Skip to Content

02.லைப் டிவைன்

"ஸ்ரீ அரவிந்தம்"

லைப் டிவைன்

கர்மயோகி

XI. Delight of Existence : The problem

 Page No. 92 Para No. 3

11. ஆனந்தம் - கேள்வி

The Self-delight of Brahman is not limited.

பிரம்மத்தின் ஆனந்தத்திற்கு அளவில்லை.

Its self-being is still and motionless.

அதன்ஜீவன்அமைதியாக
அசையாமலிருக்கும்.

The stillness does not limit the self-delight.

அதன் அமைதி அதன் ஆனந்தத்திற்கு இடையூறு செய்யாது.

The force of consciousness throws itself into forms.

ஜீவிய சக்தி ரூபமாக வெளிவருகிறது.

It can do so in infinite forms.

அதுபோல் அளவில்லாத ரூபங்களெழும்.

Those forms endlessly vary.

அந்த ரூபங்கள் முடிவில்லாமல் மாறும்.

They revel in the flux.

ரூபங்கள் ரூபப்பிரவாகத்துள் திளைக்கும்.

The self-delight too behaves like that force.

அதன் ஆனந்தமும் சக்திபோல் செயல்படும்.

The flux is the mutability of itself.

சக்தியின் பிரவாகம் சக்தி அசைந்து மாறுவதால் எழுவது.

Numberless teeming universes represent them.

எண்ணற்ற பிரபஞ்சங்கள் சக்தியைப் பிரதிபலிக்கின்றன.

This is the creative play of Force.

இது சக்தியின் சிருஷ்டியான லீலை.

It looses itself forth and enjoys.

சிருஷ்டித்து ஆனந்தப்படுகிறது.

It is a variation of self-delight.

தன் ஆனந்தத்தின் மாறிய ரூபம் அது.

This is the object of this infinite movement.

அனந்தமான இச்சலனம் அதன் இலட்சியம்.

Page No. 92 , Para No. 4

We can put it in other words.

இதை வேறு வகையாகக் கூறலாம்.

Sachchidananda is

Existence-Consciousness-Bliss.

சத்-சித்-ஆனந்தம்

என்ற சச்சிதானந்தம் எனலாம்.

It is triune.

மூன்றும் ஒன்றில் அடங்கியது.

Its consciousness is creative in nature.

அதன் ஜீவியம் பிரகிருதியில் சிருஷ்டிக்கவல்லது.

Or, it is a self-expressive Force.

அல்லது, அது தன்னை வெளிப்படுத்தும் சக்தி எனலாம்.

It is capable of infinite variation.

முடிவில்லாமல் மாறும் குணமுடையது.

It varies in form and phenomenon.

ரூபத்தாலும், நிகழ்ச்சியாலும் மாறக்கூடியது அது.

Its self-conscious being enjoys the variation.

அதன் சுய-ஜீவன் புதியன படைப்பதில் திளைக்கிறது.

Its enjoyment is endless.

அதன் அனுபவத்திற்கு அளவில்லை.

Something follows.

இதற்கு ஒரு பொருளுண்டு.

Anything is Sachchidananda.

எதுவும் சச்சிதானந்தமாகும்.

Anything that exists is a form of Sachchidananda.

இருப்பவை அனைத்தும் சச்சிதானந்த ரூபமே.

Things are terms of this existence.

சத்தின் பல்வேறு சிறு ரூபங்கள் இவை.

They are terms of that conscious force.

சித்-சக்தியின் கண்டங்களாகும் இவை.

They are terms of that delight of being.

ஆனந்தத்தின் அனந்த ரூபங்களாகும் இவை.

There is one immutable being.

அழியாத ஜீவன் ஒன்றுளது.

All things are its mutable forms.

இருப்பவை எல்லாம் அதன் அழியும் ரூபங்களாகும்.

There is one infinite force.

அனந்தமான சக்தி ஒன்று.

Everything is a finite result of that infinite force.

அனந்தமான ஒரு சக்தி கண்டமான பல சக்திகளாகின்றது.

There is one self-existence.

சத் என்பது ஒன்று.

It is all-embracing.

அனைத்தையும் அது தழுவும்.

Its delight is all-embracing.

அதன் ஆனந்தமும் அனைத்தையும் தழுவும்.

The self-existence is invariable.

சத் மாறாதது.

All things are variable self-expressions of that.

உள்ளவை அனைத்தும் மாறாத ஒன்றின் மாறும் ரூபங்கள்.

The conscious force dwells in everything.

எல்லாவற்றுள்ளும் சித்-சக்தி உறைகிறது.

A thing is what it is by that force.

ஒரு பொருள் அப்பொருளாகி இருப்பது இந்தச் சக்தியால்தான்.

So also, in everything there is delight.

அதேபோல், ஆனந்தம் எல்லாவற்றுள்ளும் உறைகிறது.

It is delight of existence.

அது சத்துடைய ஆனந்தம்.

A thing exists by that delight.

எதுவும் இந்த ஆனந்தத்தால் வாழ்கிறது.

A thing is because of that delight.

இந்த ஆனந்தமிருப்பதால் பொருள்கள் இருக்கின்றன.

Contd....

தொடரும்.......

 

Comments

லைப் டிவைன்     11. ஆனந்தம் -

லைப் டிவைன்    

 

11. ஆனந்தம் - கேள்வி

10th sentence - பிரதிபலி க்கின்றன. - பிரதிபலிக்கின்றன.



book | by Dr. Radut