Skip to Content

2. தீட்சை

தீட்சை

மரபில் தீட்சை என்பது குரு சிஷ்யனைத் தன் ஆன்மீக உயிரின் பாகமாக ஏற்பது. பொதுவாக இது மந்திரதீட்சையாக அமையும். பூரணயோகம் பிரபஞ்சம் பிரம்மத்தில் பூரணமாவதைப் பூலோகம் அறிவது. பிரம்மத்தின் முழுமை, பிரபஞ்சத்தில் முழுமை பெறுவதைப் பூலோகம் ஆத்மாவில் உணர்வதாகும். தரிசனத்தில் அன்னைமுன் (அல்லது பகவான்முன் அல்லது அவர்கள்முன்) வந்தவுடன் ஆத்மா விழித்து, மனத்தில் பரவி, உயிருக்கு ஜீவனளித்து, உடலின் ஆழத்தை எட்டுகிறது. முழு ஜீவன் க்ஷணம் விழித்து பிரம்ம தரிசனத்தைப் பகவானாக, அன்னையாகக் காணமுடிகிறது. இதை உணர்பவர் மீண்டும் வீட்டிற்குப் போக முடியாது. போய் விட்டுத் திரும்பும் நிலை இது இல்லை. பகவானைக் கண்டபின் அப்படியே இங்கேயே தங்கியவர் ராஜாங்கம் என்ற டாக்டர். தம் மனைவியுடன் தங்கி விட்டார். மற்றவர் வீடு போய் குடும்பத்துடன் வந்தவர். இந்தத் தீட்சை ஆத்மாவின் மௌனமாகவும், மனத்தில் ஜோதியாகவும், உயிரில் ஜீவனுள்ள இலட்சியமாகவும், உடல் வாழ்வில் பொருளாகவும் ஏதோ ஒரு ரூபத்தில் எழும். கண்டவர் பலர், காணாதவரும் பலர். கண்டாலும் காணாவிட்டாலும், அருளினின்று தப்பித்தவரெவருமிலர்.

******



book | by Dr. Radut