Skip to Content

11. தெரியாது

தெரியாது

கர்மயோகி

  • வலியப் போய் உதவினால் உபத்திரவம் வரும் எனத் தெரியாது.
  • அளவுகடந்த பிரியமுள்ள இடத்திலும் காரியம் அந்தஸ்திற்கேற்பவே நடக்கும் எனத் தெரியாது.
  • உடையவரானாலும், உரிமையை வற்புறுத்தாவிட்டால், முழு உரிமையையும் தயங்காமல் எடுத்துப் போவார்கள் எனத் தெரியாது.
  • அறியாதவன் ஞானியிடம் பயில வந்தாலும், ஞானி அவனிடமிருந்து அறிவு பெறுவதுபோல் நினைப்பான் எனத் தெரியாது.
  • உயர்ந்த நன்றியையும் உணர்ந்து உன்னதமாக உயர் நிலையிலுள்ளவர்க்குச் செலுத்தினாலும், அவர்கள் உள்ளம் தாழ்ந்ததானால், அவரால் நமக்கு ஏற்கனவே கெடுதல் நிகழ்ந்திருந்தால், பலன் பெருந்தன்மைக்கு வாராது, பலன் முழு அழிவாக இருக்கும் எனத் தெரியாது.
  • பிரம்மாண்ட பலனையும், பிறர் சொல்வதால் மறுப்பார் எனத் தெரியாது.
  • கேட்காமல் கொடுத்தால் பயன்படாது எனத் தெரியாது.
  • ஒருவரை அநியாயமாக அழித்தவன், அழித்ததால் பலன் பெறாவிட்டால் அழிந்தவனைக் குறை கூறுவான் எனத் தெரியாது.
  • நமக்குக் கெடுதல் செய்தவன் அக்கெடுதலுக்காக நன்றி எதிர்பார்ப்பான் எனத் தெரியாது.
  • யாரையும் ஏமாற்ற இடம் தரவில்லையென குறைபடுவார் எனத் தெரியாது.
  • நம்மை அழிக்க நம் உதவியை நாடுவார் எனத் தெரியாது.
  • தரித்திரமானவர்க்கு அதிர்ஷ்டம் தேடிக் கொடுத்தால், அவர்கள் கெட்டுப் போக நாம் நினைப்பதாகக் கூறுவார் எனத் தெரியாது.
  • அழித்தவனை ஆபத்திலிருந்து காப்பாற்றினால் நீதான் என்னை அழித்தாய் எனக் கூறுவான் எனத் தெரியாது.
  • எந்த மனிதனும், எதையும் கூறுவான் எனத் தெரியாது. கர்மத்திலிருந்தும் எவரையும் காப்பாற்றலாம் என்றாலும், ‘உத்தரவு’ இல்லாமல் செய்யக் கூடாது எனத் தெரியாது.
  • படிப்பு, திருமணம், சொத்து, பதவியெல்லாம் சுயநலமிக்குப் பெற்றுக் கொடுத்தாலும், அவனுக்கு நன்றியிருக்காது, பெற்றது நினைவிருக்காது எனத் தெரியாது.
  • எவ்வளவு நல்லவரானாலும், சிறு விஷயத்திற்குக் கட்டுப்பட்டவரானால், அவர்களால் நல்லதை அனுமதிக்க முடியாது எனத் தெரியாது.
  • ஒருவர் மனம் அடுத்தவர் நல்ல குணத்தை ஏற்காது எனத் தெரியாது.
  • ஒரு துறையில் உச்சகட்ட அனுபவம் பெற்றவரும், அடுத்த துறையைப்பற்றி அர்த்தமற்றார்ப்போல் பேசுவார் எனத் தெரியாது.
  • குரங்கு ஆப்பைப் பிடுங்கியதைப்போல் அறிவும், அனுபவமும் உள்ள மனிதன் செயல்படுவான் எனத் தெரியாது.
  • ஆயுள் முழுவதும் இலட்சியப் போராட்டம் நடத்தியவர், தனக்கே பதவி வந்த முதல் நேரம், எதிராக நடப்பார் எனத் தெரியாது.

*******



book | by Dr. Radut