Skip to Content

09. அஜெண்டா

அஜெண்டா

P.38 ஜன்னலை உடைத்த கல் உள்ளே வரவில்லை.
C. மீது கல் படவில்லை
N.S. கண்ணாடிச் சிதறல் மீது நடந்த பொழுது
காலில் கண்ணாடி குத்தவில்லை

  • ஆசிரமம் 1965இல் ஹிந்தி எதிர்ப்பால் தாக்கப்பட்ட பொழுது கல் அன்னை ஜன்னலை உடைத்தது, உள்ளே வரவில்லை. C. போலீசுக்குக் கூட்டத்து வழியாகப் போன பொழுது கல் அவர் மீது படவில்லை. N.S. போலீசுக்கு உடைந்த கண்ணாடி மீது நடந்து போனபொழுது காலில் கண்ணாடி குத்தவில்லை.
  • நேரம் எழுந்த பொழுது சத்திய ஜீவியம் தானே செயல்பட்டதால் ஏற்பட்டவை இவை.
  • இது அன்பர்கள் வாழ்வில் ஆயிரம் முறை நடந்தாலும் அவர்கள் மனத்தில் இது படுவதில்லை.
  • சிறுநீரகக் கல் வெள்ளிக்கிழமை கண்டது, திங்கட்கிழமை மறைந்துவிட்டது.
    • 200 மைல் அப்பால் தொலைந்துபோன பர்ஸ் நடுரோட்டில் புதரின் மீதிருந்தது.
    • உயிர் போகும் தருவாயில் பிழைத்த 70 வயது கடைநிலை ஊழியர் 20 ஆண்டு வாழ்ந்தது.
    • குருக்ஷேத்திரத்தில் வழி தவறிய தமிழ்ப் பெண் அன்னையை நினைத்தவுடன் தமிழ்க் குரலைக் கேட்டது.
    • கடன்கள் கேட்காமல் திரும்ப வந்தது.
    • ஸ்தாபனத் தலைவர் வெளி மனிதனுக்கு ஸ்தாபன சட்டத்திற்கு கட்டுப்பட்டு அடங்கி வெளியேறியது.
    • எதிரி, கோர்ட்டில் நமக்குச் சாதகமான ரிகார்டைப் பதிவு செய்தது.
    • 800 நாள் ஒரு தினசரிப் பத்திரிகையில் அன்னையைப் பற்றி எழுதியது.
    • 8 முறை தவறிய பரிட்சைகளில் 9ஆம் முறை தவறாது பாஸ் செய்தது.
    • ஸ்தாபனத்தில் புதியவர் ஸ்தாபனத் தலைவருக்கு சமமாக ஓராண்டில் உயர்ந்தது.
    • அன்னைச் சூழலை எட்ட இருந்து அறியாமல் அனுபவித்த கல்லூரி ஆசிரியர் I.A.S. பாஸ் செய்து இந்திராவுக்குச் காரியதரிசியாகி, கவர்னராகி, ஜனாதிபதியாக அழைக்கப்பட்டது.
    • 28 இலட்ச ரூபாய் கம்பனி 50,000 கோடியானது.
    • 2 கோடி கம்பனி அன்னை சட்டத்தால் 2½ வருஷத்தில் 100 கோடியாகி, பல ஆயிரம் கோடியானது.
  • நடக்காதது, நடக்க முடியாதது நம் வாழ்வில் நடப்பதை நாம் கண்டு கொள்வதில்லை.
  • 32 வயதில் திருமணமாகாமல் வீட்டுக் கோளாறில் சிக்கிய பெண்ணைக் கனடாவிலிருந்து வரன் வந்து மணந்தது, அவள் கற்பனைக்கும் எட்டாதது.
  • பெம்பர்லியை எலிசபெத் நினைக்கவில்லை, நினைக்க முடியாது.
  • நெதர்பீல்டை ஜேன் நினைக்கலாம், வழியில்லை, அருள் வழி வகுத்தது.
  • 1000 ரூபாய் சம்பளமில்லாத நாளில் அன்னை கோட்பாட்டின்படி பணம் சேர முனைந்து, 20 லட்சம் ஒரு வருஷத்தில் சேர்ந்தது கற்பனைக்கெட்டாதது.
  • 24 மணி நேரம் இடைவிடாத நினைவு எண்ணத்தைக் கடந்து நெஞ்சையும், நெஞ்சைக் கடந்து மனத்தையும், மனத்தைக் கடந்து ஆத்மாவையும் க்ஷண நேரம் தொட்டால் அற்புதம், அதிசயம், ஆச்சர்யம் அன்றாட நிகழ்ச்சி போல அன்று வரை நிகழும்.
  • அன்னையை அறிவது, அருளின் கருவியாவது.

******

 

ஜீவிய மணி
 
முயன்று சாதிப்பது மலை போன்ற சாதனை.
முயற்சியைக் கைவிட்டபின் சாதிப்பது
இறைவனுடைய சாதனை.
 
முயற்சி பெரியது. முயற்சியற்றது பிரம்மம்.
 
முயன்று சாதித்தது ரஷ்ய சோஷலிசம்.
முயலாமல் சாதித்தது அமெரிக்க சுபிட்சம்.
 
முயன்றால் உலகை வெல்லலாம்.
முயற்சியை கைவிட்டால் சுவர்க்கம் நாடிவரும்.
 
முயற்சி பக்தி.
முயற்சி முடிவது அருள்.
 

 
 
******

 



book | by Dr. Radut