Skip to Content

11.பிரார்த்தனை பலிக்க வேண்டும்

பிரார்த்தனை பலிக்க வேண்டும்

(சென்ற இதழின் தொடர்ச்சி....)

 தம்பி - இரகஸ்யம் ACT செயல் என்பதைப் புரிந்து கொள்வதிலிருக்கிறது என்கிறீர்களா?

அண்ணன் - செயலுக்கு ராசியுண்டு, குணம் உண்டு, structure அமைப்புண்டு. ஒரு செயலைப் பூரணமாகப் புரிந்து கொண்டால் உலகமே அதனுள் அடக்கம். அதன் மூலம் உலகை ஆளும் திறன் எழும் என்பது ஆன்மீக அடிப்படை. அணுவினுள் பெருஞ்சக்தி மறைந்து இருப்பதைப்போல, இரகஸ்யம் எளியது, பெரியது.

  • கடவுள்கள் மனிதனோடு தொடர்புள்ளவரில்லை.
  • அன்னை கடவுள்களுடைய தாயார்.
  • பிரம்மத்துடன் நேரடியாக, நிரந்தரமான தொடர்புடையவர்.
  • பிரம்மம் அனந்தம்.
  • நம்மை அன்னை தேடி வருகிறார்.
  • நேரடியாக அன்னையை ஏற்பது, சரணாகதி. அது பூரணயோகம்.
  • நாம் எதன் மூலமாக - வளம், படிப்பு, தொழில், செயல் (act) - அன்னையை ஏற்கிறோமோ அதற்கு அனந்தமுண்டு. (செயல் அனந்தமானது).
  • நாம் செய்வதன் infinityயை அறிந்தால், அன்னை அதன் மூலம் நமக்கு INFINITY,

பிரம்மத்தைக் காட்டுகிறார்.

  • குழந்தை நிரூபமா பெற்றோர்களுக்கு அன்னையை உணர்த்தும் கருவி.
  • பெற்றோர் அன்னையை ஏற்றால், நிரூபமா genius மேதையாகும்.
  • நிரூபமாவின் மேதாவிலாசத்தைக் கண்டால், பெற்றோர் அன்னையை அறியலாம்.

தம்பி - அன்னை அனந்தம், infinity, பிரம்மம். நம்மைத் தேடி வருகிறார். அவரை யோகமாக ஏற்க சரணாகதியை மேற்கொள்ள வேண்டும். வாழ்வில் ஏற்க நாம் செய்வது infinite ஆகப் பலிக்கவேண்டும் என்று கூறுகிறீர்களா?

அண்ணன் -

  • உலகில் வறுமை, துன்பம், நோய், மரணமுண்டு.
  • அன்னை வளமை, இன்பம், ஆரோக்கியம், நித்தியம்.
  • ஒருவர் அன்னையை சரணடைந்தால் உலகில் இவை அழியும்.
  • ஒருவர் செயலில் அன்னையை ஏற்றால், வாழ்வில் உலகப் பிரசித்தி பெறுவார்.
  • மனிதனைப் பிரம்மமாக்கும் சக்தி அன்னை.
  • மனிதனைத் தெய்வமாக்குவது அன்னை.
  • அது முடியாதவர், வாழ்வில் பேரதிர்ஷ்டத்தைப் பெறலாம் என்பதே அன்னை நமக்குச் சொல்லும் ஆன்மீகச் செய்தி. ஏற்க வாரீர் என அன்னை அழைக்கிறார்.

தம்பி - இப்படிச் சொல்லலாமா? படிப்பில் முக்கியம் குழந்தையின் மனம். நாம் சொல்லிக் கொடுக்கும்வரை படிப்புக்கு ஜீவனிருக்காது. குழந்தையே ஆர்வத்துடன் படித்தால் படிப்புக்கு ஜீவன் வரும், படிப்பு அனந்தமாகும். அதை இந்தப் பெற்றோர் செய்துவிட்டனர். படிப்பு என்பது மனம். மனம் ஜீவனின் பகுதி.

படிப்பில் ஜீவனைக் கண்டதுபோல், குழந்தையில் ஜீவனைக் காண்பது அடுத்தது.

அண்ணன் - சரியான விளக்கம். படிப்பு மனத்துடையது, முதற்படி. குழந்தை ஜீவனுக்குரியது, அடுத்த கட்டம். படிப்பைப் போற்றியதுபோல் இப்பெற்றோர் குழந்தையின் ஜீவனைப் போற்றினால், குழந்தை உலகப் பிரசித்தி பெறுவாள். அதுவே சிறிய பலன். அதேபோல் உலகிலுள்ள குழந்தைகள் அனைவரும் பிரசித்தி பெறுவது அடுத்த பெரிய பலன்.

தம்பி - இத்தனை வருடம் கழித்து அன்னையை இப்பொழுதுதான் புரிவது போலிருக்கின்றது.

அண்ணன் - இந்தச் செய்தியை நான் அடுத்த கட்டம், இரண்டாம் கட்டம், அன்னையை அதிகமாக ஏற்பது, அதிர்ஷ்டம் பெறுவது, 10 மடங்கு வருமானம் பெருகுவது எனப் பல ரூபங்களில் சொல்ல முயல்கிறேன்.

தம்பி - சொன்னால் எடுபடாது, செய்தால் நடைபெறும்.

அண்ணன் - செய்வதைப் பூரணமாகச் செய்தால் பலரும் பின்பற்றுவர். அப்படியில்லாவிட்டால் சூட்சுமமாக உலகில் பரவும்.

தம்பி - முதலில் ஆங்கிலத்திலும், விவசாயத்திலும், கிராமப் புணருத்தாரணத்திலும், நாடு வளம் பெறுவதிலும், வேலையில்லாத் திண்டாட்டத்தை அழிப்பதிலும், வன்முறையை நிறுத்துவதிலும் கண்டோம். இனி குழந்தைகள் படிப்பு, பெருவாரியான பணவரவு, நிரந்தரமான அதிர்ஷ்டம் ஆகியவற்றில் காணவேண்டும். ஒருவருடைய சிறப்பு உலகைக் காப்பாற்றும் என்பதை நாம் ஏற்று, அச்சிறப்பைப் பெற முயலவேண்டும்.

அண்ணன் - இவற்றிற்கெல்லாம் கரு, அன்னை யார், எப்படி நம் வாழ்வில் செயல்படுகிறார்கள் என அறிவது.

தம்பி - நம் நிலையிலிருந்து அன்னை நிலைவரை சொல்லிப் பார்த்தால் விளங்குமா?

அணணன் -

நாம்

அன்னை

சுயநலம்

பரநலம்

சுருக்கம்

பெருக்கம்

மனம்

சத்திய ஜீவியம்

வலி

ஆனந்தம்

வறுமை

வளம்

சிறியது

பெரியது

உலகம்

பிரபஞ்சம்

கவலை

சந்தோஷம்

தோல்வி

நிரந்தரமான வெற்றி

கெட்ட எண்ணம்

நல்லெண்ணம்

 நம் குணங்களிலிருந்து அன்னை குணங்களுக்குப் போனால் வாழ்வில் அதிர்ஷ்டம் வரும். குணங்களையே கடந்து வந்தால் யோகம் பலிக்கும்.

தம்பி - செயலுக்கு ராசி, குணம், அம்சம் உண்டு என்றால் என்ன?

அண்ணன் - நாம் சகுனம், பல்லிசொல்லுக்குப் பலன், விழுவதற்குப் பலன், சாஸ்திரம் என பலவற்றைச் சொல்கிறோம். படித்துவிட்டால், இவையெல்லாம் மூடநம்பிக்கைகள் என்கிறோம். நான் ஏற்கனவே சொன்ன கதையில் லிடியா, ராணுவ ஆபீசர் முகாமுக்குப் போகிறாள். வண்டியில் ஏறும்பொழுது கால் இடறுகிறது. இது மேல்நாட்டுச் சினிமா. அவர்கட்குச் சாஸ்திரம் தெரியாது. திரும்பி வருகிறாள். ஓடிப் போகிறாள். ஓடிப்போவதை கால் இடறுவது காட்டுகிறது. நடந்த விஷயங்களை நினைத்துப் பார். நல்லதாக முடிந்தவை, கெட்டதாக முடிந்தவை ஆரம்பத்திலிருந்தே காட்டும். முக்கியமாக முதல் முறை ஆசிரமம் வந்ததை நினைத்துப் பார். இன்று உன் நிலைமையை அது விளக்கும்.

தம்பி - இதுதான் தெரியுமே. ஆயிரம் உதாரணம் உண்டு. திருமணமான அன்று வாழ்வு சுடுகாடாகிவிட்டது என 15, 20 வருஷமாகப் பதறியவர், சற்று நிதானித்து முதல் முறை அவர் பெண் வீட்டாரோடு சம்பந்தம் பெற்ற நாளை நினைவு கூறினார். அவர்கள் வீட்டில் காலையில் அவர் சாப்பிட்ட காபியும், 24 மணி நேரத்திற்குள் அவர் தலைமீது பேரிடி விழுந்ததும் நினைவு வந்தது.

 அண்ணன் - கார், துரோகம், வாழாவெட்டி, சிறப்பான ஊழியரை வேண்டாம் என்றது, எஸ்டேட் வாங்கிய நிகழ்ச்சிகள் இதை நிரூபிக்கின்றன.

தம்பி - NGO கார் வாங்கினார். நமக்கும் காருக்கும் என்ன சம்பந்தம் என நினைத்துப் பார்த்தார். முதல் முறை அவர் தரிசனத்திற்கு வரும்பொழுது திருவிழா நாள் என்பதால் பஸ் கூட்டமாகி இடமில்லாமல், உடனிருப்பவர் கார் ஏற்பாடு செய்தது நினைவு வந்தது. 12 வருஷங் கழித்து வரப்போகும் கார் முதல் நாளே அறிவித்துவிட்டது. நாம் கூறும் உதாரணத்தைவிட அன்பர்கள் முதல் முறை ஆசிரமம் வந்தபொழுது நடந்ததும், பிறகு இன்றுவரை அவர்கள் வாழ்வும் மிகத் தெளிவாகத் தொடர்பைக் காட்டும்.

அண்ணன் - செயலை அலசி, ஆராய்ந்து பார்த்தால், அதுவும் கடந்து போனதை ஆராய்ந்தால் தொடர்பு, விவரம் புரியும்.

தம்பி - சம்பளமும், இலாபத்தில் 5% பங்கும் எனக் கம்பனியில் மானேஜரானவர், இன்று தன் பெருஞ்சொத்து எப்படி வந்தது எனச் சிந்தித்தார். முதற் கம்பனியில் அவர் முதல் வருஷத்தில் மிகுந்த இலாபம் எடுத்துக் கொடுத்தபொழுது முதலாளி 5%க்குப் பதில் 10% கொடுத்தார். மானேஜர் 5% போதும் என்று 10%ஐ மறுத்துவிட்டார். முதல் வருஷம் 5 மாறி 10 ஆனது வளர்ச்சியைக் காட்டுகிறது. Short term கைக்கு மெய்யான ஆதாயத்தைக் கருதாது நீண்ட நாள் சேவையை மானேஜர் பாராட்டியதால் பெருஞ்சொத்து வந்தது.

அண்ணன் - நாம் முறையோடு செய்யும் காரியங்கள் முதலிலேயே அபரிமிதமாகப் பலனைக் காண்பிப்பது அளவு கடந்த வளர்ச்சிக்கு அறிகுறி.

தம்பி - தோட்டம் வாங்கியவர் முதல் அறுவடையைத் திருடன் கொண்டுபோனான் என்றார். 10 ஆண்டுகளில் தோட்டம் அவர் கையை விட்டுப் போயிற்று.

ஒரு ஸ்தாபனத்தில் ஒரு முக்கிய ஊழியர் துரோகம் செய்தபொழுது ஸ்தாபகர் அவருடைய முதல் கடிதத்தில் தன்னை "வைரம்'' என விவரித்ததைக் கூறினார். தன்னையே ஒருவர் "வைரம்'' என்றால் அது உண்மையிலேயே "கரி'' என்று பொருள். பின்னால் வரும் துரோகத்தை "வைரம்'' சுட்டிக்காட்டுகிறது.

அண்ணன் - நாம் சகுனம் எனப் பல குறிப்பிட்ட நிகழ்ச்சிகளைக் குறிப்பிடுகிறோம். நிறைகுடம், சுமங்கலி நல்ல சகுனம் என்கிறோம். இப்புதிய கண்ணோட்டத்தில் எல்லாச் செயல்களும், அசைவுகளும் சகுனங்களாகும். நாம் அனுபவத்தால் அதை அறியவேண்டும்.

தம்பி - மார்வாரியிடம் நிலம் வாங்கப் பணம் கேட்கலாம் என்று ஓர் அன்பர் போனபொழுது, வழக்கத்திற்கு மாறாக அன்பரின் முதலாளியை மார்வாரி "நானே வந்து அவரைப் பார்க்கிறேன்'' என்றார். முதலாளி பணம் வேண்டும் என்றார். அதேயிடத்தில் மார்வாரி சம்மதம் தெரிவித்தார். பிறகு நிலம் எளிமையாக ரிஜிஸ்டர் ஆயிற்று. அதே மார்வாரி நிலத்தைப் பார்த்துவிட்டுத் திரும்பும்பொழுது ரோடு ஓரம் உட்கார்ந்திருந்த குழந்தை ஓடிவந்து காரில் விழுந்தது. டிரைவர் மீது தவறில்லை. குழந்தையின் தவற்றுக்கு மார்வாரியிடம் பணம் கேட்டு வாங்கினர். மார்வாரிக்கு I.G. தெரியும் என்பதால் உடனே போலீஸ் வந்து காப்பாற்றியது. நிலத்தில் மார்வாரி செய்த தவற்றால் திட்டம் தோற்றபின், தான் செய்த தவற்றுக்கு மார்வாரி அன்பரை ஈடு கேட்டார். இதைக் கார் விபத்து முன்கூட்டியே அறிவித்தது.

தொடரும்....

*****

Comments

பிரார்த்தனை பலிக்க வேண்டும்

பிரார்த்தனை பலிக்க வேண்டும்

para 1, line 1 : -இரகஸ்யம் : - இரகஸ்யம்

para 2, line 1 - structureஅமைப்புண்டு - structure அமைப்புண்டு

do.   5, do. 4 - from படிப்பில் to காண்பது அடுத்தது. - separate line after  paragraph no.5

para 6, line 1 : -இத்தனை  : - இத்தனை

do.  10, do. 1 - அண்ணன்-செய்வதைப் - அண்ணன் - செய்வதைப்

do.  11, do.  4 - பணவரவு,நிரந்தரமான - பணவரவு, நிரந்தரமான

do.  16, - after line no.7 - extra space.

do.   21, line 5 -  Short termகைக்கு - Short term கைக்கு

 



book | by Dr. Radut