Skip to Content

03. சாவித்ரி

சாவித்ரி

P.131 And all her sweetness into a maimed desire

        இனிமையெல்லாம் சிதைந்த ஆசையாயின

  • காலனுக்குச் சேவை செய்யும் கதியே அவள் வாழ்வின் விதி.
  • அவள் நித்தியம் பெற்ற முகத்திரை,
  • கண் மூடியவற்றின் கண் திறக்கும் கடமை,
  • நிலையான மரணத்தின் நிலையற்ற சிறு நிகழ்ச்சி,
  • அழிய வேண்டிய புதிரின் அழிவில்லா ஜீவன்.
  • அதுவே அவள் தீமை புதிரென பெறும் உருவம்.

******

Canto Four

சிறு வாழ்வின் பெரு இராஜ்ஜியங்கள்

P.132 A QUIVERING trepidant uncertain world

         நிலையற்ற லோகம் நடுங்கும் அலை எழுப்பும்

  • அர்த்தமற்ற சந்திப்பில் எழுந்தது
  • அவள் பாதம் பட்ட வெற்றிடத்து கிரகணம்,
  • சுறுசுறுப்பான இருள், ஆர்வமிகு அசைவு,  
  • அரைகுறையாக விழித்தெழுந்த அவதி
  • ஜட இருளின் உறக்கத்தினின்று எழுந்தபாடில்லை,
  • உணர்வால் உந்தப்படும் அஞ்ஞானத்துடனிணைந்தது,
  • தன்னையறியவும், தன் பிடியில் மற்றதைக் கொள்ளவும்,
  • ஏழ்மையையும், நஷ்டத்தையும் வாரிசாகப் பெற்றது,
  • மிரட்டலுக்குப் பயந்து விலகும் நினைவுகளின் தாக்குதல்கள்,
  • அன்று மறந்த நம்பிக்கையின் மகிமை இன்று பிடித்து உலுக்குகிறது,
  • தடவும் கைகளின் குருட்டு அசைவு எடுக்கும் முயற்சி,
  • ஆபத்தும் வேதனையும் அகன்று விரியும் பிளவை நிரப்பும்
  • வாழ்விழந்த ஆனந்தத்திற்கும் பூமாதேவியின் வேதனைக்குமிடையே
  • இழந்ததை நாடும் உயர்ந்த வாழ்வு.
  • புவியை விட்டகன்ற சந்தோஷத்தை நாடித் தேடும்,
  • திருப்தியும் நிம்மதியுமின்றி வாயிலருகே வந்து நிற்கும்.
  • திடமான ஜட பூமியில் அமைதி நின்று நிலைபெற
  • அதன் தேவை பூமியின் பசியுடன் கலந்தது;
  • ஆசையின் வேகத்தை வாழ்வுக்கு அது சட்டமாக அளித்தது,
  • ஆத்ம தேவையை ஆழமறியாத கடலாக்கியது,
  • அழியும் இரவு பகலில் எழுந்த சக்தியொன்று,
  • காலத்தின் கர்மத்தால் கட்டுண்ட இனத்தின் மீது படிந்த நிழல்,
  • கலங்கிய நீரோட்டத்தில் எழுந்த குருட்டு இதயத்துடிப்பு.
  • புலனில் விழித்தெழும் நரம்பின் துடிப்பு
  • ஜடத்தின் உறக்கத்தை மனத்தின் விழிப்பினின்று பிரித்தது,
  • எங்கிருந்து வந்தது ஏன் வந்தது என்றறியாத அழைப்பு ஒன்று வந்துளது.
  • பூமியைக் கடந்த சக்தி வந்து பூமியைத் தீண்டியது;
  • கிடைத்திருக்கக்கூடிய அமைதி இல்லாமற் போய்விட்டது;
  • உருவமற்ற ஏக்கத்தின் தீவிரம் மனித இதயத்திற்குரியது,
  • சந்தோஷம் வேண்டும் என்ற கூக்குரல் வேகமாக எழுந்தது

******

 

ஸ்ரீ அரவிந்த சுடர்
 
Mother என்ற மந்திரம் ஓம் என்பதைக் கடந்தது.
 
 
*******
 
 
ஸ்ரீ அரவிந்த சுடர்
 
அறிவு இருப்பதால் மட்டும் உலகம் ஏற்காது;
ஆன்மீகத்தையும் ஏற்காது. பணமிருப்பதால் உலகம்
ஏற்கும் எனில் பணத்தை ஏற்கும்;
பணத்திற்காக மனிதனை ஏற்காது.
உலகம் ஒருவரை ஏற்க உலகத்திற்கு அவர்
தேவைப்பட வேண்டும்.
உலகம் தேவைக்கு ஏற்கும்;
உயர்வுக்காக ஏற்காது.
 
 
 ******



book | by Dr. Radut