் காட்டுகிறது.

They are truth of its own being.

அவை அதன் ஜீவனுடைய சத்தியம்.

It is an infinite and eternal being.

அது அனந்தமான, கடந்த ஜீவன்.

It is a rhythm.

அது அலையாக எழும்.

In its essence it is self-representation.

தன்னைத் தனக்குக் காட்டுவது அதன் சாரம்.

It is the cause and purpose of a play.

அதுவே காரணம், அதுவே இலட்சியம்.

It is the play of infinite delight.

அனந்தமான ஆனந்தத்தின் ஆட்டம் அது.

It is the delight of being.

அது ஜீவனுடைய ஆனந்தம்.

It is ever busy.

அது எப்பொழுதும் சுறுசுறுப்பானது.

Its self-representations are innumerable.

தன்னைத் தனக்குக் காட்டுவது ஏராளம்.

This is a triple view.

இது மூவகையான பார்வை.

Or it is a triune view.

மூன்றான ஒன்று.

It must be the starting point.

இது ஆரம்பம்.

All our understanding must begin here.

இதிலிருந்தே நாம் புரிந்துகொள்ள முயலவேண்டும்.

That is the understanding of the universe.

அது பிரபஞ்சத்தை அறிவதாகும்.

Page No. 103 Para No. 7

 

There is the delight.

ஆனந்தம் இருக்கிறது.

It is eternal and immutable.

அது சலனமற்ற அழியாத ஆனந்தம்.

It is the delight of being.

அது சச்சிதானந்தம்.

It moves into the delight of becoming.

அது பிரகிருதியின் ஆனந்தமாகிறது.

It is infinite and variable.

அது அனந்தம், ஆயிரம் ரூபம் கொண்டது.

It is the root of the whole matter.

அதுவே முழுமுதற் காரணம்.

We have to conceive of a Being.

நாம் ஜீவனை மனத்திலிருத்த வேண்டும்.

It is one indivisible conscious Being.

அது அகண்டம், தன்னையறியும் ஜீவன்.

It is behind all our experiences.

நம் அனுபவத்திற்குப் பின்னாலுள்ளது அந்த ஜீவன்.

Its delight is inalienable.

அந்த ஆனந்தம் நீங்காதது.

It supports the experience.

அது அனுபவத்தை ஆதரிக்கிறது.

It is this that effects the movement.

இது சலனத்தை உற்பத்தி செய்கிறது.

It is a movement of variations.

சலனம் மாற்றங்களை உற்பத்தி செய்யும்.

It is a variation of pleasure, pain and indifference.

சந்தோஷம், வலி, பராமுகம் என அவை மாறித் தோன்றும்.

They are our sensational existence.

நமது உணர்ச்சிமயமான வாழ்வு அது.

That is our real self.

அதுவே நம் உண்மையான ஜீவன்.

The mental being is subject to the triple vibration.

இவ் மூவகை அனுபவத்திற்குட்பட்டது மனம்.

It is only our representation of our real self.

நமது உண்மையான ஜீவனை இது பிரதிபலிக்கிறது.

The mental being is put in front.

மனத்தை முன் வைக்கிறோம்.

It is for the purposes of sensational experience.

உணர்வான அனுபவத்திற்காக ஏற்பட்டது இது.

It is a first rhythm of our consciousness.

நம் ஜீவியத்தின் முதலலை அது.

Our consciousness is divided.

மது ஜீவியம் கண்டம்

It is the response of our consciousness.

நமது ஜீவியத்திற்குரிய பதிலாகும்.

It is a reaction too.

இது எதிர்ப்புமாகும்.

Our contact with the universe is multiple.

நாம் பிரபஞ்சத்தைப் பல்வேறு இடங்களில் சந்திக்கிறோம்.

Contact creates response.

தொடர்பு பதிலெழுப்பும்.

It is an imperfect response.

பதில் குறையுடையது.

It is a tangled and discordant rhythm.

சிக்கலான அலையோசையின் பிணக்கு.

It is a preparation.

இது தயாரிப்பு.

It is a prelude.

இது ஆரம்பம்.

The play of the conscious Being in us is full.

சத்புருஷனின் லீலை நம்முள் முழுமையானது.

It is unified.

அது ஒன்றுபட்டது.

Our symphony is true and perfect.

நமது இசை உண்மை, குறையற்றது.

This is not that.

இது அது அன்று.

We can enter into sympathy with One.

நாம் ஏகனுடன் உணர்வால் இணையலாம்.

We can do so in all variations.

இதை ஆயிரம் வகையாகச் செய்யலாம்.

We can attune ourselves to it.

நாம் இதனுடன் இசைவாகச் செயல்படலாம்.

It is the absolute and universal diapason.

இது பிரபஞ்ச பிரம்ம ரூபம்.

We can be aware of that too.

நாம் அதையும் அறியலாம்.

                                          Contd...

                                                       தொடரும்....

 ****

ஸ்ரீ அரவிந்த சுடர்

எதை நம்மால் சாதிக்க முடியவில்லையோ, அது நம் மனத்தை ஆட்கொள்ளக் கூடியது.

முடியாதது மனத்தை ஆட்கொள்கிறது.

ஸ்ரீ அரவிந்த சுடர்

மனிதனுடைய ஆன்மா, பிரபஞ்சம் முழுவதும் பரவ முயற்சி செய்வது நன்றியறிதல் எனப்படும்.

ஜீவாத்மா பிரபஞ்ச ஆத்மாவாவது இறைவனுக்கு நன்றியறிதலாகும்.


 ****


 


 


 


 


 


 


 


 


 


 


 


 book | by Dr. Radut