Skip to Content

2. பெம்பர்லி

பெம்பர்லி 

Pride and Prejudice கதையில் டார்சியின் அரண்மனை பெம்பர்லி.

அதன் ஆண்டு வருமானம் £10,000. எஸ்டேட் 4000 ஏக்கர். 10 மைல் சுற்றளவு.

எலிசபெத் £ 2000 வருமானமுள்ள லாங்பார்ன் எஸ்டேட்டில் ஐந்து பெண்களில் ஒருவராகப் பிறந்து பெருங்குடி மகளாக சகல சௌகரியங்களையும் அனுபவித்து வளர்ந்தவள்.

சீதனமாகத் தாயார் மூலம் அவளுக்கு வந்தது £1000. அதன் வருஷ வருமானம் £50.

எஸ்டேட்டில் பிறந்து வளர்ந்து அனுபவித்தாலும் உரிமை அவளுக்கில்லை.

அவளுடைய சித்தப்பா மகனுக்கே எஸ்டேட் தகப்பனாருக்குப் பின் சேரும்.

தமக்கைக்கு 23 வயது. அழகி. திருமணமாகவில்லை.

வரன் என இதுவரை அவளுக்கோ, மற்ற தங்கைகட்கோ, தனக்கோ வரவில்லை.

எஸ்டேட்டை உரிமையுடன் பெறப்போகும் சித்தப்பா மகன் காலின்ஸ் கோமாளி.

அவன் மட்டும் இவளை மணம் புரிய முனைந்தான். அது அவளுக்குப் பொறுக்க முடியாத அவமானம்.

  • அவள் பொய்யே சொல்லமாட்டாள்.
  • அவள் மனம் ஒளியில் நிலைபெற்றது.
  • ஒளியின் சுதந்தரம் அவளை ஊக்குவித்தது.
  • ஒளி பொருந்திய மனம் மெய் மட்டும் கடைப்பிடித்தால் செல்வம் அவளைத் தேடி வரும் என்பது சட்டம்.
  • இவள் விஷயத்தில் பெரும் செல்வம் தேடி வந்ததை, வந்த வழி சரியில்லையென அவள் மறுத்தபின், வழியைச் சரிசெய்து மீண்டும் வந்தது. 

அந்த 4000 ஏக்கர் இன்று இந்தியாவிலும் 400 கோடி பெறும்.
இங்கிலாந்தில் மேலும் விலையுண்டு.

முழு சத்தியம் முழு மனதில் முழு அதிர்ஷ்டமாக வந்து முடியும்.

*******



book | by Dr. Radut