Skip to Content

09. அஜெண்டா

அஜெண்டா

அளவு கடந்த அபரிமிதமான அனுபவம் மனிதனைச் சூழ்ந்துள்ளது. மனம் ஆசையால் அதைச் சுருக்குகிறது.

  • உலகில் Genius மேதை என்பவர் 100 ஆண்டுகளில் ஒருவர் பிறப்பதை நாம் அறிவோம்.
  • 200 ஆண்டுகட்குமுன் செயிண்ட் சைமன் என்ற பிரெஞ்சுக்காரருடைய சிஷ்யன் காம்ட் என்பவர், எதிர்காலத்தில் 3 கோடி 70 லட்சம் நியூட்டன், 3 கோடி 70 லட்சம் தத்துவ ஞானிகள், 3 கோடி 70 லட்சம் எழுத்தாளர்கள் பிறப்பார்கள். கடல் உப்பு நீர் ஆரஞ்சு ரஸமாகும் என்றார்.
  • லட்சத்தில் ஒருவர் பெற்றதை 300 அல்லது 400 ஆண்டுகள் கழித்துக் கோடிக்கணக்கானவர் பெறுவதை நாம் காண்கிறோம்.
  • ஒரு விதை முளைக்க இயற்கை ஒரு நூறு பழம் உற்பத்தி செய்கிறது. சில சமயம் ஒரு ஆயிரம் பழமும் உற்பத்தி செய்கிறது. அரிதாகப் பல ஆயிரமும் உற்பத்தி செய்கிறது. பூக்கும் எல்லாப் பூவும் பழமானால், பழுக்கும் எல்லாப் பழமும் முளைத்தால் உலகில் நிற்க இடமிருக்காது.
  • மேதை யார், மேதா விலாசம் எது, மேதை உருவாகும் முறை எது, எந்தச் சக்தி மேதையைப் பிடிக்கச் செய்கிறது என்பதை அறிந்தவர்,
    • எந்த 100 பேர் உள்ள கூட்டத்திலும் 90 பேருக்கு மேதா விலாசம் உண்டு எனக் காண்பார்.
    • யார் வாயில் வரும் எந்தச் சொல்லும் பேரிலக்கியத்தின் பெரு வாழ்வைக் குறிக்கிறது என அறிவார்.
    • இக்கருத்தை நம் கவனத்தைக் கவர பகவான் திருடனுடைய அடி திருவடி எனவும், விபச்சாரியின் கற்பு விலைமதிக்க முடியாதது எனவும் கூறினார்.
    • ஒலிம்பிக் கோச் கிராமப் பள்ளிகளின் விளையாட்டு மைதானத்தில் வந்தால் எல்லாச் சிறுவரிடமும் எல்லாத் திறமையும் எந்த நேரமும் நிறைந்துள்ளது எனக் காண்பார்.
    • கிளென்டோமன் இந்த உண்மையின் ஒரு அம்சத்தை அறிந்து, அந்த அடிப்படையில் நடத்தும் பள்ளி மாணவரிடம் பொறாமையில்லை, சிலர் நோபல் பரிசு பெற்றனர், நோபல் பரிசு பெறும் திறமையுள்ள பலர் அதை நாடுவதில்லை. நான்கு வயதில் எந்தக் குழந்தையும், எந்தப் புத்தகத்தையும் படிக்கும் எனக் கண்டு உலகுக்கு அறிவித்தார்.
  • அன்னைக்குத் தாவரம், விலங்கு குரல் கேட்கும், காட்டு மனிதர்கட்கு இத்திறன் உண்டு. அக்கண்ணோட்டத்தில் உலகைச் சற்று கண்டால்,
    உலகம் அற்புதக் காட்சியாகத் தெரியும்.
    பிறந்தவரெல்லாம் மேதை, இருப்பது எல்லாம் அதிசயம்,
    நடப்பது எல்லாம் அற்புதம், உலகில் இறைவன் எந்த நேரமும் ஆனந்தவாரியாக அனுபவிப்பது தெரியும்.
    மனம் குறுகி, சுருங்கி சிரமப்படுகிறது.

******

ஸ்ரீ அரவிந்த சுடர்
 
நான் எளியவன். என்னால் மாற முடியாது. என்னை மாற்றிக் கொள்ளும் திறன் எனக்கில்லை என்பவற்றையெல்லாம் அன்னை ஏற்றுக்கொள்வதில்லை. மாற்றிக்கொள்ளும் முடிவுக்கு வாராதவர் சொல்லும் சொல் எனக் கருதுகிறார் அன்னை. அருள் ஒருவரை மாற்றும், திருத்தும், மாற வேண்டும் என்ற முடிவுக்கு வந்தவருக்கு மாற வேண்டிய திறனை அருள் அளிக்கும்.
 

*******



book | by Dr. Radut