Skip to Content

13.ரூ.5000/- கைமாற்று

ரூ.5000/- கைமாற்று

ஆபீசில் உடன் வேலை செய்பவர் 5000 ரூபாய் கைமாற்று கேட்டார். கொடுக்கப் பிரியமில்லை, கையில் பணமும் இல்லை, என்ன பதில் சொல்வது எனத் தெரியவில்லை. எந்தக் கோணத்திலும் யோசனை போகவில்லை. என்ன இருக்கிறது யோசனை செய்ய எனத் தெரியவில்லை. அன்னையை அழைத்தால் மனம் சஞ்சலம் நீங்குகிறது, அமைதி வருகிறது. கேட்டவருக்கு என்ன பதில் என விளங்கவில்லை. ஒன்றும் புரியாத நிலையில், "இரண்டொரு நாளில் பதில் சொல்கிறேன்'' என்று கூறிவிட்டு வீட்டிற்கு வந்தார்.

வீட்டிற்கு வந்த பின்னும் பதில் தோன்றவில்லை. பிரச்சினை மனதில் எழுந்தால் அன்னையை அழைக்கிறார். அமைதி வருகிறது. பதில் கிடைக்கவில்லை. கேட்ட தவணை முடியும் நேரம் வந்துவிட்டது. ஆபீசுக்குப் போனால் கேட்டவருக்கு என்ன பதில் கூறுவது எனத் தெரியவில்லை. போன் மணியடிக்கிறது. அவராக இருக்குமா எனப் பயம். அவரேதான்! "நான் 50,000 ரூபாய்க்கு பாங்க் கடன் போட்டிருந்தேன்.அது சாங்ஷனாகிவிட்டது என பேங்கிலிருந்து செய்தி வந்தது. நான் கேட்ட 5000 ரூபாய் தேவையில்லை'' என அவர் கூறினார்.

என்ன செய்வது எனத் தெரியாத நிலையில் மனம் செயலற்றுப் போனது; நாம் அன்னையுடன் ஒத்துழைப்பது; அதன்மூலம் அன்னை செயல்பட்ட விதம் இது.

****



book | by Dr. Radut