Skip to Content

07. தமிழ்நாட்டுப் பழமொழிகளும் ஸ்ரீ அரவிந்தமும்

தமிழ்நாட்டுப் பழமொழிகளும் ஸ்ரீ அரவிந்தமும்

(சென்ற இதழின் தொடர்ச்சி....)

கர்மயோகி

  1. பூ மலர்ந்து கெட்டது, வாய் விரிந்து கெட்டது.

    மலர்ந்த மலர் மணம் வீசி நிறைந்தது.

  2. எரிகிற வீட்டிலே பிடுங்கியது லாபம்.

    எரிகிற வீடு தரித்திரத்தை எரிக்கும்.

  3. சாதுரியப் பூனை மீன் இருக்க, புளிமாங்காய்த் திங்கிறதாம்.

    புளி மாங்காயும் மீனாகும் சாதுரியம்.

  4. வெறும் வாய் மெல்லுகிற அம்மையாருக்கு, அவல் அகப்பட்டதுப் போல.

    வாய் மெல்லும் அவல், மெல்லும் வாயையும் கேட்கும் காதையும் மணக்கச் செய்யும்.

  5. பந்தியில் வேண்டாம் வேண்டாம் என்றாலும் இலை பொத்தல் இலை பொத்தல் என்கிறான்.

    இலையில் கண்ட பொத்தல், பொத்தல் இலையே இல்லையெனச் செய்யும்.

தொடரும்....

*******



book | by Dr. Radut