Skip to Content

07.சாவித்ரி

''சாவித்ரி"

 P.27. Into the immobile ocean of his calm.

ஹிருதய சமுத்திரத்தின் அனந்தமான அமைதி.

 இப்பக்கத்திலுள்ள இதரக் கருத்துகள் :

  • மனிதன் தன்னையே ஏமாற்றுபவன்.
  • உயிர்த்துடிப்பை உடன்பிறப்பில் காண்பான்.
  • ஒருவர் சந்தோஷம் உலகத்தின் சந்தோஷம்.
  • அலை அலையான கவலையும், ஆர்ப்பரிக்கும் ஆனந்தமும்.
  • எண்ணம் மனத்தில் ஒலியாக எழுந்தது.
  • ஒருவர் எண்ணத்தை உலகம் பிரதிபலிக்கும்.
  • உலகமே எண்ண அலையாக என்னுள் புகுந்தது.
  • ஆத்மா அடுத்த ஆத்மாவின் உறவை நாடியது.
  • உறவின் செறிவும், பாசத்தின் பிணைப்பும்.
  • தாமரை இலைத் தண்ணீரென விலகி நிற்கும் பாங்கு.
  • மந்திரமென மனம் மகிழ்ந்து நெகிழ்ந்தது.
  • மேக மண்டலத்தின் இசை மேலிருந்து தழுவியது.
  • வாழ்வின் அடிமைக்கு வலிய சுதந்திரம்.
  • ஆத்மாவின் அரவணைப்புக்குக் கூடிவரும் கூட்டாளி.
  • தசையும் நரம்பும் தவழ்ந்து வரும் சங்கீதம்.
  • மின்னெலெனத் தெறிக்கும் பூரிப்பும், புளகாங்கிதமும்.
  • ஆன்மாவின் அற்புதத்தை வெளியிடும் உடல்.
  • சுவர்க்க லோகத்தின் சுகமான சுவடுகள்.
  • மனித உடலைத் தாங்கும் அருளின் அற்புதங்கள்.
  • ஆழ்ந்த நித்திரையிலுள்ள ஆன்மாவின் அம்சங்கள்.

உலகை ஏமாற்ற முனையும் மனிதன் முடிவில் எவரையும் ஏமாற்ற முடியாது என்று காணும்பொழுது, மேலும் காண்பது "இதுவரை நான் என்னைமட்டும் ஏமாற்றியுள்ளேன்'' என்பதாகும். நம் வாழ்வு மேல் மனத்திற்குரியது. மனித வாழ்வு அடிமனத்திற்குரியது. மேல் மனம் தன்னையறியும், அடிமனம் அனைவரையும் அறியும். ஆபீஸில் 5.11 p.m. மணிக்கு ஒருவர் வீட்டிற்குப் போக நாற்காலியை விட்டு எழுந்தால், அவர் வளர்க்கும் நாய் அதுவரை வீட்டில் படுத்திருந்தது, 5.11க்கு எழுந்து வெளியே வந்து தெருக்கோடிக்கு வந்து எஜமானனுக்காகக் காத்திருக்கிறது. அவர் புறப்பட்டதை அவர் நாய் அறியும். ஒருவர் போனில் பேசினார். அவருடனிருந்தவர் கேட்பவர் மாமனாருக்கு வேறொரு போனில் ஒரு செய்தி சொல்லப் போனார். முதல்வர் போன் cut ஆயிற்று. மருமகனுக்கு, மாமனாரிடம் பேசுவது சூட்சுமமாகத் தெரிந்து அதனால் ஏற்படும் வெறுப்பு பேச்சை cut செய்கிறது. மருமகனுக்கு அடுத்தவர் மாமனாரிடம் பேசியது தெரியாது. நம் எண்ணங்கள் அடி மனத்தில் கலக்கும். உணர்வுகள் உறவாடும், உடல்களே அடி மனத்தில் இணைகின்றன என்பது ஆன்மீக உண்மை.

****

ஸ்ரீ அரவிந்த சுடர்

ஒரு காரியம் முடியும் என்று தெரிகிறது. அதை ஆர்வமாகப் பின்பற்றுகிறோம். அது முடிகிறது. சில சமயங்களில் முடிவதில்லை. மனம் தன் திறமைக்கேற்ப சாதிப்பதின் வழி இது.

மனத்தின் சாதனை நிலையற்றது.

***** 

Comments

 para starting from - உலகை

 

para starting from - உலகை etc.

line 11 - cutசெய்கிறது - cut செய்கிறது

 



book | by Dr. Radut