Skip to Content

05. தமிழ்நாட்டுப் பழமொழிகளும் ஸ்ரீ அரவிந்தமும்

தமிழ்நாட்டுப் பழமொழிகளும் ஸ்ரீ அரவிந்தமும்

(சென்ற இதழின் தொடர்ச்சி....)

கர்மயோகி

  1. கொண்டு வந்தாலும் வராவிட்டாலும் தாய்.
    • எது இல்லையென்றாலும், அன்னையில்லாமல் இருக்காது.
  2. சாஸ்திரம் பொய்யானால் சந்திர கிரகணத்தைப் பார்.
    • அன்னையின் மெய்யை அறிய அருகிலுள்ளதைக் கவனி.
  3. ஆடிப்பட்டம் தேடி விதை.
    • அன்னை நினைவு எந்த நேரத்தையும் சுபமுகூர்த்தமாக்கும்.
  4. எருது வருத்தம் காக்கையறியாது.
    • எருதின் வருத்தத்தைப் போக்க வந்த காக்கை.
  5. ஏறச் சொன்னால் எருதுக்குக் கஷ்டம்,
    இறங்கச் சொன்னால் முடவனுக்குக் கஷ்டம்.
    • ஏறச் சொல்லும் எருதும், இறங்க விரும்பும் முடவனும்.

தொடரும்....

******

ஸ்ரீ அரவிந்த சுடர்
 
மடையனின் வருத்தம் நம்மைப் பாதிக்காததுபோல் தேவர்கட்கு நம் வேதனை புரிவதில்லை.
 
தேவருக்கு மனிதன் மடையன்.

******



book | by Dr. Radut