Skip to Content

06. அஜெண்டா

அஜெண்டா

நிக்ஸன் விலக வேண்டும் என்று அன்னை கூறினார். அவர் விலக்கப்பட்டார்.

Volume 13, page 163

  • ஒரு நாட்டு வாழ்க்கையை அதற்குரிய உண்மையின்படி அறிய முடிவதில்லை.
  • 1800-இல் இங்கிலாந்து, 1900-இல் ஜப்பான் உலகமறியாத சிறு நாடுகள்.
  • வியாபாரம் இங்கிலாந்தைப் பிரபலமாக்கியது.
  • ஹாலந்து வியாபாரம் அதைவிடப் பெரியதானாலும் இங்கிலாந்து போல் பிரபலமாகவில்லை.
  • 1900-இல் ஜப்பான் வலிமையான சிறு நாடு, உலகம் அதை அறியாது.
  • 1905-இல் ரஷ்யாவைத் தோற்கடித்ததால் உலகம் ஜப்பானை அறியும்.
  • 1950-க்குப் பின் ஜப்பான் அமெரிக்காவைக் காப்பியடித்து வளமான நாடாகி விட்டது.
  • 1700-க்கு முன் நாகரீகம் பாரசீகம், இந்தியாவிலிருந்தது.
  • ஐரோப்பா நாகரீகமற்ற நாடாகவே விளங்கியது.
  • ரோம சாம்ராஜ்யம் 500 ஆண்டுகள் ஐரோப்பாவை ஆண்டு, பின்னர் அழிந்தது.
  • கிருஸ்து பிறப்பதன் முன் கிரீஸ் ஞானத்தந்தையாக விளங்கி மறைந்தது.
  • இது போன்ற முன்னேற்றங்களில் நாட்டை உருவாக்கும் தலைவர்கள் எழுவார்கள்.
  • நாட்டை அழிக்கும் தலைவர்களும் உருவாவார்கள். நிக்ஸன், பூட்டோ அப்படிப்பட்டவர்.
  • தான் செய்யும் வேலைக்குக் குந்தகமாக எழும் தலைவர்களையே அன்னை விலக்க முயல்வார்.
  • மொரார்ஜி தேசாய் ஆசிரமத்திற்குச் சர்க்கார் அளிக்க முன் வந்த கிராண்டை எதிர்த்தார்.
  • அன்னை அவர் விலக வேண்டும் என நினைத்தார்.
  • நாடு முன்னேறும்பொழுது நாட்டு சக்திகள் உருவம் பெறும், விவசாயம், வியாபாரம், கல்வி பெருகும்.
  • பெருகுவதைவிட அவை ஒரு சக்தியான உருவம் பெறும்.
  • அவை அதற்குரிய மனிதனை உண்டு பண்ணும்.
  • 1940-இல் நாட்டில் விடுதலை வீரர்கள் எழுந்தனர்.
  • ஏனெனில் விடுதலை இயக்கம் உருவாகியிருந்தது.
  • அதுவே 1910-இல் இல்லை என பகவான் குறைப்பட்டார்.
  • 2010-இல் நாட்டில் கல்வி ஸ்தாபனங்கள் வளரும் சூழல் அபரிமிதமாக உள்ளது.
  • 1960-இல் கல்வியைப் பற்றி நாட்டில் பேசினால் எடுபடாது.
  • கென்னடி உலகச் சேவைக்குரியவர்.
  • நிக்ஸன் உலக அழிவுக்கு ஆதரவு தருபவர்.
  • பர்மாவுடன் இந்தியாவை ஒப்பிட்டுப் பார்த்தால் காந்திஜீயும், நேருவும், காங்கிரஸும் செய்த சேவை தெரியும்.
  • அவற்றின் பின்னணியில் பகவான் இருந்ததை உலகம் அறியாது.
  • பர்மாவுக்குச் சுதந்திரப் போராட்டப் பரம்பரையில்லை.
  • ஆங்ஸான் இந்தியாவைப் பிற்காலத்தில் பின்பற்றி ஓரியக்கம் ஏற்படுத்தி நாட்டில் பதவிக்கு வந்தார்.
  • கொஞ்ச நாளில் அது ராணுவ ஆட்சியாகி விட்டது.
  • அதுவே ஆசிய நாடுகளுக்குரிய முறையாகிறது.

*******

 

ஜீவிய மணி
 
அடுத்தவர் நல்ல குணத்தை வியந்து பாராட்டுவது தெய்வீகம்.
 

 

********



book | by Dr. Radut