Skip to Content

05. நெஞ்சுக்குரிய நினைவுகள்

நெஞ்சுக்குரிய நினைவுகள்

யோகம் பயிலும் தகுதி

கர்மயோகி

தகுதியெனில் என்ன?

  • பிறப்பால் ஏற்பட்ட தகுதி இன்று தவிர்க்கப்பட்டது.
    அது பரம்பரை தரும் தகுதி. அனைவருக்கும் அது வெவ்வேறு துறைகளில் உண்டு.
    ஆழத்தில் சாரம் அனைவருக்கும் பொது.
    பார்வைக்கு மேலே தெரிவது பெரும் வித்தியாசம்.
    வித்தியாசத்தைப் பாராட்டுவோர்க்குத் தகுதியில்லை.
    சாரத்தை ஏற்பவருக்குத் தகுதியுண்டு.
  • தகுதியின் உண்மை எது?
    நாம் எதை ஏற்கிறோம் என்பதைப் பொறுத்துத் தகுதி அமைகிறது.
    'மாடு மேய்ப்பவன் மந்திரியாவது' காட்டுவதை ஏற்க வேண்டும்.
  • அரசியல் சுதந்திரம் சட்டத்தில் சம உரிமை தருகிறது.
  • சம உரிமையை அனைவரும் சமமாக அனுபவிக்க முடியுமா?
    உரிமை நம்பிக்கையாலும், அறிவாலும் தகுதியாகிறது.
  • ஒருவர் கண்டுபிடித்ததை உலகம் முழுவதும் அனுபவிக்கிறது.
    உலகுக்குப் பயன்படும் பொருளை எளிய மனிதன் ஆர்வத்தால் முனைந்து கண்டுபிடித்து உலகத்தின் செல்வத்தைப் பெறுவதைக் காண்கிறோம் – பில் கேட்ஸ்.
    இரண்டிலும் பொதுவானது உலகம் பெறும் பயன்.
    மேதை உலகுக்குப் பயன்படும் விஷயத்தைக் கண்டுபிடித்தாலும், எளிய மனிதன் உலகுக்குப் பயன்படும் பொருளைக் – கம்ப்யூட்டர் – கண்டுபிடித்தாலும் உலகம் பெரும் புகழையும், பெரும் செல்வத்தையும் தருகிறது.
    உலகம் பெற்றுப் பயனடைவதில் எவர் ஆர்வம் காட்டினாலும் அவருக்கு அது பலிக்கும்.
    யோகம் உலகம் பெற வேண்டியது. அனைவருக்கும் சமமாக வழங்கப்படுகிறது.
    விமானம், இரயில் கண்டுபிடித்தவர் யாரோ, அனைவரும் பயணம் செய்கின்றனர்.
  • 1880--இல் அமெரிக்காவில் ஒருவர் Ph.D. டாக்டர் பட்டம் பெற்றார். அவரை மேதையாகக் கருதினர். இன்று ஒரு ஆண்டில் 50,000 பேர் Ph.D. பெறுகின்றனர்.
    நம்பிக்கையும், முயற்சியும் உள்ளவர் அனைவரும், ஒரு காலத்தில் உயர்ந்ததாகக் கருதப்பட்டதை இன்று பெறுவதை நாம் காண்கிறோம்.
  • நம்பிக்கை முழுமையானால் பலன் அபரிமிதமான அனந்தமாகும்.
    நம்பிக்கையை நாம் அளவால் கணக்கிடுகிறோம்.
    நம்பிக்கை தரத்தால் உயர்ந்து முழுமை பெறவல்லது.
  • எது தகுதி, எனக்கு உரியது எது? பெரிய யோகம் சிறியவனுக்குப் பலிக்குமா?
  • மனிதன் தன் தகுதியைத் தானே நிர்ணயித்துக் கொள்பவன்.
  • தேர்தல் வந்தபொழுது எளியவர் எல்லா உயரத்திற்கும் போகிறார்கள்.
  • படிப்பு வந்தபொழுது எதுவுமில்லாதவர் எல்லாம் பெறுகிறார்கள்.
  • யாகம், யக்ஞம் மூலம் வேதம் சச்சிதானந்தத்தைக் கடவுள்கள் உதவியால் பெற்றது.
    உபநிஷதம் வேதத்தைக் கடந்தது.
    கடவுள்களை அவர்கள் நம்பவில்லை.
    கடவுள்கள், ரிஷிகள் தவத்தைத் தொந்தரவு செய்ததும் உண்டு.
    கடவுள்கள் உதவியின்றி ரிஷிகள் சச்சிதானந்தத்தையும், அதைக் கடந்த பிரம்மத்தையும் அடைந்தனர்.
    அவர்கள் யாகத்தைப் பயன்படுத்தவில்லை.
  • ரிஷிகள் கடும் தவத்தால் பெற்றதை (உடலின் கடுமையான உழைப்பால் பெற்றதை) கீதை மனத்தின் நம்பிக்கையால் பெற்றனர். அவற்றைச் சரணம் செய்தும் பெற்றனர்.
    கீதை பெற்றது மோட்சம். அதன் கருவி சரணாகதி --- தர்மத்தைச் சரணம் செய்தனர். இது மனம்.
    பூரண யோகம் மோட்சத்தைச் சுயநலமாகக் கருதுகிறது.
    சத்திய ஜீவன் பிறப்பை நாடுகிறது.
    இது அளவுகடந்த பெரிய லட்சியம். இதன் கரு சரணாகதி – முழு ஜீவனைச் சரணம் செய்ய வேண்டும்.
    அளவுகடந்த பெரிய லட்சியத்தை, அளவுகடந்து எளிய முறையில் அடைவது.
    அதற்குரிய தகுதி – அளவுகடந்த பவித்திரம், பக்குவம் தூய்மை.
  • யோகத்திற்குத் தகுதியை குரு நிர்ணயிப்பது வழக்கம்.
    தகுதியுள்ளவரை குரு ஏற்பார்.
    தகுதியற்றவரை மறுப்பதுண்டு. தகுதிக்கு உடையவராக மாற்றுவதும் உண்டு.
    அது 25 வருஷம் பிரம்மச்சரியமாக இருப்பதுண்டு.
    அதையே மீண்டும் செய்ய வேண்டி வரும்.
  • அன்னையையொருவர் அறிந்தார் என்பது தகுதி.
    தகுதியற்றவர் புதுவையிலேயே இருந்தாலும் அன்னையை அறிய முடியாது.
    எந்த ரூபத்தில் அன்னையை ஒருவர் அறிந்தாலும், தகுதியில்லாமல் அது நடந்திருக்காது.
    தகுதியை அன்னை அன்பர்கட்குக் கொடுத்துவிட்டார்.
    பெற்றதை நிறைவேற்றுவது நம் பங்கு.
    எந்த அளவில் நாம் பயன் பெறுகிறோம் என்பது, எந்த அளவில் நாம் பயன்படுத்துகிறோம் என்பதைப் பொறுத்தது.
    நெகிழ்ந்த உள்ளம் மலர்ந்தால் முழுப்பலன் உண்டு.
  • பிரார்த்தனை பலித்த நேரம் நாம் பெற்றோம்.
    பலன் பெற்ற வகையை அறிந்தால், தவறாது இதுவரை நடக்காதது நடந்தது தெரியும்.
    அன்னை செயல்படும் அனைத்து நேரங்களிலும் இதுவரை எந்த யோகத்திலும் செயல்படாத சக்தி செயல்பட்டு இருப்பதைக் காணலாம். அதைக் காண்பது ஞானம்.

********



book | by Dr. Radut