Skip to Content

10.புலன்களுக்குப் புலப்படாதது

"அன்னை இலக்கியம்''

புலன்களுக்குப் புலப்படாதது

(சென்ற இதழின் தொடர்ச்சி...)

இல. சுந்தரி

பாட்டியைக் கேட்டுத்தானே எழுதினேன், விடை தவறா? என்றாள் இயல்பாக.

ல்லை கண்ணே. தவறில்லை. தவறான விடையை அவர் எப்போதுமே சொல்லித் தரமாட்டார், என்று கூறும்போதே மீராவின் கண்ணில் கண்ணீர்ப் பெருக்கெடுத்தது.

ஏன் அழறீங்க ஆண்ட்டி? என்றாள் சிறுமி. அழவில்லையடா உன் அன்பை எண்ணிக் கண்ணீர் வந்தது. இது அழுகையில்லை. ஆனந்தம் என்று கூறி அன்னையின் திவ்ய தரிசனத்தையும், திருக்குரலையும் பெற்று வெளிப்படுத்திய இச்சிறுமியில் அன்னையைத் தரிசித்தாள். அப்படியே அவளை அணைத்துக் கொண்டாள்.

கவலையும், கபடுமற்ற சிறுமி அமைதியாக உறங்கினாள்.

அன்னை எப்போதும் எல்லோரிடமும் ஒரே மாதிரியாய்த்தான் கருணையைப் பொழிகிறார். இவள் போன்ற விழிப்பான ஆத்மாக்கள் பெற்றுக் கொள்கின்றன. அகங்காரத் திரையிட்டு மறைத்துக் கொள்பவர்க்கு அவரைப் பார்க்க முடியவில்லை.

ஒரு பிரார்த்தனைப் புத்தகத்தை எடுத்து பிரிக்க,

"எம்மனே! நீ என்னை ஆச்சர்யத்தின் நுழைவாயிலில் வைத்திருக்கிறாய். இந்த ஞானத்தில் என்னை உறுதியாக்கு. எங்கிருந்து வந்தால் என் செயல்களெல்லாம் நினது தர்மத்தின் கலப்பற்ற விளக்கமாக இருக்குமோ அந்த உணர்வு மையத்தில் என்னை நிலையாக இருக்கச் செய் என்பதைத் தவிர வேறென்ன சொல்ல'',

படித்ததும் தெளிந்தாள். இங்கு நடந்தவை யாவும் அன்னையின் வெளிப்பாடு. இதனைப் பெருமையுடன் பறைசாற்ற அவளுக்கு அனுமதியில்லை. மக்கள் இதைச் சித்து விளையாட்டாய் திசை திருப்பி புனிதத்தை மாசுபடுத்திவிடுவர். உரிய பருவத்தில் அன்னையே சிறுமிக்கு யாவும் உணர்த்துவார் என்றெண்ணி மீண்டும் புத்தகத்தைப் பிரித்தாள்.

"எம்மனே! நின்னைப் போற்றுகிறேன். நின்னை வணங்குகிறேன். ஆனால் எழுத மாட்டேன். ஏனெனில் இந்தத் தியானத்தைப் பற்றிய ஒரு கேள்விக்கு அளித்த பதில் நீ இப்பொழுதுதான் என்னிடத்தில் இப்படிக் கூறினாய்: நாம் இப்பொழுது மற்றவர்களுக்குத் தெரியக்கூடாத சொந்த உரையாடல் ஒன்று நிகழ்த்தினோம். அதை உன்னுடைய ஸ்தூல செவிகள் கூடக் கேட்கக் கூடாது'' என்றிருந்தது.

தன் ஸ்தூல செவி கூட கேட்கக் கூடாததை நம் ஸ்தூல செவிகளுக்கு மீராவால் எப்படிக் கூறமுடியும்?

 - முற்றும் -

 

****

Comments

"அன்னை இலக்கியம்''para 2,

"அன்னை இலக்கியம்''

para 2, line 3 - from ஏன் அழறீங்க ஆண்ட்டி? to அவளை அணைத்துக் கொண்டாள். - separate paragraph

para 5, line 1, - நுழைவாயில் - நுழைவாயிலில்



book | by Dr. Radut