Skip to Content

08. அஜெண்டா

அஜெண்டா

Volume 4, Page 397

"தேவதைகளை நீ நம்புகிறாயா?
உன் பின்னால் ஒருவர் நின்றார். அவர் நிஜமான மனிதர் என நினைத்தேன்.
திரைமறைவிலிருப்பதைப் போலிருந்தது.
வெண்மையான நிறம், கை தெரிந்தது.
பால் வெள்ளை நிறம்.
வெள்ளியான உடை கண்ணுக்குத் தெரிந்தது.
துணியில் கறுப்பாக எழுதப்பட்டிருந்தது. எழுத்தும், துணியும் தெரிந்தன.
இத்துணிகளை உன்முன் அவள் வைக்கிறாள்.
உன் பின்னால் அவள் நின்றாள்.
விவரமற்ற மங்கிய உருவமில்லை.
தெளிவான ஜட உருவம்.
"உனக்கென ஒரு தேவதையிருக்கிறதா?" என நினைத்தேன்.
அது அவள் வலது கரம்.
அவள் உயரமாக இல்லை.
இளம் வயது.
தள தள என்ற உருவம்.
தன் சிறு விரல்களால் எழுத்துகளை எடுத்து அடுக்கினாள்.
அது வெகு நேரம் நீடித்தது.
தேவதை.
சூட்சும உலகின் ஜீவன் அது. மனித வாடையில்லை.
எழுத்தில்லை, சொற்கள் தயாராக இருந்தன.
"அப்படியானால் உனக்கு உதவ ஒரு தேவதையிருக்கிறாளா?"
என அன்னை சத்பிரேமைக் கேட்கிறார்கள்.

அன்னையின் ஸ்தாபனங்களில் அன்பர்கள் கவனக்குறைவாக இருப்பதுண்டு.

அன்னையின் பொருள்களைப் பாதுகாக்க இது போன்ற வெண்மையான தேவதைகள் சூட்சுமமாகச் செயல்படுவதுண்டு.

அன்பர்கள் பல சமயங்களில் இது எப்படி முடியும் என ஆச்சரியப்படும்படி காரியங்கள் நடக்கும்பொழுது அவற்றை நடத்தி வைப்பவை இத்தேவதைகள்.

  • 100 மைலுக்கப்பால் ஹோட்டலில் தொலைந்த பை பத்மாசனமிட்டு ரோட்டு ஓரத்தில் தியானம் செய்து கண் விழித்தபோது புதர் மீது இருந்தது.
  • காலில் ½ அங்குல ஊசி குத்தி சீழ் பிடித்த பொழுது அந்த ஊசி மறைந்துவிட்டது.
  • வெள்ளிக்கிழமை ஸ்கேனில் கண்ட கல் திங்கள்கிழமை மறைந்துவிட்டது.
  • 1000 மாடுகள் 1 மாதமாகப் படையெடுத்து வந்து நாள் முழுவதும் மேய்ந்த தோப்பில் மாடுகள் மாயமாய் மறைந்தன.
  • இடுப்பிலிருந்த கட்டி இக்கட்டான இடத்திலிருந்து நகர்ந்து 1½'' தள்ளியிருந்தது.
  • ஒரு பகுதி உடைந்த பின்னும் மெஷின் ஓடியது.

*****



book | by Dr. Radut