Skip to Content

12.அன்னையை அறிவது பாக்கியம், அதிர்ஷ்டம்

அன்னையை அறிவது பாக்கியம், அதிர்ஷ்டம்

அன்னை நம்மிடையே வாழ்ந்தபொழுது உலகம் அவரை அறியவில்லை. அவரை அறிவது ஆன்மாவிற்கு அதிர்ஷ்டம், உலக வாழ்வில் ஒரு பாக்கியம் என மக்கள் அறியவில்லை.

கட்டிட காண்ட்ராக்டர் ஒருவர் ஸ்கூட்டர் விபத்தில் சிக்கி கோமாவில் கவர்ன்மெண்ட்ஆஸ்பத்திரியிலிருக்கிறார். கை, கால் அசைவிருக்கிறது, கண் பார்க்கிறது, நினைவில்லை. எவரையும் அடையாளம் தெரியவில்லை. ஆந்திரா மந்திரி P.V.G. ராஜூ பஞ்சாப் போனபொழுது விபத்தால் கோமாவிலிருந்தார். அவர் குடும்பத்தார் ஒருவர் ஆசிரமத்திலிருந்ததால் மந்திரிக்கு அன்னையைப் பற்றி சற்று தெரியும். கோமாவில் எதையும் அறியமுடியாத நிலையில் அன்னை ஸ்ரீ அரவிந்தர் படங்களை அவர் அடையாளம் கண்டுகொண்டார்.

சென்னையிலுள்ள இந்த காண்ட்ராக்டருக்கு அன்னை தெரியாது. விபத்து ஏற்பட்டபின் மனைவிக்கு ஒருவர் அன்னையைப் பற்றிச் சொல்லி அவர் மையத்திற்கு அழுதுகொண்டு வந்தார். அன்று March 26. அவருக்கு ஆறுதல் கூறி, "5 மாதம் கோமாவிலிருந்தாலும், பிரார்த்தனை பலிக்கும்'' என்று வீட்டை சுத்தம் செய்து, சாம்பிராணி போட்டு, பிரார்த்திக்கச் சொல்லி அனுப்பினார்கள். 5ஆம் நாள் கணவர் கண் விழித்துப் பேசத் தொடங்கினார். அன்று ஆஸ்பத்திரியிலிருந்து வீட்டுக்கு அழைத்து வந்தனர்.

April 24 தரிசனத்தன்று கணவரும், மனைவியும் மையத்திற்கு வந்தனர். மே முதல் வாரம் கணவர் வேலைக்குப் போய்விட்டார்.

****



book | by Dr. Radut