Skip to Content

03. ஸ்ரீ அரவிந்தம் - லைப் டிவைன்

ஸ்ரீ அரவிந்தம்

லைப் டிவைன்

(சென்ற இதழின் தொடர்ச்சி....)

கர்மயோகி

XX. Death, Desire, and Incapacity
20. மரணம், ஆசை, இயலாமை
There is the individualised force.
Page No.196
Para No.13
தனிப்பட்ட சக்தியுள்ளது.
It may be the energy of the mind.
அது மனத்தின் சக்தியாக இருக்கலாம்.
It may be free from ignorance.
அது அஞ்ஞானமற்றதாக இருக்கலாம்.
Then no such limitation would intervene.
அப்படியானால் எந்த வரையறையுமிருக்காது.
No such necessity of desire would interfere.
அது போன்ற ஆசைக்கு அவசியம் எழாது.
Mind need not be separated from Supermind.
மனம் சத்தியஜீவியத்திலிருந்து பிரிக்கப்பட வேண்டாம்.
Then it is a mind of divine knowledge.
அம்மனம் தெய்வீக ஞானமுள்ளது.
It would know the intention, scope and inevitable result.
அதற்குக் கருத்து, போக்கு, தவிர்க்க முடியாத பலன் தெரியும்.
It would know that of every act.
ஒவ்வொரு செயலையும் அது அப்படி அறியும்.
It would not crave or struggle.
அது ஏங்கிப் போராடாது.
But would put forth an assured force.
பதிலாகத் தெளிவான சக்தியை வெளிப்படுத்தும்.
It would be self-limited to the immediate object in view.
கையிலுள்ள நோக்கத்திற்கு மட்டும் பயன்படுவதாக அது அமையும்.
It would not be subject to desire or limitation.
அது ஆசைக்கோ, அளவுக்கோ உட்படாது.
Even in stretching beyond the present.
நிகழ்காலத்தைக் கடப்பதிலும் உட்படாது.
Even in undertaking movements.
சலனங்களை ஏற்பதிலும் உட்படாது.
For the failure also of the Divine is acts of its omniscient and omnipotence.
தவறும் தெய்வ காரியங்களும் அதன் எல்லாமறிந்த எல்லாம் வல்ல அம்சத்தினுடையது.
It knows the right time and circumstance.
அதற்கு நேரமும் காலமும் தெரியும்.
Its incipience, the vicissitudes.
அதன் ஆரம்ப ஊசலாட்டங்களுடைய நேரம் அது.
The immediate and the final results of all its cosmic undertakings.
அதன் பிரபஞ்சக் கடமைகளில் உடனடியானதும் முடிவானதுமான பலன்கள்.
The mind of knowledge is in unison with the divine Supermind.
ஞானமுடைய மனம் தெய்வீக சத்தியஜீவியத்துடன் இணைந்துள்ளது.
It would participate in this Omniscience.
அது இந்த எல்லாம் அறியும் தன்மையில் கலந்து கொள்கிறது.
It has an all determining power.
அதற்கு அனைத்தையும் நிர்ணயிக்கும் நோக்கம் உண்டு.
We already saw something.
நாம் ஏற்கனவே ஒன்றைக் கண்டோம்.
The individualised life force here is an energy of the individualising and ignorant Mind.
தனிப்பட்ட வாழ்வின் சக்தி தனிப்பட்ட அஞ்ஞான மனத்தின் சக்தி.
It is the Mind that has fallen from the knowledge of its own Supermind.
தன் சொந்த சத்தியஜீவியத்திலிருந்து கீழே விழுந்த மனம் அது.
Therefore incapacity is necessary to its relations in Life and inevitable in the nature of things.
அதனால் இயலாமை இயல்பானது. வாழ்வுடன் தொடர்பு கொள்ளும் பொழுது அதன் சுபாவத்திற்குரியது.
For the practical omnipotence of an ignorant force even in a limited sphere is unthinkable.
அறியாமையான சக்தி குறுகிய சந்தர்ப்பத்திலும் நடைமுறையில் முழு பவர் பெற்றிருப்பது சிந்திக்க முடியாதது.
In that sphere such a force would set itself against its working of the divine and omnipotent and omniscience.
அச்சிறு சந்தர்ப்பத்திலும் அப்படிப்பட்ட சக்தி எல்லாம் அறிந்த எல்லாம் வல்ல தெய்வீக சக்திக்கு எதிராக வேலை செய்யும்.
It will unfix the fixed purpose.
அது இதன் நிலையான நோக்கத்தை எதிராக மாற்றும்.
It is an impossible cosmic situation.
இது பிரபஞ்சம் ஏற்க முடியாத நிலை.
There is a first Law of Life.
இதுவே வாழ்வின் முதற் சட்டம்.
There is the struggle of limited forces.
அளவோடுள்ள சக்திகள் போராடுகின்றன.
By that struggle they increase their capacity.
இப்போராட்டத்தால் தங்கள் திறமையை வளர்த்துக் கொள்கின்றன.
It is done under the divine impetus.
தெய்வீக உந்துதலால் அது நடக்கிறது.
It is an impetus of instinctive or conscious desire.
அது இயல்பான தெளிவான ஆசை.
As with desire, so with strife.
ஆசைக்குரிய சட்டம், முரண்பாட்டிற்கும் உரியது.
It must rise into a mutually helpful trial of strength.
இருவருக்கும் பயன்படும் போராட்டமாக அது உயர வேண்டும்.
It is a conscious wrestling of brother forces.
சோதர சக்திகள் தெரிந்து போடும் மல்யுத்தம் அது.
In this the victor and vanquished must both equally gain and increase.
இப்போராட்டம் வென்ற, தோற்ற இருவருக்கும் சமமான பலன் பெற்று உயரும்.
From above one influences.
ஒன்று மேலிருந்து செயல்படுகிறது.
Another retorts from below.
அடுத்தது கீழிருந்து பதிலுக்கு எதிர்க்கிறது.
And this again has eventually to become the happy shock of divine interchange.
தெய்வீக பரிமாறுதலில் இது சந்தோஷமான அதிர்ச்சியாக மாற வேண்டியது.
The strenuous clasp of Love replacing the convulsive clasp of strife.
போராடும் வலிய பிடியை வலிமையான அன்பின் பிடி ஏற்பது.
Still strife is a necessary and salutary beginning.
இருந்தாலும் போராட்டம் அவசியம், உயர்ந்த ஆரம்பம்.
Death, Desire and Strife are the trinity of divided living.
மரணம், ஆசை, போராட்டம் பிரிவினை வாழ்வின் திரிமூர்த்திகள்.
It is the triple mask of the divine Life-principle.
தெய்வீக வாழ்வின் மூன்று முகமூடிகள் இவை.
It is the first essay of cosmic self-affirmation.
பிரபஞ்சத்தில் தெய்வம் முதலில் வெளிப்படும் முயற்சி இது.
The End.
முற்றும்.
*****
******

ஸ்ரீ அரவிந்த சுடர்
 
சரியான குறிக்கோளைத் தவறான யுக்தியால் இலட்சியம் பின்பற்றுகிறது.
 
இலட்சியத்திற்குக் குறிக்கோள் சரியானாலும், யுக்தி தவறு.
 
*******
ஸ்ரீ அரவிந்த சுடர்
 
கருவி சும்மா இருப்பதால் ஏதாவது வேலை கொடுக்க நினைத்துச் செய்யும் காரியம் சிருஷ்டியைப் பின்னுக்குக் கொண்டு போகும். இருப்பினும் பெருங்காவியங்களும் இதுபோல் எழுந்துள்ளன.
 
சும்மாயிருந்து சுகம் பெறுவதும் சுருதி சேர்க்கும்.
 
******
ஸ்ரீ அரவிந்த சுடர்
 
மேல் எழுந்த ஜீவன் என்பது உடல், உள்ளம், மனம் ஆகும். மனிதன் என நாம் அறிந்தது முழுவதும் மேல் நிலை ஜீவனாகும்.
 
முழு மனிதனும் மேல் நிலைக்குரியவன்.
 
******
ஸ்ரீ அரவிந்த சுடர்
 
ஜடமான மனிதன், தன் கண்ணோட்டத்தை மாற்றினால், ஜடம் திருவுருமாற்றமடைகிறது. அந்நேரம் பிரம்மமும் சிருஷ்டியும் ஒன்றென அறிகிறோம்.
 
சிருஷ்டியை பிரம்மமாக்கும் திருவுருமாற்றம்.
 
*******

*******



book | by Dr. Radut