Skip to Content

11.சாவித்ரி

"சாவித்ரி"

P.40 Ran like dream – smiles through meditating vasts:

கனவின் புன்னகை தியானப் பரப்பில் தவழ்ந்தது
 

. தங்கமான நேரத்தின் தழலில் மலர்ந்து எழுந்தது.

. அனந்தத்தின் அகண்ட பரப்பில் பரவும் வெண்மையான சூரிய ஜோதி.

. எல்லையற்ற பிரம்மத்தின் ஆடையற்ற நளினம்.

. இருண்ட இதயங்களில் இடம்பெறும் கருத்துகள்.

. நிலையற்ற கோட்டை நிழலாகத் தொடர்ந்தது.

. நிலையானதை நிலையற்ற தன் வாயிலாகக் காண்பது.

. பிரபஞ்ச ஞானத்தின் பிரத்யேகமான மந்திரவாதி.

. அனந்தமான சுதந்திரத்திற்கு ஏற்படுத்திய எல்லை.

. இயற்கைச் சின்னங்களின் இனிய அணிவகுப்பு.

. வாழ்வின் தொடர்ந்த போராட்டமான நிகழ்ச்சிகள்.

. தற்செயலான நிகழ்ச்சிகள் சட்டமாகத் திருவுருமாறின.

. குறி அறிகுறியாகி கூட்டமாகிக் குவிந்த பிரபஞ்சம்.

. அற்புதமான ஆச்சரியம் சிக்கலான சிறப்பு.

. ஆத்மாவின் ஜடமான முகமூடியின் திருநடனம்.

. பிரபஞ்சத்தின் திருவுள்ளம் தெளிவு பெற்றது.

. சொந்த ஏற்பாட்டின் சுமுகமான ஒழுங்கு.

. ஆன்மாவின் அகண்ட வீச்சு நிர்வாகத்தை ஆரம்பித்தது.

. மாயையான கலையின் மகிமை.

. சொர்க்கத்தின் தர்க்க விசாலம்.

. காலம் கடந்த நிலையில் செய்யும் மந்திரம்.

. ஊழிக்காலம் உணராததைச் சுட்டிக்காட்டிற்று.

பிரம்மம் தான் தேடும் இன்பத்தை அனுபவிக்க மனித மனத்தின் மருளின்று மகத்தான ஜோதியாக எழ முயலும்பொழுது உலகம் பொலிவு பெறுகிறது. பொலிவு பொருளாகத் தெரிகிறது. பொலிவாகவும் தெரியும் நேரம் உண்டு. சிதறிய மணிகளைச் சிந்தனை மணிகளாக்குவது காவியம். பகவான் ஸ்ரீ அரவிந்தர் மனதில் காவியம் அலைகளாக எழுந்தபடியிருக்கும். குளித்துவிட்டு வரும்பொழுது அவர் உதடுகள் அப்படி உதறிய மணித்துளிகள் பல. அவையெல்லாம் எழுத்திலில்லை. இருளை ஒளியாகவும், காலத்தைக் கடந்ததாகவும், சிக்கலைச் சிறப்பாகவும் இப்பக்கம் சாவித்திரியில் வர்ணிக்கிறது.

****

ஸ்ரீ அரவிந்த சுடர்

யோகம் பலிக்கும், இறைவனுக்குகந்தவனுக்கு ஆண்டவனின் அழைப்புள்ளது என்பதற்கு ஒரு முத்திரையுண்டு. வேலை முடிந்தபின் மனம் அவனை நாடுவதும், வேலையினூடே அவன் மனத்தில் எழுவதும் அந்த முத்திரைகள்.

முடிந்த வேலை நினைவைக் கொடுப்பது

இறைவனுக்குரியவன் என்ற முத்திரை.


 


 



book | by Dr. Radut