Skip to Content

01. ஸ்ரீ அரவிந்தம் - லைப் டிவைன்

ஸ்ரீ அரவிந்தம்

லைப் டிவைன்

(சென்ற இதழின் தொடர்ச்சி)

கர்மயோகி

 

 

XXVII. The Sevenfold Chord of Being
Page 265
Para 8
27. சப்த ஜீவன்
Consciousness is thus omniscient and omnipotent.
சர்வ ஞானம் படைத்ததாகவும் சர்வ வல்லமை பெற்றதாகவும் இருப்பது ஜீவியம்.
It is in entire luminous possession of itself.
அது முழுவதுமாக ஒளி பொருந்திய நிலையில் தன்னைச் சுயமாகப் பெற்றுள்ளது.
This possession is necessarily in its very nature Bliss.
அதன் சுய உடைமை பேரானந்தமானது.
It cannot be anything else.
அது வேறெதாகவும் இருக்க முடியாது.
A vast universal self-delight must be the cause of cosmic existence.
ஒரு பரந்த அகிலத்தின் சுய ஆனந்தம், பிரபஞ்ச வாழ்வுக்குக் காரணமாக இருக்க வேண்டும்
It is the essence and object of cosmic existence.
அதுவே பிரபஞ்ச வாழ்வின் சாரமாகவும், நோக்கமாகவும் உள்ளது.
The ancient seer declared that this delight is our ether.
பண்டைய முனிவர்கள் இப்பேரின்பத்தை நம் தூய வான் வெளியாக அறிவித்தனர்.
“If it were not, none could breathe, none could live.”
அது இல்லையென்றால், யாராலும் சுவாசிக்க முடியாது,
யாராலும் வாழ முடியாது.
This self-bliss may become subconscient.
It may be seemingly lost on the surface.
இந்த சுய ஆனந்தம் ஆழ்மனமாக ஆவதாக இருக்கலாம். அது வெளிப்பார்வைக்கு மேல்மனதில் மறைந்துள்ளதாகத் தெரியலாம்.
It must be there at our roots.
All existence must be a seeking to discover and possess it.
நம் அடித்தளத்தில் அவை இருக்க வேண்டும். அதைக் கண்டுபிடித்து அடைவது அனைத்து வாழ்வின்
நோக்கமாக இருக்க வேண்டும்
The creature in the cosmos may find himself in will and power.
பிரபஞ்சத்தில் படைக்கப்பட்டவை உறுதியிலும், திறனிலும் தன்னைக் கண்டறியலாம்.
He may fi nd himself in light and knowledge.
He may be in being and wideness, or in love and joy.
அவன் தன்னை ஒளியிலும், ஞானத்திலும் கண்டறியலாம். அவன் ஜீவனிலும், பரந்த நிலையிலும் அல்லது அன்பிலும் சந்தோஷத்திலும் இருக்கலாம்.
In whatever way he finds himself, he must awaken.
அவன் தன்னை எப்படிக் கண்டுகொண்டாலும், அந்நிலையில் அவன் விழிப்புணர வேண்டும்.
He awakens to something of the secret ecstasy.
மறைபொருளான ஏதோ ஒரு பரவசத்தை அவன் விழிப்பால் அறிகிறான்.
He may awaken to joy of being, delight of realisation of knowledge.
ஜீவனின் சந்தோஷம் மற்றும் ஞானத்தின் தெளிவை விழிப்பால் அறிகிறான்.
Or he awakens to rapture of possession by will and power.
அல்லது அவன் உறுதியாலும் திறனாலும் கைப்பற்றுதலால் எழும் பேருவகையை அறியும் விழிப்புணர்வு பெறுகிறான்.
Or to ecstasy of union in love and joy.
அல்லது அன்பாலும், சந்தோஷத்தாலும் ஒன்று சேரும் பரவச நிலையை அவன் விழிப்பால் அறிகிறான்.
These are the highest terms of expanding life.
இவை பரந்து விரியும் வாழ்வின் உயர்ந்த நிலைகளாகும்.
They are the essence of its hidden roots.
அவை அதன் மறைந்துள்ள அடிப்படையின் சாரமாகும்.
This expanding life has yet unseen heights.
Page 266
Para 9
இந்த பரந்து விரியும் வாழ்வு இன்னும் நாமறியாத பல உயர்வுகளைக் கொண்டது.
The Trinity does not need to throw itself out into apparent being.
திரித்துவத்திற்கு தான் ஜீவனாக பார்வைக்கு வெளிப்படும் அவசியம் இல்லை.
Or, if it does so, it would not be cosmic being.
அல்லது, அப்படி வெளிப்பட்டால், அது பிரபஞ்ச ஜீவனாகாது.
It would simply be an infinity of figures.
அது சாதாரணமான ரூபங்களின் ஒரு அனந்தமாகும்.
The fourth term Supermind needs to be brought out.
நான்காவது நிலையான சத்திய ஜீவியத்தை வெளிக் கொணர வேண்டும்.
If not brought out by the Trinity, the figures would have no fixed order.
திரித்துவத்தால் அவைகளை வெளியில் கொண்டு வராவிட்டால், ரூபங்கள் ஒரு நிலையான ஒழுங்கை பெறாது.
Supermind is the divine Gnosis.
சத்திய ஜீவியம் ஒரு தெய்வீக மறையியல் ஞானமாகும்.
In every cosmos there must be a power of Knowledge and Will.
ஒவ்வொரு பிரபஞ்சத்திலும் ஞானம், உறுதிக்கான திறன்  இருக்க வேண்டும்.
This power fixes out of infi nite potentiality the determined relations.
இத்திறன் தன் அனந்தமான ஆற்றல் வளத்தின் மூலம் தொடர்புகளின் நிர்ணயத்தை முடிவு செய்கிறது.
It develops the result out of the seed.
விதையிலிருந்து அதன் வளர்ச்சிக்கான பரிணாமத்தை  உருவாக்குகிறது.
It rolls out the mighty rhythms of cosmic Law.
வலிமைமிக்க ஒலி நயம் பொருந்திய பிரபஞ்ச சட்டத்தை அமல் செய்கிறது.
It views and governs the worlds as their immortal Seer and Ruler.
உலகத்தை மரணமிலா நிலை எய்திய ஞானி போலவும் அரசர் போலவும் அது பார்வையிடுகிறது மற்றும் ஆள்கிறது.
This power is nothing else than Sachchidananda Himself.
இத்திறன் சச்சிதானந்தம் தானே செயல்படுவதன்றி வேறில்லை.
It creates nothing which is not in its own self-existence.
படைப்பில் உள்ளவை அனைத்தும் அதன் சுய இருப்பிலிருந்து எழுந்தவையே. அதனுள் இல்லாதது எதுவும் இங்கில்லை.
All cosmic Law is not imposed from outside. It is from within.
எல்லா பிரபஞ்ச சட்டமும் வெளியிலிருந்து சிருஷ்டிக்குள் திணிக்கப்பட்டவை அல்ல.
உள்ளிருந்து எழுந்தவையே.
All development is self-development.
All seed and result are seed of a Truth of things.
எல்லா வளர்ச்சியும் அதன் சுய வளர்ச்சியே எல்லா விதையும் பயனும் சத்தியத்தின் கருவே ஆகும்
The result of that seed is determined out of its
potentialities.
விதையின் பலன் அதன் உள்ளாற்றலால்  நிர்ணயிக்கப்படுகிறது.
For the same reason, no Law is absolute.
Only the infinite is absolute.
அந்தக் காரணத்தால், எந்தச் சட்டமும் முழுமையானதல்ல பரம்பொருள் மட்டுமே முழுமையானது.
Everything contains within itself endless potentialities.
அனைத்தும் தனக்குள்ளே முடிவிலா உள்ளாற்றலை கொண்டுள்ளன.
They are quite beyond its determined form and course.
அவை நிர்ணயிக்கப்பட்ட உருவம் மற்றும் வழியை கடந்துள்ளன.
They are determined through a self-limitati on by Idea.
சுயக் கட்டுப்பாட்டுக்கான எண்ணத்தால் அவை  நிர்ணயிக்கப்பட்டுள்ளன.
The Idea proceeds from an infinite liberty within.
அவ்வெண்ணம் அதற்குள்ளே உள்ள அனந்தமான சுதந்திரத்திலிருந்து வெளிப்படுகிறது.
This power of self-limitation is inherent.
சுய கட்டுப்பாட்டிற்கான திறனை அது இயல்பாகவே  பெற்றுள்ளது.
It is in the boundless All-Existent.
வரம்பில்லாத பரம்பொருளினுள் அது உள்ளது.
The Infinite can assume a manifold finiteness.
அனந்தம் பலவான அணுவாக தன்னைக் கருத முடியும்.
Otherwise it would not be the Infinite.
இல்லையென்றால் அது அனந்தமாக இருக்க முடியாது.
The Absolute has a boundless capacity of selfdetermination.
பரம்பொருள் தன் சுய நிர்ணயத்தை மேற்கொள்ளும் வரம்பில்லாத ஆற்றல் கொண்டது.
It is in knowledge and power and will and manifestation.
அது ஞானம், திறன், உறுதி மற்றும் வெளிப்பாட்டில் உள்ளது.
Otherwise it would not be the Absolute.
இல்லையென்றால் அது முழுமையான பரம்பொருளாக இருக்க  முடியாது.
This Supermind then is the Truth or Real-Idea.
இந்தச் சத்திய ஜீவியம் சத்தியம் அல்லது முழு எண்ணம் எனப்படும்.
It is inherent in all cosmic force and existence.
அது எல்லா பிரபஞ்ச சக்தியிலும், வாழ்விலும் இயல்பாக உள்ளது.
It is necessary to determine and uphold relation and order.
தொடர்பு, ஒழுங்கு முறை இவற்றை நிர்ணயம் செய்யவும் அவற்றை தாங்கிப் பிடிக்கவும் அது அவசியமாகிறது.
It upholds the great lines of the manifestation.
அது வெளிப்பாட்டிற்கான சிறந்த முறையை நிலைநிறுத்துகிறது.
The Vedic Rishis described in their language
Sachchidananda.
வேத ரிஷிகள் தங்கள் மொழியில் சச்சிதானந்தத்தை விவரித்தார்கள்.
Existence, Consciousness and Bliss are the three highest hidden Names.
ஜீவன், ஜீவியம், ஆனந்தம் என்ற மூன்று உயர்ந்த மறைபெயர்கள் அவை.
They are the names of the Nameless.
பெயரற்றதன் பெயர்கள் அவை.
So also, this Supermind is the fourth Name.
அது போல், சத்திய ஜீவியம் என்பது நான்காவது பெயர் அது தன் இறங்கும் நிலையில் நான்காவதாக உள்ளது.
It is fourth to THAT in its descent
It is fourth to us in our ascension.
 
நம் உயரும் நிலையில் அது நான்காவதாக உள்ளது.
 
*********
 
**********
 
ஜீவிய மணி
 
 
ஸ்ரீ அரவிந்த சுடர்
இறைவன் இடைவிடாது செயல்படுவது அற்புதம். ஆனால் மனிதன் மனத்தில் இறைவன் செயல்படுவதில்லை. அருள் மனிதனை நாடி வரும் போது, மனிதன் நாடுவது சுவையே. சுவை அருளை விலக்கும். சுவையை ஏற்று அதில் அமிழ்ந்தால் சுவை மனிதனை அழிக்கும். மனிதனுடைய சுயநல ஆசைகளைப் பூர்த்தி செய்வதைத் தம் பரநலமான இலட்சியமாக ஸ்ரீ அன்னை ஏற்றார். அவர் அருளைப் பூவுலகில் சொர்க்கமாக மனிதன் அனுபவிக்க வழங்குபவை இரண்டு: அபரிமித அதிர்ஷ்டமும், அளவற்ற பாதுகாப்பும். ஆனால் மனிதன் ஆர்வமுடன் நாடுவது அருளன்று. ஆன்மீக இலட்சியமும் அன்று. அவன் தற்பெருமையை, வீண்பெருமையை நாடுகிறான்.
சத்து, சித்து, ஆனந்தம் என்பவை சச்சிதானந்தம். சத் உடலாகவும், சித் வாழ்வாகவும், ஆனந்தம் ஆன்மா (சைத்திய புருஷன்) வாகவும், சத்திய ஜீவியம் மனமாகவும் சிருஷ்டியில் மாறுகின்றன. நம்வாழ்வில் ஆனந்தத்தை அறியக்கூடியது ஆன்மா. ஆன்மா ஆணவ மலத்தால் பீடிக்கப்பட்டுள்ளது. ஆணவம் கரைந்தால் ஆன்மா அதிலிருந்து விடுபடுகிறது. அதன்பின் ஆன்மா மீது மனம் எனும் திரை உள்ளது. மனம் மௌனமானால் மேல்மனம் விலகும். மனம் சிந்திப்பதை மறுத்தால் சிந்தனையிலிருந்து ஆன்மா விடுபடும். சிந்திக்கும் திறனையே மனம் இழந்தால் ஆன்மா மனத்திலிருந்து விடுபடும். மனத்திலுள்ள சைத்திய புருஷன் (mental psychic) வெளிவருவான். அவன் ஆனந்தத்தைப் பெறுவான். ஞானிகள் பெற்ற இன்பத்தைவிட இது ஒரு படி அதிகமானது.book | by Dr. Radut