Skip to Content

01. வாழ்க்கையில் சாதிப்பது

வாழ்க்கையில் சாதிப்பது

N. அசோகன்

ஆணாக இருந்தாலும், பெண்ணாக இருந்தாலும் வாழ்க்கையில் அவரவருக்குத் திருப்தி தரும் வகையில் ஏதேனும் அர்த்தமுள்ள சாதனை செய்ய வேண்டும் என்றுதான் விரும்புவார்கள். 18ஆம் நூற்றாண்டின் இறுதியில் இங்கிலாந்து நாட்டில் தொழிற்புரட்சி வந்து, எந்திரங்களின் உதவியுடன் உற்பத்தியைப் பெருக்கி தொழில் வளம் மற்றும் நாட்டின் பொருளாதார வளத்தை உயர்த்துவதற்கு முன்னால், உலகம் முழுவதும் இராஜவம்சத்தையும், பிரபு வம்சத்தையும் சேர்ந்தவர்களைத் தவிர பொதுமக்கள் என்று பார்த்தால் வசதி வாய்ப்பின்றி ஏழ்மையில்தான் இருந்தார்கள். தொழிற்புரட்சி வந்து நாட்டில் செல்வ வளம் உயர்ந்த பிறகும்கூட குடியாட்சி மூலம் வந்த சுதந்தரமும், கல்வி கற்கும் உரிமையும் பொதுமக்களுக்கு கிடைத்த பின்னர்தான் தாமும் வாழ்க்கையில் உயர முடியும் என்ற நம்பிக்கையே பொதுமக்களுக்கு வந்தது. ஆகவே நடைமுறையில் பார்த்தோம் என்றால் இரண்டாம் உலகப் போர் முடியும் வரையிலும் வாழ்க்கையில் பெருமளவு சாதிக்க முடியும் என்ற நம்பிக்கை காலனி ஆதிக்கத்தின்கீழ் இருந்த ஆசிய, ஆப்பிரிக்க நாடுகளிலிருந்த பெருவாரியான குடிமக்களுக்கு இல்லாமல் இருந்தது. அதாவது உயிர் பிழைத்தால் போதும், இருப்பதற்கு ஓர் இடம், உடுப்பதற்கு ஒரு சில துணிமணிகள் மற்றும் மூன்று வேளை சாப்பிட சாப்பாடு கிடைத்தால் போதும் என்ற நிலையில்தான் மக்கள் வாழ்ந்து வந்தார்கள்.

ஆனால் இப்பொழுது நிலைமை முற்றிலும் மாறியிருக்கிறது. காலனி ஆதிக்கம் மறைந்து 60 வருடங்களுக்கு மேல் ஆகிறது. ஜனநாயக சுதந்தரம், அனைவருக்கும் படிப்புரிமை, அடிப்படை மனித உரிமைகளுக்கான பாதுகாப்பு, சோஷலிச, பொருளாதார பாலிசிகளால் குடிமக்களுக்குக் கிடைக்கும் சலுகைகள் என்றிவற்றின் காரணமாக எந்தவொரு தனி மனிதனுக்கும் ஏராளமாக சாதிக்கக்கூடிய வாய்ப்புகள் வந்துவிட்டன. இன்று சமூகத்தில் கிடைக்கும் ஆதரவை வைத்துக் கொண்டு படிப்பு வாசனையே இல்லாத மக்களுடைய குழந்தைகள்கூட அவர்கள் விரும்பினால், படிப்பில் நல்ல கவனம் செலுத்தினால், M.A. லெவலில் பட்டம் பெறுவதற்கு வாய்ப்பிருக்கிறது. இம்மாதிரியே தாழ்த்தப்பட்ட ஜாதியில் பிறந்த பிள்ளைகள்கூட இன்று சற்று சுறுசுறுப்பாகவும் dynamicகாகவும் செயல்பட்டார்கள் என்றால் I.A.S. அதிகாரியாகவும் வருவதற்குக்கூட வாய்ப்புகளுண்டு. இன்றைய சமூகத்திலுள்ள பெருவாரியான மக்கள் பிரதானமாக சாதிக்க விரும்புவதே ஒரு சில குறிப்பிட்ட விஷயங்கள்தான். நல்ல வேலை, நிறைய வருமானம், நிறைய சேமிப்பு, நல்ல வீட்டு வசதி, பிள்ளைகளுக்கான நல்ல படிப்பு வசதி, பெண் பிள்ளைகளுக்கு நல்ல இடத்தில் திருமணம் மற்றும் சமூகத்தில் ஒரு நல்ல social status என்று இவற்றைத்தான் பெரும்பாலான மக்கள் நாடுகிறார்கள். அடைந்து காட்ட வேண்டுமென்று விரும்பி செயல்படுகிறார்கள். இப்படி, தான் விரும்பியவற்றை அடைவதற்குக் கடுமையாக உழைக்க முன்வருகிறார்கள். மேலும் ஏதேனும் ஒரு துறையில் செயல்படும் வகையில் படிப்பு மற்றும் பயிற்சி மூலம் தம்மைத் தயார் செய்து கொண்டு தாம் விரும்புகின்ற வருமானம், வீட்டு வசதி, கார் வசதி, சேமிப்பு என்றிவை எல்லாவற்றையும் அத்துறையில் சம்பாதித்துப் பெற்றுக் கொள்ள முடியுமா என்றும் பார்த்துக் கொள்கிறார்கள்.

பெருவாரியான மக்கள் இப்படியிருக்க ஏதோ ஒரு சிலர்தான் கோடிக்கணக்கில் சம்பாதிக்க வேண்டும், பிஸினஸ் சாம்ராஜ்ஜியம் நிறுவ வேண்டுமென்றும் மற்றும் அரசியலில் நுழைந்து M.L.A., M.P., மந்திரி என்று உயர வேண்டும் என்று பெரிய அளவில் சாதிக்க விரும்புகிறார்கள். வெறும் கடின உழைப்பால் மட்டும் இவர்கள் இப்படி பெரிய அளவில் சாதிப்பதில்லை. கோடிக்கணக்கில் வருமானம் பார்க்க விரும்புகின்றவர்கள் மற்றவர்களைவிட வேகமாக சம்பாதிக்கும் ஒரு திறமையை வளர்த்துக் கொள்கிறார்கள். அவர்களுடைய சம்பாதிக்கும் வேலையை மற்றவர்களைப்போல் சிறிய அளவில்தான் இவர்களில் பல பேர் ஆரம்பிக்கின்றார்கள். உலகத்தின் பத்து பெரிய கோடீஸ்வரர்களில் ஒருவரான Bill Gates தன் வீட்டு கார் காரேஜில் இரண்டு கம்ப்யூட்டர்களை வைத்துக் கொண்டுதான் அவருடைய software பிஸினஸை தொடங்கினார் என்று ஒரு வதந்தி இருக்கிறது. அம்மாதிரியே ரிலையன்ஸ் பிஸினஸ் சாம்ராஜ்ஜியத்தை நிறுவிய Dhirubhai Ambani அவர்கள் துபாயில் ஒரு பெட்ரோல் பங்கில் வெறும் அக்கௌன்டண்ட்டாகத் தன்னுடைய careerஐ தொடங்கினார் என்று சொல்லப்படுகிறது. அவர்கள் ஆரம்பிக்கின்ற வேலை மற்றும் ஸ்தாபனம் தொடக்கத்தில் சிறிய அளவில் இருக்கின்றது என்றாலும் அதிவேகமாக அந்த வேலையும் ஸ்தாபனமும் பல மடங்கு பெருகி ஒரு பெரிய சாம்ராஜ்ஜியம் என்ற அளவிற்கு 15, 20வருடங்களில் விரைவில் வளர்ந்துவிடுகிறது. இதற்குக் காரணம் என்னவென்றால் அவர்கள் பணத்தின் விசேஷத் தன்மைகளை மற்றவர்களைவிட சிறப்பாகப் புரிந்து கொள்கிறார்கள். அம்மாதிரியே வேலையின் விசேஷத் தன்மைகளையும் புரிந்து கொள்கிறார்கள். அதாவது பணம் எப்படி உற்பத்தியாகிறது? என்ன செய்தால் அது அபிவிருத்தியாகும்? பணம் எதனால் கவரப்படுகிறது? பணத்தையும், வேலையையும் ஒன்றையொன்று அதிகரிக்கும் வகையில் இணைப்பது எப்படி? என்று இம்மாதிரியான பணத்தையும், வேலையையும் பற்றிய நுணுக்கங்களை மற்றவர்களைவிட சிறப்பாகப் புரிந்து கொள்கிறார்கள். Organisationனுடைய அபார வளர்ச்சித் திறனை இவர்கள் நன்கு பயன்படுத்திக் கொள்கிறார்கள். அதுபோக எவ்வளவு பெரிய வேலையாக இருந்தாலும் அதை நேர்த்தியாக செய்வதெப்படி என்று தெரிந்து வைத்துக் கொள்கிறார்கள். மேலும் எந்த வேலையாக இருந்தாலும் அந்த வேலையின் முக்கிய அம்சங்களைக் கவனிப்பது மட்டுமின்றி வேலையின் விவரங்கள் அதாவது detailsலிலும் perfectionஐக் கொண்டு வர பாடுபடுகிறார்கள். பணம் மற்றும் வேலையைதான் புரிந்து வைத்துக் கொள்கிறார்கள் என்று மட்டுமில்லை, யார் யாருடன் வேலை செய்கிறார்களோ, யாரையெல்லாம் வேலை வாங்குகிறார்களோ எல்லோருடைய மனித சுபாவத்தையும் நன்றாகப் புரிந்து வைத்துக் கொண்டு யார் எப்படி செயல்படுவார்கள், யாரை எப்படி கட்டுப்படுத்தி வைக்கலாம், யாரிடமிருந்து எப்படி ஆதாயத்தை பெற்றுக் கொள்ளலாம், தொந்தரவு செய்கிறவர்களை எப்படி ஒடுக்கலாம், அடக்கலாம் என்றெல்லாம் சரியாக மனிதர்களைப் புரிந்து வைத்துக் கொள்கிறார்கள். எல்லாவற்றிற்கும் சிகரம் வைத்தாற்போல் அவர்கள் செய்கின்ற வேலைகளும், மக்களுடைய தேவைகளும் எப்பொழுதுமே ஒரு alignmentடில் இருக்கும்படி பார்த்துக் கொள்கிறார்கள். இந்த alignment இருப்பதால் இவர்களுடைய வேலை வளரும் பொழுது, வருமானமும் கூடவே வளர்கிறது. அரசியலில் சாதிக்க விரும்புகின்றவர்களை எடுத்துக் கொண்டால் நல்ல leadership திறமையும், பேச்சாற்றலும் அடுத்தவர்களைக் கீழ்ப்படிய வைக்கும் commanding abilityயையும் இவர்கள் வளர்த்துக் கொள்கிறார்கள்.

பணம் மற்றும் அதிகாரத்தைத் தேடுபவர்கள் தவிர creativeவாக இலக்கியத்திலும், விஞ்ஞானத்திலும், கலைத் துறையிலும், விளையாட்டுத் துறையிலும் சாதிக்க வேண்டும் என்ற ஆர்வம் உள்ள ஒரு சிறிய மைனாரிட்டியும் இருக்கிறது. இவர்கள் வெறும் கடின உழைப்பு, புத்திசாலித்தனம், பண பலம், பதவி பலம் என்றிவற்றை மட்டும் நம்பி creativeவாக சாதிக்கவில்லை. இவர்களுக்கு ஒரு creativeஆன படைக்கும் திறன் அவசியம். ஆங்கிலத்தில் creative inspiration மற்றும் creative intelligence என்று சொல்வார்கள். ஆகவே இத்தகைய creative திறமைகள் கொண்டிருப்பவர்கள் பெரிய எழுத்தாளர்களாகவும், விஞ்ஞானிகளாகவும், கண்டுபிடிப்பாளர்களாகவும், சங்கீத மேதைகளாகவும், நடன கலைஞர்களாகவும், விளையாட்டு வீரர்களாகவும் பெயர் எடுக்கிறார்கள். இப்படி சமூகத்தில் பெருவாரியான மக்கள் பணம் சம்பாதிப்பது, பதவி பலத்தை நாடுவது, சமூக அந்தஸ்தைத் தேடுவது மற்றும் புதுமையான கண்டுபிடிப்புகளை நிகழ்த்தி பெயரையும், புகழையும் தேடுவது என்றிருந்தாலும் இவர்களிலிருந்து விதிவிலக்காக ஒரு சிறிய மைனாரிட்டி ஆன்மீக சாதனை புரிவதில் நாட்டம் கொண்டிருக்கிறது. இவர்களுக்குக் கடின உழைப்போ, அறிவு கூர்மையோ, கிரியேட்டிவ் இன்ஸ்பிரேஷனோ எதுவும் உதவாது. இவர்களுடைய ஆன்மீக சாதனைகளை நம்பிக்கை, பக்தி மற்றும் இறையார்வம் ஆகியவற்றை ஆதாரமாக வைத்து நிகழ்த்துகிறார்கள். ஆனால் இப்படி ஆன்மீகத் துறையில் சாதிக்க வேண்டும் என்று ஆர்வம் உள்ளவர்கள் எண்ணிக்கையில் மிகவும் குறைவான ஒரு மைனாரிட்டியாக இருப்பதால் இவர்கள் சமூகத்தில் எப்படி சாதிக்கிறார்கள் என்பதும், சமூகத்தில் பணம், பதவி தேடுகின்ற மெஜாரிட்டியானவர்கள் எப்படிச் சாதிக்கிறார்கள் என்பதும் ஒன்றோடு ஒன்று சம்பந்தப்பட்டிருக்காது.

வருமான விஷயத்தில் பொதுவாக கடின உழைப்பு, திறமை, பயிற்சி, பண முதலீடு மற்றும் டெக்னாலஜி ஆகியவைதான் உதவும் என்று இதுவரை உலகம் கருதி வந்துள்ளது. ஆனால் கடந்த 15, 20 வருடங்களாகச் சர்வதேச corporate பிஸினஸ் வட்டாரங்களில் பிஸினஸ் வருமானத்தை உயர்த்துவதற்கு valueக்கள் பெருமளவு உதவுகின்றன என்பதை மேனேஜ்மெண்ட் நிபுணர்கள் கண்டறிந்துள்ளார்கள். பெரிய multi-national corporationகளான கொக்கோ-கோலா, ஐ.பி.எம்., ஆப்பிள் கம்ப்யூட்டர், Federal Express Courier Service மற்றும் Sears போன்ற பெரிய அமெரிக்க டிப்பார்ட்மெண்ட் ஸ்டோர்கள் எப்படி அபாரமாகச் சம்பாதிக்கின்றன என்று மேனேஜ்மெண்ட் நிபுணர்கள் கண்டறிய முற்பட்ட பொழுது அவர்களுக்குப் பெரிய அதிர்ச்சிக் காத்திருந்தது. கம்பனிகளின் தலைவர்கள் தங்களுடைய அபார வெற்றிக்குக் காரணம் தங்களுடைய பெரிய முதலீடு மற்றும் அபார உற்பத்தித் திறன் கொண்ட டெக்னாலஜி என்று முதலீட்டையும் டெக்னாலஜியையும் காரணம் காட்டுவார்கள் என்று நிபுணர்கள் எதிர்பார்த்தார்கள். ஆனால் இந்த ஸ்தாபனங்களின் தலைவர்களோ இவற்றைக் காரணம் காட்டவே இல்லை. மாறாகத் தாங்கள் நம்புகின்ற மற்றும் கடைபிடிக்கின்ற பிஸினஸ் valueக்கள்தான் அவர்களுடைய வெற்றிக்கும், சாதனைக்கும் காரணம் என்று திடமாகவும், முடிவாகவும் கருத்துத் தெரிவித்தார்கள். உதாரணமாக கொக்கோ கோலா கம்பனியினுடைய மேனேஜ்மெண்ட்டில் இருப்பவர்களின் பாலிஸி என்னவென்றால் கம்பனி எப்படி நன்றாகச் சம்பாதிக்கின்றதோ அந்தளவிற்குக் கம்பனியினுடைய distributorகளும், ஏஜெண்டுகளும் சம்பாதிக்க வேண்டும் என்பதுதான். இதன் காரணமாக distributorகளுக்கும் ஏஜெண்டுகளுக்கும் நல்ல profit margin மற்றும் discount வழங்குகிறது. இதனால் மகிழ்ந்துபோயுள்ள distributorகளும் ஏஜெண்டுகளும் கம்பனி வளர்ச்சிக்காகத் தங்களால் முடிந்த அளவிற்குத் தங்களுடைய ஒத்துழைப்பை வழங்குகிறார்கள். இதன் பலனாக கம்பனியின் ஆண்டு வருமானம் பில்லியன் டாலர் அளவிற்கு உயர்ந்துள்ளது. இதன் மூலம் என்ன தெரிகிறது என்றால் கோக் கம்பனியின் அபார வளர்ச்சிக்குக் காரணம் கம்பனிக்கும் distributorகளுக்கும் ஏஜெண்டுகளுக்கும் இடையேயுள்ள பரஸ்பர goodwillதான். ஐ.பி.எம். கம்பனியை எடுத்துக் கொண்டால் அவர்களுடைய productsஆன computer hardware மற்றும் office machinery ஆகியவற்றில் qualityயை maintain செய்வதில் அவர்கள் மிகவும் தீவிரமாக உள்ளார்கள். Federal Express Courier Serviceஐ எடுத்துக் கொண்டால் அமெரிக்காவின் எந்தவொரு இடத்திலிருந்தும், எந்தவொரு இடத்திற்கும் மறுநாளே அவர்கள் சொன்ன நேரத்திற்குள் delivery செய்துவிடுகின்றார்கள். அப்படி நேரம் தவறினால் வாங்கியப் பணத்தைத் திருப்பி தந்துவிடுகிறார்கள். இந்த அளவிற்கு punctuality என்ற பிஸினஸ் valueவைக் கடைப்பிடிக்கிறார்கள். அமெரிக்காவின் முன்னணி கொரியர் நிறுவனமாக அவர்கள் தலையெடுப்பதற்குக் காரணமே punctualityக்கு அவர்கள் இப்படி வாங்கி இருக்கிற பெயர்தான். ஆப்பிள் கம்ப்யூட்டரை எடுத்துக் கொண்டால் அவர்களுடைய கம்ப்யூட்டர்கள் மற்றும் I Phone, I Podபோன்ற music சாதனங்கள் எல்லாமே மிகவும் user friendlyயாக இருக்கும். Customer satisfactionஐ அவர்கள் முக்கியமாகக் கருதுவதால் இப்படி அவர்களுடைய சாதனங்கள் எல்லாம் user friendlyயாக இருக்க வேண்டும் என்று பாடுபடுகிறார்கள். இண்டர்நேஷனல் லெவலில் மிகவும் பாப்புலராக ஆப்பிள் கம்ப்யூட்டர் இருப்பதற்குக் காரணமே இந்த customer satisfaction என்ற பிஸினஸ் valueதான். Sears Department Storesஐ எடுத்துக் கொண்டீர்கள் என்றால் அவர்கள் இந்த customer satisfaction என்ற பிஸினஸ் valueவை உச்சக்கட்டத்திற்கு எடுத்துக் கொண்டு போய்விட்டார்கள். அவர்களிடம் வாங்கிச் செல்லும் எந்தப் பொருளும் கஸ்டமருக்குத் திருப்தியில்லை என்றால் அதைத் திருப்பி வாங்கிக் கொண்டு பணத்தைத் திருப்பிக் கொடுத்துவிடுகிறார்கள். அவர்களுக்குக் கஸ்டமர்கள் குவிவதற்குக் காரணமே இந்த take back policyதான். இதன் காரணமாக Searsஇன் வருமானம் அதிகரிப்பதைக் கண்ட அமெரிக்காவில் உள்ள மற்ற டிப்பார்ட்மெண்ட் ஸ்டோர்களும்கூட இந்த buy back policyஐ கொண்டு வந்துவிட்டன. ஆகவே இந்தப் பெரிய MNCகளே தங்கள் வளர்ச்சிக்கு valueக்கள்தான் உதவியிருக்கின்றன என்று திடமாகச் சொல்லும்பொழுது quality maintenance, customer satisfaction, on-time delivery, goodwill, சுத்தம், upto date accounts, சுமுகம் மற்றும் நேர்மை போன்ற valueக்கள் பிஸினஸ் நிறுவனங்களின் சாதனைகளை உயர்த்த முக்கியக் காரணங்களாக இருக்கின்றன என்பதை நாம் சந்தேகத்திற்கு இடமின்றி நம்பலாம்.

அப்பா அவர்கள் சாதனையைப் பற்றி நிறைய எழுதியுள்ளார். திரு. கேரி ஜேக்கப்ஸ் அவர்களும் பிஸினஸ் ஸ்தாபனங்கள் தங்களுடைய வருமானத்தைப் பெருக்கிக் கொள்வதெப்படி என்பதைப் பற்றி இரண்டு புத்தகங்கள் எழுதியுள்ளார். (Vital Corporation and Vital Difference). அப்பா அவர்கள் ஆசிரியராகப் பணியாற்றியிருக்கிறார். அதுபோக விவசாயத்திலும் ஈடுபட்டிருக்கிறார். பிஸினஸும் செய்கிறார். இதுபோக பொருளாதார ரீதியாக இந்தியாவும் மற்றும் உலகமும் எப்படி முன்னேறி வந்துள்ளன என்பதைப் பற்றி நிறைய ஆராய்ச்சி செய்திருக்கிறார். தேசத்தின் பொருளாதார வளர்ச்சி, உலகத்தின் பொருளாதார வளர்ச்சி என்றிவற்றை எப்படி விரைவுப்படுத்தலாம் என்றும் யோசித்திருக்கிறார். இந்த ஆராய்ச்சியின் விளைவாக அவர் என்ன கண்டறிந்திருக்கிறார் என்றால் பொருளாதார முன்னேற்றம் மற்றும் வளர்ச்சியை விரைவுபடுத்துவதற்குச் சிறந்த சாதனம் power of organization ஆகும். Power of organization என்றால் என்ன என்ற கேள்வி உங்கள் மனதில் இப்பொழுது எழலாம். Power of Organisation என்பது systematicஆன மற்றும் முறையான செயல்பாடாகும். நாம் முறையாகவும் systematicஆகவும் செயல்படும் பொழுது நம்முடைய எனர்ஜி மற்றும் கவனம் முழுவதும் நாம் செய்கின்ற வேலைக்கேப் போகிறது. இதன் விளைவாக நம்முடைய எனர்ஜி, நேரம், பணம் மற்றும் நாம் கையாளும் materials என்றிவை நான்கிலும் விரயம் தவிர்க்கப்படுகிறது. இது மட்டுமில்லை organization என்பது physics விஞ்ஞானத் துறையில் சொல்லப்படுகின்ற lever அதாவது நெம்புகோல் போல செயல்பட்டு நாம் எடுக்கின்ற முயற்சிக்குண்டான பயனைப் பல மடங்கு பெரிதாக்குகிறது. ஒரு கடப்பாறையை வைத்து நாம் ஒரு பெரிய பாறாங்கல்லை நகர்த்த முயன்றால் அந்தக் கடப்பாறையைச் சப்போர்ட் செய்ய ஒரு ஆதாரம் இல்லாதபொழுது அந்தப் பாறாங்கல்லை நம்மால் சுலபமாக நகர்த்த முடியவில்லை. அதே சமயத்தில் கடப்பாறைக்கு ஆதாரமாக ஒரு சிறு கல்லை வைத்தால்கூட நம்மால் பாறாங்கல்லை எளிதாக நகர்த்த முடியும். சாதாரண கடப்பாறைக்கு ஒரு நல்ல சப்போர்ட் கிடைக்கும் பொழுது அது ஒரு வலிமை வாய்ந்த leverராக மாறுகிறது. அம்மாதிரியே ஒரு சாதாரண வேலையைக்கூட முறைப்படுத்திச் செய்யும் பொழுது அங்கே power of organization செயல்பட்டு பலனை பல மடங்கு அபிவிருத்திச் செய்கிறது. Leverரினுடைய அபார ஆற்றலைப் பற்றி விவரிக்கும் பொழுது 15ஆம், 16ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த இத்தாலிய விஞ்ஞானி கலிலியோ அவர்கள் தனக்கு ஒரு சரியான சப்போர்ட் கிடைத்தால் நான் ஒரு நெம்புகோலை வைத்து இந்த பூமியைக்கூட தூக்குவேன் என்று அவர் பேசியிருக்கிறார். அதாவது சரியான சப்போர்ட் கிடைத்தால் பூமியைத் தூக்கும் அளவிற்கு leverக்கு power வருமென்றால் முறையான organisationனைப் பயன்படுத்தினால் எவ்வளவு பெரிய காரியத்தையும் நாம் சாதிக்கலாம் என்றாகிறது.

Organisationனுடைய உள் பிரிவுகள் என்ன என்று நீங்கள் கேட்கலாம். Organisationஇல் உள்பிரிவுகள் உண்டு. அவையாவன, எனர்ஜி, direction, force, power, திறமை, பண்பு மற்றும் பலனாகும். நாம் எந்த வேலையைச் செய்ய விரும்பினாலும் முதலில் அந்த வேலையைச் செய்வதற்கு நமக்கு எனர்ஜி வேண்டும். எனர்ஜி இல்லாமல் எந்த வேலையையும் நாம் தொடங்கவும் முடியாது. அது நீடிக்கவும் செய்யாது. ஆனால் நாம் எனர்ஜிக்கு சரியான direction கொடுக்கும் பொழுதுதான் அதனால் ஒரு நல்ல பலனைக் கொடுக்க முடியும். ஆகவே நமக்கு நோக்கம் ஒன்றிருந்து அந்த நோக்கத்தைப் பூர்த்தி செய்துகொள்ளும் திசையில் நாம் நம் எனர்ஜியைச் செலுத்தும் பொழுது அந்த எனர்ஜி வெறும் எனர்ஜியாக இல்லாமல் ஒரு direction உள்ள forceஆக மாறுகிறது. அந்த forceஐ நாம் ஒரு organisation மற்றும் systemத்தின் மூலம் செலுத்தும் பொழுது அது ஒரு productive powerஆக மாறுகிறது. அந்த power skill மற்றும் valueக்களுடன் இணையும் பொழுது இறுதியில் நல்ல பலன் கிடைக்கிறது. நாம் சக்தியை organisation மூலம் வெளிப்படுத்தும் பொழுது பலன் பல மடங்கு பெரிதாகி organization இல்லாமல் செய்கின்ற வேலைக்குக் கிடைக்கின்ற பலனைவிட குறைந்தது ஆயிரம் மடங்கு அதிகமான பலனைக் கொடுக்கிறது. இந்த எனர்ஜி, direction, force, organisation ஆகியவற்றைப் பள்ளியில் படிக்கும் குழந்தைகளை உதாரணமாக வைத்து நான் சொல்லும் பொழுது, organisationனுடைய பவர் மேலும் தெளிவாகப் புரியும் என்று நம்புகிறேன். இரண்டு வயதிற்குட்பட்ட குழந்தைகளை எடுத்துக் கொண்டால் அவர்களுக்கு உடம்பில் ஏராளமான எனர்ஜி இருக்கிறது. அதை அவர்கள் விளையாட்டில் செலவழித்துவிடுகிறார்கள். அந்த வயதில் குழந்தைகளுக்கு ஒரு நோக்கமோ குறிக்கோளோ இல்லை என்பதால் விளையாட்டில் செலவாகின்ற அவ்வளவு எனர்ஜியும் விரயமாகிவிடுகின்றது. இப்படி விளையாடும் குழந்தைகளைப் பள்ளியில் சேர்த்து, இங்கே பள்ளியில் நீங்கள் முறையாகப் படிக்க வேண்டும், இது உங்களுக்கு ஒரு வேலை என்று சொல்லி அக்குழந்தைகளுக்கு நாம் ஒரு நோக்கத்தைக் கொடுக்கும் பொழுது அவர்களுடைய எனர்ஜிக்கு இப்பொழுது ஒரு குறிக்கோள் கிடைக்கிறது, ஒரு direction கிடைக்கிறது. இப்படி ஒரு direction கிடைக்கும் பொழுது அவர்களுடைய எனர்ஜி concentrated forceஆக மாறுகிறது. பள்ளிக்கூடம் என்னும் பொழுது அங்கே ஒரு organisation இருக்கிறது, ஆசிரியர்கள் இருக்கிறார்கள், பாட புத்தகங்கள் இருக்கின்றன, time table இருக்கிறது மற்றும் school time, பரீட்சை, ஹோம் ஒர்க் என்றெல்லாம் இருக்கின்றன. இப்பொழுது forceஆக மாறியுள்ள குழந்தைகளுடைய எனர்ஜி பள்ளியிலுள்ள organisation மூலம் செலுத்தப்படும் பொழுது அந்த எனர்ஜி இப்பொழுது ஒரு productive powerஆக மாறுகிறது. ஆசிரியர்களிடம் teaching ability இருக்கிறது. குழந்தைகளிடம் புரிந்து கொள்ளும் திறனிருக்கிறது. இந்த கற்றுக் கொடுக்கும் திறனும், புரிந்து கொள்ளும் திறனும்தான் skillஆக செயல்படுகின்றன. இந்த இரண்டு skillஉம் குழந்தைகளுடைய எனர்ஜியோடு இணையும் பொழுது அவர்களுக்குக் கல்வியறிவு என்ற பலன் கிடைக்கிறது. இப்பொழுது இப்படி ஒரு பள்ளிக்கூடம் என்ற அமைப்பினுடைய ஆதரவு இல்லாமல் கற்றுக் கொடுக்க ஆசிரியர்களோ, படிக்க பாடப் புத்தகங்களோ, regular class hoursசோ என்று எதுவுமே இல்லாமல் ஒரு குழந்தைத் தானாகவே படித்து கல்வியறிவை வளர்த்துக் கொள்ள வேண்டுமென்றால் அந்தக் குழந்தைக்கு என்ன கல்வியறிவு கிடைக்கும் என்று நாம் பார்க்க வேண்டும். இப்படி ஒப்பிட்டுப் பார்க்கும்பொழுதுதான் பள்ளி என்ற organisation குழந்தைகளின் கல்வியறிவை எந்தளவிற்கு அபிவிருத்தி செய்கிறது என்று நமக்குத் தெரிய வருகிறது.

சிந்தித்துப் பார்த்தால் இந்த organisation உடைய சக்தியை நாம் நம் வாழ்க்கையில் எல்லா இடங்களிலும் பயன்படுத்தி நாம் விரும்பும் பலன்களை அதிகமாகப் பெற்றுக் கொள்கிறோம் என்று தெரிய வரும். உதாரணமாக, சாலைகளில் traffic signalsகளோ மற்றும் நாற்சந்துகளில் traffic controlலோ இல்லை என்றால் சாலைகளில் போக்குவரத்து என்பது மிகவும் சிக்கலாகிவிடும். நாற்சந்திகளில் இப்பொழுது மூன்று திசைகளில் உள்ள வாகனங்களை நிறுத்திவிட்டு ஒரு திசையிலிருந்துதான் வாகனங்களைச் சாலையைக் கடக்க அனுமதிக்கிறார்கள். இப்படி நிறுத்தி வைக்காமல் நான்கு திசைகளிலிருந்தும் ஒரே சமயத்தில் வாகனங்களைச் சாலையைக் கடக்க அனுமதித்தால் எந்த வாகனமும் நகர முடியாத அளவிற்குப் போக்குவரத்து ஸ்தம்பித்துவிடும். ஆகவே traffic control என்ற ஒரு system அங்கு இருப்பதால்தான் வாகனப் போக்குவரத்து சீராக சிக்கல் இல்லாமல் இருக்கிறது. எந்தவொரு பிஸினஸ் ஸ்தாபனத்தை எடுத்துக் கொண்டாலும் அங்கே உற்பத்திப் பிரிவு, விற்பனைப் பிரிவு, raw material stock பிரிவு, accounts மற்றும் finance பிரிவு, office பிரிவு என்று பல பிரிவுகள் இருக்கும். உற்பத்தி பிரிவிற்கும், விற்பனைப் பிரிவிற்குமிடையே ஒரு co-ordination இல்லாமல் போனாலோ, ஸ்டோர் ரூமிற்கும் உற்பத்திப் பிரிவிற்குமிடையே ஒரு co-ordination இல்லாமல் போனாலோ, விற்பனைப் பிரிவிற்கும், மார்கெட்டிற்கும் இடையே ஒரு co-ordination இல்லாமல் போனாலோ எந்தவொரு வியாபாரமும் இலாபகரமாக நெடுநாள் இயங்க முடியாது. வெகுவிரைவில் வியாபாரம் ஸ்தம்பித்துவிடும். வியாபாரம் என்று மட்டுமில்லை, குடும்ப வாழ்க்கையிலும் நமக்கு organisation உதவுகிறது. Discipline அதாவது கட்டுப்பாடு என்பது அது ஒரு விதமான organisation. கட்டுப்பாடில்லாமல் வாழ்கின்ற குடும்பங்களைவிட கட்டுப்பாடும் குறிக்கோளும் கொண்ட குடும்பங்கள் அதிக முன்னேற்றத்தையும், வளர்ச்சியையும் காண்கின்றன என்பதை நாம் பார்க்கத்தான் செய்கிறோம்.

தொடரும்....

********

ஸ்ரீ அரவிந்த சுடர்
 
நேற்றுப் பிடிக்காதது இன்று புரிந்தால் பிடித்தமாக மாறும். கற்பனை இதமாக இருக்கும். உணர்வு ஏற்கிறது, ஆனால் கற்பனை கசக்கிறது எனில் சூட்சும உணர்வு ஏற்கவில்லை எனப் பொருள்.
 

*******book | by Dr. Radut