Skip to Content

04. யோக வாழ்க்கை விளக்கம்

யோக வாழ்க்கை விளக்கம்

22/13. கர்மம் கரைய ஜீவனையடைபவர் சாதனை மௌனமானது;

எழுந்த எண்ணம் பேசப்படாமல் சாதிப்பதே சாதனை

காலத்தைக் கடக்கும் யோகம் இதுவரை காலம் சாதித்ததை இப்பொழுது சாதிக்கும்.

யோகம் சாதனையைக் கடப்பது, மனிதன் யோக அவசியத்தைக் கடப்பது.

  • பெரும் சாதனைகளை மேள தாளத்துடன் வரவேற்பதில்லை.
  • உலகம் இதுவரை காணாத சாதனை பிப்ரவரி 29, 1956. அது நிகழ்ந்ததை உலகம் அறியாது.
  • அதற்காக வாழ்வை அர்ப்பணம் செய்த ஆயிரக்கணக்கானவர் அறியவில்லை.
  • அதை அறிய ஓர் அன்பர் விழைவாரானால், அந்தச் சக்தியுடன் அவர் சூட்சும எண்ணம் தொடர்பு கொள்கிறது.
  • அத்தொடர்பு அவர் வாழ்நாளில் சாதித்த அனைத்தையும் இன்றே சாதிக்கும்.
  • உலக வாழ்வில் இது அடிக்கடி நடப்பதுண்டு. அரசியலில் நிகழ்வதை உலகம் அறியும்.
  • அவை அதிர்ஷ்டம் என்ற பெயரால் விலகுகின்றன.
  • அதிர்ஷ்டம் என்றவுடன் நமக்குப் புரியாது, தானே நடக்க வேண்டும், நமக்கில்லை, ஜாதகத்திலில்லை என மனம் கூறும்.

ஜாதகத்தைக் கடந்த ஆத்ம சக்தியிது.
எப்படி ஜாதகத்திலிருக்கும் எனத் தோன்றாது.

  • ஜோஸ்ய சாத்திரப்படி துறவி, இறந்தவர் ஜாதகத்தைப் பார்க்கக் கூடாது.
  • நம்பிக்கை எழுந்தால் அதைக் குறிக்கும் அறிகுறிகள் எழும்.
  • தான் செய்யும் சிறு தொழிலில் ஒரு சரக்கு வந்து எட்டு வருஷமாகப் பெற்ற இலாபம் கிடைக்கும்.
  • இதை இலாபமாக அறிவது ஜட மனம்.
  • இதை சகுனமாக அறிவது சூட்சுமமான மனம்.
  • இது இந்தத் தத்துவத்தைக் கூறும் சகுனம் என அறிவது மனம் சூட்சுமமாக இருப்பது.
  • நாம் செய்தால் பலிக்கும் எனத் தோன்றுவது ஜீவன் பெற்ற சூட்சுமம்.
  • அவர் இந்தத் தத்துவத்தை விபரமாக அறிந்து, அறிந்ததை உணர்ந்து, செயல்படுத்த முடிவு செய்தால் அவர் ஆரம்பிக்கும்முன் வாழ்வு அதை ஆரம்பிக்கும்.
  • முயன்றால் சிறு முயற்சிக்குப் பெரும் பலன் வரும்.
  • மனிதன் ஆரம்பித்தால் ஊர் அவன் செயலை ஏற்று அவனுக்காகப் பூர்த்தி செய்து அது பெரும் பலன் தரும்
  • ஊரைக் கடந்துள்ள வாழ்வும் அவன் வேலையை ஏற்று அவனுக்காக அளவுகடந்து பூர்த்தி செய்யும்.
  • இந்த யோகத்தின் அடிப்படை காலம் சுருங்குவது.
  • இதுவரை எல்லா யோகங்களும் பல ஜென்மத்தை இதே பிறப்பில் செய்து முடிப்பதாகும்.
  • காலம் என்ற யோகத்தில் நீண்ட நாள் சுருங்குவது காலத்தை வெல்வது.
  • பூரண யோகம் காலத்திலில்லை.
  • காலத்தைக் கடந்த யோகத்தில் எதுவும் க்ஷணத்தில் முடியும். அது ஒரு முறை நடக்கும்.
  • காலத்துள் காலத்தைக் கடந்தது செயல்படும் மூன்றாம் நிலைக்காலம் பூரண யோகத்திற்குரியது.
  • புறம் அகமாகி, கீழ் மேலாகும் நிலையிது.
  • இந்த நிலையில் யுகம் க்ஷணமாகும், நிலையாக நடக்கும்.
  • நிலையாக எதுவும் க்ஷணத்தில் நடப்பது பூரண யோகம்.
  • இதுவரை 40 ஆண்டுகள் வாழ்வில் சம்பாதித்தது இன்றே பெறக்கூடியது. அதனால் இனிவரும் 50 ஆண்டுகள் வருமானமும் இன்றே வரும். இரண்டும் சேர்ந்தும் வரும். தொடர்ந்து வந்தபடியுமிருக்கும்.
  • மனம் வருமானத்தைக் கருதாதது அதைக் கடந்த யோக நிலை.
  • யோக நிலைக்குரியது யோகப் பலன். வாழ்க்கை பலனான காரியம் கூடி வருவதில்லை.
  • யோகப் பலனைக் கருதும் மனமும் காரியத்தைக் கருதும் மனம்.

காரியத்தை விலக்கி கூடி வருவதைக் கருதலாம்
கூடி வருவது முறை (process)
முறையைக் கடந்தது சாரம்
முறையையும் மனம் கடந்தால் சாரம் எழும்
எல்லா விஷயங்களிலும் சாரத்தை அடைவது பிரம்ம ஞானம்

  • பிரம்மம் செயலாக எழுவது வாழ்வு.
  • செயலைப் பிரம்மமாக அறிவது ஞானம்
  • பிரம்ம ஞானம் உலகில் எழுவது பிரம்ம ஜீவியம்
  • காலத்தைக் கடப்பது ஆத்மா. ஆத்மாவைக் கடப்ப பிரம்மம். பிரம்மத்தை வாழ்வில் காண்பது பூரண யோகம்.

**********

ஜீவிய மணி
 
அன்னை தரும் அருளைப் பொருளாகப் பெற்றவன் தான் அதிர்ஷ்டம் பெற்றதாக நினைக்கிறான்.



book | by Dr. Radut