Skip to Content

09.அன்பர் கடிதம்

அன்பர் கடிதம்

ஸ்ரீ அரவிந்த அன்னையே சரணம்.

அன்புக் கடலான என் அன்னையே! தங்களின் கருணையே கருணை! நடக்கமுடியாத அதிசயத்தை நிகழ்த்தி காட்டியுள்ள அற்புதத்தை என்னவென்று சொல்ல!

கோவையில் என் பேத்தி தீபா (அவளும் தங்களை ஆராதனை செய்கிறவள்) தலைப் பிரசவத்திற்காகத் தங்களை வேண்டிக் கொண்டே, தங்களைத் துணைக்கு அழைத்துக் கொண்டே சென்றிருந்தேன்.

டாக்டர் சொன்ன டயம் தாண்டி சாதாரண செக்கப்புக்காக சென்றவர்கள் ஆஸ்பிட்டலில் தங்க, பின்பு நானும் துணைக்குச் சென்று தங்களை அழைத்துக் கொண்டேயிருந்தேன். விடிய விடிய இருந்த வலி விடிந்ததும் குறைந்தேவிட்டது. வீட்டிற்குப் போகலாம் நாலு நாள் ஆகலாமென்றனர். நான் கூறியது வேண்டாம், இன்றும் நாளையும் இங்கிருப்போம் என்பதை ஏற்றுக் கொண்டு மறுமுயற்சி செய்ததில் வலி ஏற்பட்டுவிட்டது. ஆனால் வழி சரியாக விசாலமாகாத காரணத்தால் 1½ மணிக்கு ஆகலாம் என்று கூறினார் டாக்டர். தங்களை இடைவிடாமல் அழைத்துக் கொண்டேயிருந்தேன். இன்று பிறக்கணும், இந்த நாள் நல்ல நாள் என்று வேண்டிக் கொண்டு சாப்பிடச் சென்ற ½ மணியில் வந்தவள் சிசுவின் சிரசு உதயம் கண்டு அவசரமாகத் துணைக்கு டாக்டரை அழைத்து பரபரப்புடன் செயல்பட, பேத்தியும் டாக்டருடன் ஒத்துழைக்க ½ மணிக்கும் குறைவான நேரத்தில் மதியம் 3.44க்குச் சுகபிரசவம், டாக்டர்களே ஆச்சரியப்படும் அளவில்.

பிரசவத்திற்குப் போகுமுன் தங்களின் blessing packet பேத்தியிடம் தந்துவிட்டேன். என் ஆனந்தத்தைச் சொற்களால் விவரிக்க இயலவில்லை. அப்படி ஒரு மனநிறைவு. கருணைக் கடலான என் அன்னையே நடக்க முடியாததை எளிதாக நடத்திக் காட்டும் என் அன்புக் கடலே சாஷ்டாங்கமாகத் தங்கள் திருவடியில் படிந்து நன்றி கூறிக் கொண்டேயிருக்கிறேன்.

திடீரென சோதனை, பிறந்த குழந்தைக்கு 2 நாட்களாக நீர் பிரியவே இல்லை. அனைவருக்கும் கவலை. டாக்டர் I.V. போடனும் என்றனர். சின்ன சிசுவுக்கு இப்படியொரு சிரமமா.

அன்னையே, நான் வந்து பிரசவம் பார்த்ததில் இப்படியொரு பிரச்னையா என மனமுருகித் தங்களையே வேண்டிக்கொண்டேன். இயற்கையாக நீர் பிரிந்து, தாயும் சேயும் நலமாக வீட்டில் சேர்ப்பிக்கனும் என்று.

சிசுவிற்கு ஆகாரம் தரும் நேரம் தங்களின் தாரக மந்திரத்தைச் சொல்லியே தருவேன். அதே போலச் சாதாரண நீர் எடுத்துத் தங்களை வேண்டிக் கொண்டு குழந்தைக்கு ஊட்டிவிட்டுத் தங்களை பிரார்த்தனை செய்து கொண்டேயிருந்தேன்.

அப்பப்பா அதிசயத்திலும் அதிசயம் 1 மணி நேரம் கூட ஆகவில்லை. குழந்தைக்கு மிகச் சரளமாக நீர் பிரிந்தது, பிறகு விட்டுவிட்டு. ஆனந்தத்திற்கு அளவேயில்லை. நான் சென்ற காரியம் சிறப்பாக அனைவருக்கும் சந்தோஷமளிக்கும் விதத்தில் தங்களருளால் நிறைவு அடைந்துவிட்டது. மனம் நிறைய நன்றி சொல்லிக்கொண்டே தாயையும் சேயையும் அவர்கள் வீட்டில் சேர்த்து அங்கிருந்தே (காலை) தங்களுக்குக் காணிக்கையைச் செலுத்திவிட்டு நிம்மதியாக வந்து விட்டேன்.

சரணம் அம்மா! சரணம் அம்மா!

****

 

Comments

அன்பர் கடிதம் para 3, line 3

அன்பர் கடிதம்

para 3, line 3 - வலிவிடிந்ததும் - வலி விடிந்ததும்

do.    do. 5 - வேண்டாம்,இன்றும்  - வேண்டாம், இன்றும்

do.    do.  9 - சென்ற½ - சென்ற ½

 book | by Dr. Radut