Skip to Content

04.அஜெண்டா

“Agenda”

 Mother never had a headache.

It came to Her to show itself.

Mother's hands, eyes, etc., are conscious.

Wanting to take two dozen papers, Her hands exactly picked up 24 sheets.

அன்னைக்குத் தலைவலியே வந்ததில்லை.

தன்னை அறிமுகப்படுத்திக்கொள்ள அன்னையிடம் தலைவலி வந்தது.

அன்னையின் கைகள், கண்கள், ஆன்ம விழிப்போடிருக்கின்றன.

இரண்டு டஜன் பேப்பர் எடுக்க விரும்பினால் அன்னையின் கைகள் 24 பேப்பரை எடுக்கும்.

ஜப்பானில் அன்னை இருக்கும்பொழுது ஒரு விஷ ஜுரம் அவரைத் தாக்கியது. அத்துடன் ஜப்பானை விட்டு அந்த ஜுரம் போய்விட்டது. அன்னையின் உடலை ஒரு விஷயம் - vibration - தீண்டினால், அது தவறானதானால் வலுவிழக்கும். உதாரணமாக ஒருவர் அன்னை மீது கோபப்பட்டால், உலகில் கோபம் வலுவிழக்கும். தம்மீது கோபப்படாதவரே ஆசிரமத்தில் இல்லை என்கிறார் அன்னை.

கண்ணும், கையும் ஆன்ம விழிப்புடனிருக்கும் என்றால் என்ன? ஒரு பொருள் வேண்டுமானால் நாம் அதைத் தேடுகிறோம். 2 வருஷத்திற்குமுன் ஒரு பேப்பரை ஒரு புத்தகத்தில் வைத்து அலமாரியில் அன்னை வைத்திருந்தால், இப்பொழுது அது எங்கிருக்கிறது என்று நினைவு வாராவிட்டால், அவர் கண் அப்புத்தகத்தின் மீது படும். கண்ணில் உள்ள ஆன்மா, அன்னை படித்த பேப்பரை நினைவு வைத்திருப்பதால், பார்வை நேரடியாக அதன்மீது விழும்.

போன மாதம் படித்த விஷயம் இப்பொழுது மீண்டும் பார்க்கவேண்டுமானால், அன்னை அப்புத்தகத்தைத் திறந்தால் அதே பக்கம் வரும். அது கைகளில் உள்ள ஆன்மா விழிப்பாக இருப்பதாகப் பொருள்.

  • ஒரு பொருளைக் கையில் எடுத்தால் அதன் எடையை நிறுக்காமல் கை அறிவது பயிற்சிக்குரியது என்று Life Divineஇல் பகவான் எழுதுகிறார்.
  • தொலைந்த சிறு பொருளை இருளில் தேடும்பொழுது காலில் தட்டுப்படும் அனுபவம் அன்பர்கட்குண்டு.
  • அன்பர்கள் அன்னை சம்பந்தமாக வேலை செய்யும்பொழுது நினைவு, கண், கை, கால், உடல், அதுபோல் செயல்படுவதைக் காணலாம்.
  • கலைஞர்கள் கை தாம் கண்ட காட்சிகளை நினைவிலிருந்து
  • எழுதும்.
  • சாவித்ரியைத் திறந்தால் நம் மனத்தில் உள்ள கேள்விகட்கு அதுபோல் பதில் சொல்வதை நாம் அனைவரும் அறிவோம்.

 

****

ஸ்ரீ அரவிந்த சுடர்

உலகத்தை அற்புதமாகக் காண, பரிணாமத்தை விட உயர்ந்த நிலையிலிருக்க வேண்டும்.

நிலையைக் கடந்தால் நிகழ்ச்சி மலரும். அதுவே அற்புதம்.

**** 

Comments

04.அஜெண்டாAfter para 3 - 2nd

04.அஜெண்டா

After para 3 - 2nd bullet point - கால் - காலில்

  do.         - 4th bullet point - நினைவிலி ருந்து  - நினைவிலிருந்து

 



book | by Dr. Radut