Skip to Content

07. அன்பர் அனுபவம்

அன்பர் அனுபவம்

சுஜாதா, சேலம்

என் பெயர் சுஜாதா. நான் சேலத்தைச் சேர்ந்த அன்னை அன்பர். ஸ்ரீ அன்னை, ஸ்ரீ அரவிந்தர் அவர்களால் நாங்கள் பெற்ற அருள் ஏராளம். பல அற்புதங்களை ஸ்ரீ அன்னை அவர்கள் என் வாழ்க்கையில் நடத்தி உள்ளார்கள்.

பிப்ரவரி மாதம் இருபத்திரெண்டாம் தேதியன்று ஒரு அற்புதம் எங்கள் வாழ்க்கையில் நடந்தது. அதை உங்களுடன் பகிர்ந்து கொள்வதில் பெருமகிழ்ச்சியடைகிறேன். என் நாத்தனாருக்கு, என் மாமனார் அவர்கள் 1985, நவம்பர் மாதம் 28-ஆம் தேதியன்று எங்கள் ஊரில் ஒரு நிலம் வாங்கிக் கொடுத்திருந்தார். அதன் விலை அப்போது 18,000/- ரூபாய். அந்த நிலத்தை ஒரு மூன்று, நான்கு வருடங்களாக விற்பதற்கு என் நாத்தனார் ஏற்பாடு செய்து கொண்டிருந்தார்கள். அந்த நிலத்தை நல்ல விலைக்கு விற்க முடியாதபடி, அதற்கு அருகிலுள்ளவர்கள் பிரச்சனை செய்து கொண்டிருந்தார்கள். அந்த நிலத்தை ஒரு சதுர அடி 200 ரூபாய்க்கு நாங்களே வாங்கிக் கொள்கிறோம் என்று அருகில் உள்ளவர்கள் கேட்டுக் கொண்டு இருந்தார்கள். பிறகு, என் நாத்தனார் அதை விற்கும் பொறுப்பை ஒரு வருடமாக என்னிடம் கொடுத்தார்கள். நான் ஸ்ரீ அன்னையின் பொற்பாதங்களில் சமர்ப்பித்துவிட்டு, சில தரகர்களிடம் சொல்லி விற்பதற்கு முயற்சி எடுத்தேன். அப்படியும் யாரும் சதுர அடி ரூபாய் 300/-க்குமேல் வாங்கத் தயாராகயில்லை. பிப்ரவரி 2-ஆம் தேதி, ஒரு தரகர் சிலரை எங்கள் வீட்டிற்கு அழைத்து வந்தார். வந்தவர்கள் அந்த நிலத்தை ஒரு சதுர அடி ரூபாய் 425/-க்கு வாங்க சம்மதித்தார்கள். மேலும் முன்பணமாக ரூபாய் 10,000/- கொடுத்தனர். மார்ச் 11-ஆம் தேதி அந்த நிலத்தை கிரயம் செய்து கொடுத்தோம். அந்த இடத்திற்கு ரூபாய் 5,50,000/- தொகையை ஸ்ரீ அன்னை அவர்கள் வாங்கிக் கொடுத்தார்கள். Registration பத்திர பதிவு முடித்து, வீட்டிற்கு நாங்கள் வந்த பிறகு, என் நாத்தனார் என்னிடம் ரூபாய் 20,000/- கொடுத்தார்கள். எனக்குக் கிடைத்த எதிர்பாராத வருமானத்தினால் எனக்கும் மிகுந்த சந்தோஷம்.

ஸ்ரீ அன்னையின் பாதங்களில் பிரச்சனைகளைப் பரிபூரணமாக சமர்ப்பித்து விட்டால், எந்தப் பிரச்சனையும் சுமுகமாகத் தீர்ந்து விடும் என்ற நம்பிக்கையுடன், எங்கள் அன்பு தெய்வம் ஸ்ரீ அன்னை அவர்களையும், பகவான் ஸ்ரீ அரவிந்தர் அவர்களையும், இந்த தெய்வங்களை எங்களுக்கு அறிமுகப்படுத்திய தவத்திரு. அப்பா ஸ்ரீ கர்மயோகி அவர்களையும், உயர்திரு. அண்ணன் அவர்களையும் வணங்கி என் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

*******

ஸ்ரீ அரவிந்த சுடர்
 
மௌன சாதனை பெரிய சாதனை. மௌனம் பூரணமானால் சாதனையே மௌனமாகி அழியும். அது சாதனையைக் கரைக்கும் மௌனம். சாதனையை விலக்கும் மௌனம் பிரம்ம மௌனம். சாதனை அழிவதுபோல், பிரம்மத்தை அறிவதும் அழியும்
மௌனமுண்டு. பிரம்மத்தை அறியும் அவசியமும் அழியும் பொழுது, மனிதன் பிரம்மமாகிறான். மௌனம் அதிகமாக சாதிக்கும். சாதனையையே அழிக்கும். மௌனத்தையும் அழித்து பிரம்மமாகும்.
 
Silence silences Silence to become Brahman.
 
எந்த முறையின் மூலமும் பிரம்மத்தின் சாரமான மூலம்.
 
Perfection of methods ends in Brahman.
 

********



book | by Dr. Radut