Skip to Content

11. யோக வாழ்க்கை விளக்கம் VI

யோக வாழ்க்கை விளக்கம் VI

(சென்ற இதழின் தொடர்ச்சி....)

கர்மயோகி

II/48) மனம் தானிழந்த சத்தியஜீவியத் தொடர்பைப் பெற்றால் நமக்கு அந்த ஞானம் எழும்.

  • இழந்த தொடர்பு இல்லாத ஞானம் தரும்.
  • ஒரு ஜெர்மானியர் போரில் கைதியாக ஷாங்காய் நகரில் அகதி முகாமிலிருந்தார்.
    இவர் டாக்டர் பட்டம் பெற்றவர்.
    இவருக்கு ஜெர்மனி மொழி தவிர வேறெதுவும் தெரியாது.
    தண்ணீர் குடிக்கவும், சாப்பாடு பெறவும், பேப்பர், பேனா பெறவும் எவரிடமும் பேச முடியாது.
    அகதி முகாமில் அத்தனை வசதியுண்டு.
    கேட்டுப் பெறும் மொழி தெரியவில்லை.
    தொழில் நிபுணர்கள் டாக்டர், வக்கீல், அறிஞர், மேதை, அரசியல் தலைவர்கள் மொழி தெரியாமல் தன்னைப் போல் திணறுவதைக் கண்டார்.
    அவர் அமெரிக்கா வந்து சேர்ந்தார்.
    சர்க்காரில் நிதி மந்திரியானார்.
    அவர் எழுதிய புத்தகம் லட்சக்கணக்காக விற்றது.
    ஓய்வு பெற்று ஒரு கம்பனி ஆரம்பித்தார்.
    அதன் செலாவணி 50 கோடி ரூபாய்.
    எந்தத் திறமையும் பலிக்காத இடம் மொழி தெரியாத அகதி முகாம்.
    திணறும் இளைஞர்களைக் கண்டால் ஷாங்காயில் உன்னால் ஜெயிக்க முடியுமா எனக் கேட்பார்.
  • சேலத்து மூதாட்டி குருக்ஷேத்திரத்தில் வழி தவறி திணறிய பொழுது அவருக்கு உதவும் சக்தி ஒன்றில்லை எனக் கண்டார்.
    முடிவாக அன்னை உதவினார்.
  • மனிதனை அன்னை நாடி வருகிறார்.
    மனிதன் அன்னையின் தொடர்பை இழந்தவன்.
    சேலம் பாட்டி "மதர்" என்று கூறிய க்ஷணம் தமிழ் காதில் விழுந்தது. பிழைத்தார்.
    இழந்த தொடர்பைப் பெற்றால் இல்லாத வசதி வரும்.
  • பிரம்மம் சிருஷ்டித்தது.
    முதற்கட்டமாக அது இயற்கையாயிற்று.
    அந்த இயற்கையின் உருவம் சத்.
    சத், சத்; சித், ஆனந்தமாகி சச்சிதானந்தமாயிற்று.
    சச்சிதானந்தம் அகம், புறமாகப் பிரிந்து சத்தியஜீவியமாயிற்று.
    சச்சிதானந்தம் அகம்.
    சத்தியஜீவியம் புறம்.
    சத்தியஜீவியம் அகம் புறமாகப் பிரிந்தது.
    அவற்றிடையே மனம் உற்பத்தியாயிற்று.
    மனம் சத்தியஜீவியத்தினின்று எழுந்தது.
    அத்தொடர்பை சிருஷ்டியில் இழந்தது.
    பரிணாமத்தில் அதை மீண்டும் பெறலாம்.
    பெற்றால், இல்லாத ஞானம் எழும்.
  • அதன் பிரதிபலிப்பு, சாயலை - வாழ்வின் எல்லா நிலைகளிலும் காணலாம்.
    யானையைக் கண்ட குருடனும், நகரத்தை அறியாத கிராமப்புறத்து மனிதர்களும், பாங்கு உதவியைப் பெறாத மக்களும், உலகில் உள்ள நிலையை அறியாத மேலை நாட்டாரும், ஆயிரம் வகையில் இருந்த தொடர்பை இழந்தவர்.
  • டார்சி உயர்ந்த உள்ளம் பெற்ற உயர்குடிப் பிறந்து அதை இழந்தவன்.
    இழந்தவன் அதை மீண்டும் பெற்று உயர்குடிப் பிறந்தவனினும் உயர்ந்தவனானான்.

******

II/49) முரண்பாட்டை உடன்பாடாகக் கண்டால் அதுவே ஆரம்பம். இது சிந்தனையை ஸ்தம்பிக்கச் செய்யும் - முனிவர்.

  • முரண்பாட்டை ஏற்கும் முனிவர் மௌனம்.
  • உலகில், சிருஷ்டியில் மிகப்பெரிய முரண்பாடு இன வேறுபாடு - ஆண், பெண்.
  • அதுவே உயர்ந்த உத்தம உடன்பாடு.
  • முரண்பாடு கூப்பாடு - தூரத்திலிருந்து எழுப்பும் குரல்.
  • மனிதன் சத்தியஜீவியத்தை எட்ட நான்கு நிலைகளைக் கடக்க வேண்டும்.
  • கடந்தபின் பொன் மூடியை களைய வேண்டும்.
  • February 29, 1956இல் அன்னை பொன் கதவையும், பொன் மூடியையும், பொன் சுத்தியையும் கண்டார்.
  • சுத்தியால் மூடியைத் தகர்த்தார்.
  • பொன்னொளி வெள்ளமாக உலகில் பரவி பூமியைச் சூழ்ந்தது.
  • உலகில் தமஸ் - சோம்பேறித்தனம் - எழுந்து அதை விழுங்கியது.
  • மூடி உடன்பாடல்ல, முரண்பாடு.
  • அதுவே சத்தியஜீவிய வாயில்.
  • மூடியே முடிவானாலும், முனிவர் மனநிலையே ஆரம்பம்.
  • முனிவர் மௌனத்திற்குரியவர்.
  • அடுத்தவர் ரிஷி.
  • ரிஷிக்குரியது திருஷ்டி.
  • ரிஷிக்கு அடுத்தவர் யோகி.
  • யோகிக்குரியது நேரடி ஞானம் (intuition).
  • நேரடி ஞானத்திற்குச் சிந்தனையோ, மௌனமோ, ஜோதியோ தேவையில்லை.
  • அது ஞானத்தை நேரடியாகப் பெறும்.
  • அடுத்த நிலைக்கு ஞானம் தேவையில்லை.
  • அது அவதாரப் புருஷனுக்குரியது.
  • அவதாரம் ஞானமுடையது.
  • அவதாரம் ஞானம் பெற்றிருந்தாலும், அஞ்ஞானமும் அந்த லோகத்திற்குரியது.
  • கிருஷ்ண பரமாத்மா அவதாரம்.
  • கிருஷ்ண பரமாத்மா பாண்டவர், கௌரவர் முரண்பாட்டை உடன்பாடாக்கினார்.
  • அதையடைய அவர் கௌரவர்களை அழித்தார்.
  • கௌரவர்களை அழிக்காமல் அந்த உடன்பாட்டை நாட, கௌரவர்கள் திருவுருமாற வேண்டும்.
  • பாரதக் காலத்தில் திருவுருமாற்றமில்லை.
  • ஆங்கிலேயன் நாட்டை விட்டுப் போக சம்மதித்தது திருவுருமாற்றம்.
  • ஆங்கிலேயன் திருவுருமாறினான். முஸ்லீம்கள் திருவுருமாறவில்லை.
  • இந்தியா மனம் மாறினால், பாக்கிஸ்தான் திருவுருமாறும்.
  • இந்தியா, பாக்கிஸ்தான் பிரிவினை என்பது இந்திய அரசியல் பிரச்சனையல்ல. வர்ணாசிரம தர்மம் அழியும் பிரச்சனை.
  • ஜாதி உயர்வு பாக்கிஸ்தானை ஏற்படுத்தியது.
  • ஜாதி உயர்வு, தாழ்வை இந்தியா கைவிட்டால் பாக்கிஸ்தான் மீண்டும் நம்முடன் சேரும்.
  • அதற்கு முதல் நிபந்தனை மௌனம்.

தொடரும்....

*******



book | by Dr. Radut