Skip to Content

06. அன்பு அமிர்தமாகி, அபரிமிதம் அனந்தமாகும் அழைப்பு

அன்பு அமிர்தமாகி, அபரிமிதம் அனந்தமாகும் அழைப்பு

(சென்ற இதழின் தொடர்ச்சி....)

கர்மயோகி

 • திருடனுக்கு அனைவரும் ஆதரவு

  பிரபலம், உலகம் அறிந்தவர், பேர் பெற்றவர் என்பவை பல தரங்கள்.

  பாடகர்கள், பேச்சாளர்கள், அழகாகப் பழகுபவர், பணக்காரர், பெரிய உத்தியோகஸ்தர்கள், பெரிய இடத்துப் பிள்ளைகள், பிரபலமாக இருப்பார்கள்.

  அனைவரும் அறிவது என்பது பல இடங்களுக்குப் போவது, பலரிடமும் பழகுவதால் வருவது.

  பிரபலம் என்றால் ஊர் ஒருவரை அறிவது. அறியப் பெருமைப்படுவது.

  பேர் போனவர் என்பது ஒரு நல்ல விஷயத்திற்காக அனைவரும் ஒருவரை மரியாதையாக நடத்துவது.

  பலரும் ஒருவரைத் தெரிந்து கொள்ளப் பிரியப்படுவது பிரபலம்.

  பலரையும் ஒருவர் தெரிந்து கொள்வதால் அவர் பிரபலம் ஆகிவிடுகிறார்.

  எந்த வகையான பிரபலமும் ஒரே வகையான மக்களிடையே எழும்.

  பிரபலமானவர், அவரைப் பிரபலமாக்கும் மக்கள் போலிருப்பார்.

  பொது ஜனம் நினைப்பதற்கு (popular consciousness) மாறான மனநிலை உள்ளவரை ஊர் ஏற்காது. ஏற்க மறுக்கும்.

  அதுவும் மெய், பொய் என்ற பாகுபாடு வந்துவிட்டால் கட்சி பிரிவது தெளிவாக இருக்கும்.

  மெய்யானவரை விட்டு மக்கள் விரைவாக அகல்வர். பொய்யை உலகம் எப்பொழுதும் விரைந்து, விரும்பி ஏற்கும்.

  என்னுடன் வேலை செய்த மிராசுதாரரையும், பேராசிரியரையும் உலகம் வரவேற்கும்.

  அவர்கள் மனத்தில் மற்றவரைப் போலிருக்கிறார்கள்.

  அவர்கள் மனம் தயாராகப் பொய்யை ஏற்கும்.

  முழுவதும் மெய்யானவனை எவரும் அணுகமாட்டார்கள்.

  ஆதரவு திருடனுக்கு, அதுவே பொதுமக்கள் அபிப்பிராயம்.

 • நல்லபடியாக நடப்பது
  • ஒருவரிடம் நல்லபடியாக நடப்பதற்குப் பலனில்லை.
   அனைவரிடமும் நல்ல பெயர் எடுப்பதே நல்லவர் என்பதற்கு அடையாளம்.
   • நல்லவராக இருப்பது வேறு, நல்ல பெயரெடுப்பது வேறு, நல்ல பெயர் எடுக்க விரும்புவது அகந்தையின் முயற்சி.
   • பண்பின் பயிற்சியாக, அனைவரிடமும் நல்ல பெயர் எடுக்குமாறு முயன்றால் வாழ்வே கசப்பாகும். கசப்பு, நம் முயற்சி உண்மை என அறிவிக்கும்.

    ஒருவருக்கு இதில் பலன் கிடைத்தால் அது மணலில் சைக்கிள் விடுவது போல் அங்குலம் அங்குலமாக நகரும். 15 பேர் உள்ள இடத்தில் 14 பேரிடம் பெயரெடுத்தால், 15வது நபர் சூட்சுமமாக உஷாராகிவிடுவார். நாமும் நல்லவர் என்று கூறிவிட்டால், "அவர்” நிலை அளவுகடந்து உயர்ந்துவிடும் என அவருக்குத் தெரியும். அதை முயன்று பெறுவது பெரிய வெற்றி. உள்ளூர் பஞ்சாயத்தில் மெம்பராவது முதல் 14, கடைசி 15 MLA, MPஆவது போல்.

   • குடும்பத்தில் அபரிமிதமான சுபிட்சம் (abundant prosperity) பெற இது நல்ல முறை.

    பிரபலமானவருக்குப் பஞ்சமிருக்காது.

    நல்ல பெயரெடுத்தவர்க்கு அதிர்ஷ்டம் வராமலிருக்காது.

    அனைவரிடமும் நல்ல பெயர் எடுத்தபின் பெரிய அதிர்ஷ்டம் ½ நிமிஷம் தயங்காது.

    இதுவரை குடும்ப வாழ்வு.

    மேற்கொண்ட கட்டங்கள் யோகத்திற்குரியன.

 • ஆதாயம் பலனை அனுபவிப்பது

  பாசம் உணர்ச்சியைப் பாராட்டுவது.

  ஆத்மாவைப் போற்றும் வாழ்வு பிரியம் அழகாகும் அன்பு.

  உணர்வின் பிரியம் மனத்தால் அறிவானால் அது ஆத்மாவில் அன்பாகும்.

  இறந்த குழந்தையை உயிர்ப்பிக்க புத்தரை வேண்டியவரை எவரும் இறக்காத வீட்டிலிருந்து ஒரு பிடி கடுகு வாங்கி வா என்றார் புத்தர்.

  அன்பு கடுகில் பிறந்த மாம்பழம்.

  பிறந்தால் க்ஷணம் தரியாது.

  மாம்பழம் ஆன்மீக விவேகம் (அன்னை அளித்த பெயர்).

  அன்பு ஆத்மா உணரும் ஆனந்தம்.

  ஆத்மாவின் ஆனந்தம் ஆன்மீக விவேகம் பெறுவது அன்பு மலரும் அகிலத்தில் வாழ்க்கை.

  அன்னையை ஆத்மாவில் அறிவது அன்பு அழகொழுக மிளிர்வது.

  அன்னையை அறிவது ஆத்மா பெற்ற பாக்கியம்.

  அவர் நினைவு இனிப்பது ஆழம் மேலெழும் அவனி கொள்ளா வெள்ளம்.

  நினைவு நிலைப்பது சத்தியம் நித்தியமாவது.

  ஆழம் அடி மனம்.

  ஆன்மா அடி மனக்குகையில் உள்ளது - சைத்தியபுருஷன்.

  சைத்தியபுருஷன் உலகை உள்ளங்கையாக்கி உள்ளே புதைப்பது.

 • நாம் பெறும் பலன்
  • போன் வேறு யாருக்கும் வரக்கூடாது எனில் நமக்குமில்லாமல் போகும்
   • அனைவரும் செய்யும் வேலையில் அனைவரையும் விலக்கும் மனப்பான்மை நம் வேலையைக் கெடுக்கும்.
   • அனைவர் வேலையும் நம் வேலை.
   • அனைவரும் சேர்ந்து செய்யாமல் நம் வேலை நடக்காது.
   • அன்னை ஜீவியம் பிரபஞ்ச ஜீவியம்.
    தனியாக நடப்பதில்லை.
    சொந்த வேலை தனியாக நடக்கும்.
    அன்னை (Mother) கொடுப்பது தனியாக வாராது.
    அனைவருக்கும் வரும்.
    அனைவரும் பெற வேண்டும் என்ற எண்ணம், அன்னையை உடனே அழைத்து வரும்.
    நாம் ஒரு புஸ்தகம் வாங்கிப் படிக்கலாம்.
    பலரும் வாங்காவிட்டால் புத்தகம் வெளியிட முடியாது.
   • வாழ்வில் அதிர்ஷ்டம் ஒருவருக்குரியது.
    அன்னை அதிர்ஷ்டம் என்பது அனைவருக்கும் உரியது.
    பரநலம் - அனைவரையும் நினைக்கும் மனம், பரந்த மனம் - அன்னை அதிர்ஷ்டத்தைத் தயாராக ஏற்கும்.
    அதிர்ஷ்டம், பேரதிர்ஷ்டம், அன்னை அதிர்ஷ்டம், அருள், பேரருள், அதையும் கடந்த நிலை - அருளே வாழ்வாக அமைந்த உலகம்.

   "நீ சொல்லி நான் எப்படிச் செய்வது?'' - முதலாளி.

   "நான் சொல்லி எப்படி உலகம் ஏற்கும்?'' என அன்பர் நினைக்கிறார்.

   அவர் பகவான் சொல்லின் பவித்திரத்தை அறியாதவர்.

   தன் பர்சனாலிட்டிக்குப் பவர் உண்டு என நினைக்கிறார்.

   தான் சிறிய மனிதனாக இருப்பதால் உலகம் ஏற்காது என நினைக்கிறார்.

   தன்னை மறந்து சொல்லுக்குப் பவர் (power) உண்டு என நினைப்பது உண்மை (sincerity).

   தோப்பு மேனேஜர் அதைச் செய்தார்.

   நம்மால் முடியுமா என நினைக்காமல், இந்தச் சொல் சக்தி வாய்ந்தது என நினைப்பது (faith, sincerity), நம்பிக்கை, உண்மை.

   அது மனமாற்றம், மனம் நம்மிடமிருந்து பகவானுக்கு மாறுவது.

   அந்த மாற்றம் ஏற்படும் நேரம் (Hour of God. We can say it is your own Hour). இறைவன் வரும் தருணம். இறைவன் அன்பரை நோக்கி வரும் தருணம் எனலாம்.

   நம்பிக்கை எழுவது நானிலம் மலர்வது.

   நம்பிக்கை உள்ளே பூத்தால் நலம் நிலையாக நிலைக்கும்.

   கணவன் மனைவியை நம்புவதும், மனைவி கணவனை நம்புவதும் தெய்வ நம்பிக்கைக்குச் சமம்.

   நம்பிக்கை நம்புபவரை தெய்வமாக்கும்.

   ஒருவர் நம்பிக்கையால் அடுத்தவர் தெய்வமாவார்.

தொடரும்....

*********

ஸ்ரீ அரவிந்த சுடர்
 
வாழ்வில் எல்லாம் இருப்பவனுக்கும் எதுவுமே முடியாத நேரம் உண்டு. அன்னையில் எதுவுமே இல்லாதவனுக்கும் எல்லாம் முடியும் நேரம் உண்டு.

*******book | by Dr. Radut