Skip to Content

05. பூரணயோகம் - முதல் வாயில்கள்

பூரணயோகம் - முதல் வாயில்கள்

கர்மயோகி

106. இருண்ட சக்திகள் உருவம் பெற்று எதிர்ப்பது.

  • சிறிய மனிதனுக்குச் சிறிய எதிர்ப்பு.
  • பெரிய மனிதனுக்குப் பெரிய எதிர்ப்பு.
  • பாராட்டும் அது போலவே.
  • உள்ளூர் பாராட்டு, உலகப் பாராட்டு, அதையும் கடந்த பாராட்டு, அவற்றைக் கடந்தவர்க்குண்டு.
    “இவர் வாழும் உலகில் நாமும் வாழ்வது பாக்கியம்” என்று ஐன்ஸ்டீன் மகாத்மாவைப் பற்றிக் கூறியது காலத்தைக் கடந்த பாராட்டு.
  • எளிய மனிதன் தன்னைக் காப்பாற்றிக் கொள்வான்.
  • மிகப் பெரிய மனிதன் உலகத்தில் மேதைகளைத் தேடுவான்.
    ஐஸன்ஹவர் அப்படித் தேடி எடுக்கப்பட்டவர்.
    ராதாகிருஷ்ணன் பெரியவர் கண்ணில்பட்டுத் தேறியவர்.
    A.B. புராணி என்பவர் பகவான் வரலாறு எழுதியவர். தீவிர தேச பக்தர். புரட்சிவாதி. குஜராத்திலிருந்து 1920 வாக்கில் புதுவை வந்து பகவானைப் புரட்சி செய்ய ஆசீர்வாதம் கேட்டார்.
    “யோக பாக்கியமிருக்கிறது. யோகம் செய்” என்றார் பகவான்.
    நேருவைக் காந்தி தேர்ந்தெடுத்தார்.
  • பாராட்டுப் பெரியதானாலும், எதிர்ப்புப் பெரியதானாலும்
    ஆத்மா பெரியது எனப் பொருள்.
  • எவருக்கும் புரியவில்லை எனப் பேர் பெற்ற நூல் ஒன்றிருந்தால் அது உலகப் பேரிலக்கியமாகும்.
    The Life Divine இதுவரை அப்பெயர் பெற்றுள்ளது.
  • ஊரில் சிலர் திருடினால் ஊருக்குக் கெட்ட பெயர்.
    அனைவரும் திருடும் ஊரானால், சூட்சும தத்துவப்படி அவ்வூர் பெரும் சுபீட்சம் பெறும் என்று சட்டம் கூறுகிறது.
  • ஒரு கல்லூரியில் ஊழல் ஓரளவு இருந்தால் திருத்துவார்கள்.
    முழுவதும் ஊழலானால் சர்க்கார் எடுத்துக் கொள்வார்கள்.
  • எதற்கும் உதவாத பையன் ஊரை விட்டு ஓடி பெரிய மனிதனாவான்.
  • கல்யாண வயது கடந்து பல ஆண்டாகிறது என்றால் அன்னை அதிர்ஷ்டம் வந்தால் அவளால் அவளுக்கும் அனைவருக்கும் அனைத்தும் கூடி வரும்.
  • இந்தியா சுதந்திரம் இழந்து, சுபீட்சமிழந்து, அறிவை இழந்து, நாணயத்தை இழந்து, நல்லதை இழந்து, அனைத்துமிழந்த நிலையிலிருப்பது,

அனைத்தையும் அதிகபட்ச அளவில்
பெறும் வாய்ப்பு எனப்படும்.

********

 

ஸ்ரீ அரவிந்த சுடர்
 
சைத்திய புருஷன் என்பது முழுமையான ஆன்மா. ஜீவாத்மாவின் பிரதிநிதி. அது சித்தித்தால் மனிதன் தன் வாழ்வு என்றும் பசுமையாக இருப்பதைக் காண்பான். உடலுக்கு வயோதிகம் வாராது. உணர்வு சிறு பிள்ளையைப் போலிருக்கும். 96 வயதில் அன்னை 15 வயது சிறுமியைப் போல் சிரிப்பார். மனம் மலரும் பொழுதுள்ள தீட்சண்யம் எப்பொழுதுமிருக்கும். தியான நிலை ஆத்மாவுக்கு நாள் முழுவதும் நிலைத்திருக்கும். எங்கும் எதிலும் எப்பொழுதும் பசுமை நிலைத்திருக்கும்.
 

 

*********



book | by Dr. Radut