Skip to Content

13. லைப் டிவைன் - கருத்து

லைப் டிவைன் - கருத்து

Page 40  தெய்வீக ஆத்மா தன்னைப் போன்ற விடுதலை பெற்ற

              ஆத்மாவில் தன்னைப் பெருக்கிக் கொள்கிறது

  • உலகம் பரந்து விரியும் உருவமுள்ளது.
  • பூரணம் பூர்த்தியாக பக்கவாட்டிலும் உயரத்திலும் பூரணம் தன்னை விரிவுபடுத்த வேண்டும்.
  • ஒருவனுடைய நகை கடை பெரும்பலன் கொடுத்தால் அநேக நகை கடைகள் எழுகின்றன.
  • வாழ்வு பூரணம் பெற ஆரம்பித்தால் பல கோணங்களிலும் அது விரிவு பெறும்.
  • ஒரு வீட்டில் ஒருவர் புதிய தொழில் ஆரம்பித்தால், படிப்பை நிறுத்தியவன் படிக்க விரும்புகிறான்.
  • பயிரிடுபவன் புதிய பயிர் செய்ய முயல்கிறான்.
  • ஊரில் இதுவரை இல்லாத பழக்கங்கள் உற்பத்தியாகி உயிர் பெறுகின்றன.
  • பஞ்சாயத்துத் தலைவர் MLAஆகப் பிரியப்படுகிறார்.
  • உயிர் ஓரிடத்தில் எழுந்தால் அனைவருக்கும் அனைத்திற்கும் உயிர் வரும் என்பது சட்டம்.
  • உயிர் என்பது பொது, அனைவரும் பொதுவாகப் பெறுவது.
  • குளத்தில் கிழக்குக் கோடியில் ஒரு அடி நீர் மட்டம் உயர்ந்தால் மேற்கே, தெற்கே, வடக்கேயும் உயரும்.
  • ஓர் அடி உயர புது வாழ்வு எழும். இதுவரை குளத்திலில்லாத வகை செடிகளும் மீன்களும் உற்பத்தியாகும்.
  • இம்மாற்றம் பூமி எங்கு மட்டுமில்லாமல், பிற கிரகங்கட்கும் பரவுமா என்ற கேள்வியை பகவான் எழுப்புகிறார்.
  • உலகில் ஒரு மனிதன் பூரணம் பெற்றால் அவனால் உலகமே முன்னேறும் என சாவித்திரியில் (பக்கம் 531) பகவான் கூறுகிறார்.
  • இந்திய சுதந்திரம் ஆசிய ஆப்பிரிக்க நாடுகட்குப் பரவியது.
  • ஹிப்பி இயக்கம் உலகமெங்கும் பரவியது.
  • மாணவர் போராட்டம் நாடு முழுவதும் பரவி தொழிலாளர் போராட்டமாகவும் பெண்கள் இயக்கமாகவும் மாறுகிறது.
  • 1946இல் அகில இந்திய இரயில்வே தொழிலாளர் போராட்டம், அகில இந்திய தபால் ஊழியர் போராட்டமாகவும், அகில இந்திய மாணவர் இயக்கமாகவும், கப்பல் படை ஊழியர் எழுச்சியாகவும் மாறி, 1947இல் சுதந்திரத்திற்கு வழிகோலியது.
  • அதனால் தனி மனிதனே மூலம், அவனே இரகஸ்யம் என்கிறார் பகவான்.
  • ரஷ்ய புரட்சி உலகெங்கும் பொது உடைமையைக் கொண்டு வந்தது.

*******



book | by Dr. Radut