Skip to Content

01. பகவான் மற்றும் அன்னையினுடைய ஆன்மீக அனுபவங்கள்

பகவான் மற்றும் அன்னையினுடைய ஆன்மீக அனுபவங்கள்

N. அசோகன்

  1. பகவானுடைய முதல் ஆன்மீக அனுபவம் அவர் லண்டனிலிருந்து இந்தியா திரும்பிய பொழுது அவர் உடம்பில் இறங்கிய அமைதி உணர்வாகும். அதற்கு முன்னால் அவருக்கு எந்தவிதமான விசேஷ ஆன்மீக அனுபவமும் கிடைத்ததாக எழுதவில்லை.
  2. அவருக்குக் குருவாக விளங்கிய விஷ்ணு பாஸ்கர லீலே என்பவர் பகவானை மௌனத்தைப் பெற்றுக் கொள்வதற்கான யோக முயற்சியை எடுக்கச் சொன்ன பொழுது மூன்றே நாளில் அவருக்கு மௌனம் சித்தித்தது.
  3. காளி கோயில் ஒன்றுக்குச் சென்ற பொழுது அங்கிருந்த காளி சிலையில் காளி தேவதை உண்மையாக இருப்பதைப் பகவான் உணர்ந்தார். அதன் பின்னர் சிலை வழிபாட்டில் உண்மை இருக்கிறது என்பதையும் உணர்ந்தார்.
  4. அவர் சென்ற குதிரை வண்டி கவிழக்கூடிய ஆபத்து வந்த பொழுது அவருக்குக் காயம் ஏற்படாமல் ஒரு சக்தி அவரைக் காப்பாற்றியதையும் உணர்ந்தார்.
  5. வேத பாடல்களைப் படித்த பொழுது இயற்கை சக்திகளை தெய்வமாக்கி அவற்றைத் துதி செய்யும் வகையில் பாடப்பட்டுள்ள அந்த பாடல்களுக்குப் பின்னால் மறைமுகமாக ஒரு ஆழ்ந்த ஆன்மீக உண்மை இருப்பதை உணர்ந்தார். அதைத் தொடர்ந்து வேதத்தின் இரகசியம் என்று ஒரு நீண்ட கட்டுரையை எழுதினார்.
  6. காஷ்மீரில் மலையில் நடந்து சென்று கொண்டிருந்த பொழுது சங்கரர் வர்ணித்துள்ள நிர்குண பிரம்மன் என்ற ஆன்மீக அனுபவத்தைப் பெற்றார்.
  7. பிராணயாமம், ஆட்டோமேட்டிக் கையெழுத்து மற்றும் உண்ணாவிரதம் ஆகியவற்றைச் சிறிது காலம் கடைப்பிடித்தார். இப்படி உண்ணாவிரதம் இருந்ததால் உடம்பு மெலிவதைத் தடுக்க முடியாமல் போய்விட்டது.
  8. நீதி மன்றத்தில் சதித் திட்டம் தீட்டியதற்காக அவர் மேல் வழக்குத் தொடரப்பட்ட பொழுது நீதி மன்றத்தில் இருந்த எல்லோரையும் வாசுதேவனாகப் பார்த்தார். அந்த அனுபவம் அகண்டமயமான இறை தரிசனமாக அவருக்கு அமைந்தது.
  9. நீதி மன்றத்தில் விசாரணை நடந்து கொண்டிருக்கும் பொழுது இவரை அமைதியாக இருக்கச் சொல்லி உள்ளிருந்து இவருக்கு ஒரு இறை அசரீரி கேட்டது. தொடர்ந்து அந்த அசரீரி வழக்கிற்குத் தான் பொறுப்பு ஏற்றுக் கொள்வதாகவும் அவரை விடுவிப்பதாகவும் தெரிவித்தது.
  10. அவர் சிறையில் இருக்கும் பொழுது சுவாமி விவேகானந்தர் அவருடைய அகக்காட்சியில் வந்து பகவத்கீதையைப் படிக்கச் சொன்னார். மேலும் சத்தியஜீவியத்தைக் காண்பித்து அதை நோக்கிக் கவனத்தைச் செலுத்தச் சொன்னார்.
  11. அவர் விடுதலையான பின்பு மீண்டும் அவருக்கு ஓர் அசரீரி கேட்டு அதன் உத்தரவுப்படி அவர் புதுவைக்கு வந்தார். அங்கே உலகைத் திருவுருமாற்றம் செய்யும் பொருட்டு சத்தியஜீவியத்தை இறக்குவதற்காக ஒரு புதிய யோகத்தைத் தொடங்கினார். அதற்குப் பூரண யோகம் என்று பெயர் வைத்தார்.
  12. அவர் சிறையில் இருக்கும் பொழுது சிவப்பு எறும்புகள் கடித்ததால் கடுமையான வலி ஏற்பட்டது. உடனே தன் ஆன்மீக சக்தியைப் பயன்படுத்தி அந்த வலியை ஆனந்தமாக மாற்றிக் கொண்டார்.
  13. அன்னை தாம் அவரை ஒரு பார்வையாளராக வந்து தரிசித்தார். அன்னை அவருக்கு நமஸ்காரம் செய்யும் பொழுது அவருக்குப் பகவான் பூரண மௌனத்தை ஆன்மீகப் பரிசாக வழங்கினார்.
  14. அதே மௌனத்தை அன்னையினுடைய கணவர் ரிச்சர்டுக்கும் பகவான் வழங்கினார். ஆனால் ரிச்சர்ட் தனக்குப் பைத்தியம் பிடித்ததுபோல் உணரவே பகவான் அந்த மௌனத்தை ரத்து செய்துவிட்டார்.
  15. இப்படி ஒரு பூரணமாக மௌன நிலையிலிருந்து பகவான் லைஃப் டிவைன் புத்தகத்தை எழுதினார். அப்புத்தகத்தை எழுதும் பொழுது வார்த்தைகளும், வாக்கியங்களும், கருத்துக்களும் அவர் சிந்திக்காமலேயே தானாகவே உதயமாகின.
  16. சத்தியஜீவியத்தை இறக்குவதற்கு அவர் எடுத்துள்ள முயற்சிக்குத் தெய்வங்களை ஒத்துழைக்கும்படி அன்னை கேட்டுக் கொண்டதன் பேரில் கிருஷ்ண பகவான் அவருடைய உடம்பில் இறங்கினார். அப்படி அவர் இறங்கியதன் காரணமாக பகவான் ஞஸ்ங்ழ்ம்ண்ய்க் என்ற சித்தியை அடைந்தார்.
  17. சத்தியஜீவிய திருவுருமாற்றத்திற்குச் சரணாகதிதான் சிறந்த வழி என்று பகவான் கண்டறிந்தார்.
  18. இரண்டாம் உலகப் போர் நடைபெற்ற பொழுது தன்னுடைய ஆன்மீக பலத்தைச் சர்ச்சில் அவர்களைக் கருவியாக வைத்து பயன்படுத்தி நேச நாடுகள் வெல்வதற்குக் காரணமாக இருந்தார்.
  19. இந்தப் போர் நடந்த சமயம் அன்னையைத் தீய சக்திகளிடமிருந்து காப்பாற்றுவதிலேயே தன்னுடைய முழுக் கவனத்தையும் செலுத்தினார். இப்படி அவருடைய கவனம் திசை திரும்பி இருந்ததால் தீய சக்திகள் அதை ஒரு வாய்ப்பாகப் பயன்படுத்தி அவருடைய காலை இடற வைத்து எலும்பு முறிவை நிகழ்த்தின.
  20. சாவித்ரி என்ற காவியத்தை எழுதினார். அது அன்னையினுடைய ஆன்மீக அனுபவங்களுக்கு எழுத்து வடிவம் கொடுத்ததாக அமைந்தது.
  21. அவருடைய ஆன்மீக முயற்சிகளுக்குப் போதிய வரவேற்பை மனிதன் கொடுக்காததால் அவர் தன்னுடைய உடம்பையும் நீத்து சூட்சும உலகிற்குச் சென்று அங்கு தன்னுடைய ஆன்மீகப் பணியைத் தொடர்ந்தார்.
  22. அவர் உடம்பை நீத்து சமாதி அடைந்த பொழுது அவருடைய உடம்பு தங்க மயமான நிறம் பெற்று 5 நாட்கள் அவ்வாறே இருந்தது.
  23. அன்னையினுடைய பெற்றோர் இறை நம்பிக்கை இல்லாதவர்- களாக இருந்தாலும் அவர்களைப் பெற்றோராக அன்னை தேர்ந்தெடுத்ததற்கு ஒரு முக்கிய காரணம் இருந்தது. அன்னை- யினுடைய தகப்பனாருக்கு உடல் ரீதியாக ஒரு அசாதாரண சமநிலை இருந்தது. அந்த சமநிலை அன்னைக்குப் பின்னால் மிகவும் உதவியாக இருந்தது.
  24. அவருக்கு 5 வயது ஆகும் பொழுதே அவருடைய வாழ்க்கையை ஒரு இறை ஒளி வழி நடத்திச் செல்வதை உணர்ந்தார்.
  25. தன்னுடைய பத்தாவது வயதிலிருந்து 13வது வயது வரை தினமும் இரவில் அவர் தன்னுடைய உடம்பை விட்டு வெளி வந்து ஆகாயத்தில் உயரே செல்வார். அப்பொழுது அவருடைய ஆடை பல மைல்களுக்கு விரிந்து பரவுமாம். பிரச்சினைகளில் மூழ்கி இருக்கின்ற பல பேர், அவர்களும் தங்களுடைய உடலை விட்டு வெளி வந்து, அன்னையினுடைய ஆடையைத் தொட்டு தம்முடைய துன்பங்களிலிருந்தும், வருத்தங்களிலிருந்தும் விடுபட்டு மீண்டும் அவரவருடைய உடம்பிற்குள்ளேயே சென்று விடுவார்களாம்.
  26. இப்படிப்பட்ட அன்னையினுடைய இரவு அனுபவங்களின் சமயம் கனிவான பார்வை கொண்ட ஒரு வயதானவர் அவரை அணுகி வந்து அவருடைய அறிவையெல்லாம் அன்னைக்கு வழங்கிவிட்டு தன்னைத் தானே அழித்துக் கொண்டார். பின் நாட்களில் அவர்தான் துன்பத்தின் தலைவன் என்ற அசுரன் என்பதை அன்னை அறிந்தார்.
  27. பல மகான்கள் அன்னைக்கு அகக் காட்சியில் தோன்றி ஆன்மீகப் பயிற்சி கொடுத்ததாகவும் அதில் கரிய நிறம் கொண்டவராகவும், ஆசிய இனத்தைச் சேர்ந்தவராகவும் தெரிந்த ஒரு மகானுக்குத் தான் கிருஷ்ணா என்று பெயர் வைத்திருந்ததாகவும் அன்னை தெரிவித்துள்ளார்.
  28. அன்னை இருபது வயதைக் கடந்த பொழுது ஒரு இந்திய சாதகரை ஐரோப்பாவில் சந்தித்தார். அவர் அன்னையிடம் இறைவனை வெளியே தேடாமல் உள்ளே தேடும்படி அறிவுறுத்தினார். இது அன்னைக்கு ஒரு பெரிய திருப்பமாக அமைந்தது. ஏனென்றால் அவர் அதுவரையிலும் எந்த பலனுமின்றி இறைவனை வெளியில்தான் தேடிக் கொண்டிருந்தார். இந்தத் தடயத்தை வைத்துக் கொண்டு அன்னை இறைவனை உள்ளே தேடுவதற்கு ஒரு இடைவிடாத முயற்சியை தொடங்கினார். அதன் பலனாக ஒரு வருட இறுதியில் தன்னுடைய சைத்தியப் புருஷனைக் கண்டுபிடித்தார்.
  29. அடுத்ததாக அன்னை தன்னுடைய உடலின் ஜீவியத்திற்கும் அதற்கு அடுத்த நிலையில் இருக்கின்ற ம்ஹற்ங்ழ்ண்ஹப், ல்ட்ஹ்ள்ண்ஸ்ரீஹப் என்ற நிலைக்கும் இடையே உள்ள இடைவெளியை நிரப்ப முயன்றார். அந்த முயற்சியிலும் சிறிது காலத்திற்குப் பின்பு வெற்றி கண்டார்.
  30. அன்னை தன்னுடைய கடந்த கால பிறப்புகளில் ஒரு எகிப்திய ராணியாகவும், ஓர்ஹய் ர்ச் ஆழ்ஸ்ரீ என்ற பிரஞ்சு வீராங்கனையாக- வும், ஒரு இங்கிலாந்து நாட்டு அரசியாகவும், ரஷ்ய மகாராணி- யாகவும் இருந்ததாகக் கூறியிருக்கிறார்.
  31. ஞஸ்ரீஸ்ரீன்ப்ற்ண்ள்ம் என்று சொல்லப்படுகின்ற ஆன்மீக நுணுக்கங்- களை ஙஹஷ் பட்ங்ர்ய் மற்றும் ஆப்ம்ஹ பட்ங்ர்ய் என்ற இரண்டு நிபுணர்களிடம் ஆல்ஜீரியாவில் அவர்களோடு தங்கி கற்றுக் கொண்டார். தன் உடம்பைவிட்டு வெளியேறவும் சூட்சும உலகங்களில் சஞ்சரிக்கவும் கற்றுக் கொண்டார்.
  32. ஆப்ம்ஹ பட்ங்ர்ய் அவர்கள் அன்னையின் தலைக்கு மேல் பன்னிரெண்டு வைரங்கள் பதித்த கிரீடத்தைக் கண்டார். ஞஸ்ங்ழ்ம்ண்ய்க் நிலைக்கு மேல் இருக்கும் நிலையில் இருப்பவர்களுக்குத்தான் இத்தகைய கிரீடம் இருக்கும் என்பதை உணர்ந்து அதை அன்னைக்குத் தெரியப்படுத்தினார். இந்தக் கிரீடம் அவர் தலைக்கு மேல் இருக்கும் வரை அவரை யாரும் ஒன்றும் செய்ய முடியாது என்றும் அன்னையிடம் சொன்னார்.
  33. இப்படிச் சூட்சும உலகங்களில் சஞ்சரிக்கும் பொழுது வாழ்க்கை மந்திரம் என்ற ஒரு அரிய மந்திரத்தை அங்கே கண்டறிந்தார். ஆனால் அதை தியான் அவர்களுக்குக் கொடுக்க மறுத்தார். இதனால் ஆத்திரம் அடைந்த தியான் அன்னைக்கும் அவர் உடம்பிற்குமிடையே இருந்த சூட்சும தொடர்பைத் துண்டித்தார். பிறகு தான் செய்த தவற்றை உணர்ந்து தன்னுடைய ஆன்மீக சக்தியை எல்லாம் ஒன்று திரட்டி மீண்டும் அன்னை தன் உடம்பிற்குள் புகுவதற்கு வழி செய்தார்.
  34. கப்பலில் பயணம் செய்து கொண்டிருந்த பொழுது சில தீய சக்திகள் ஒரு புயலை உண்டுபண்ணி கப்பலில் இருந்த பயணிகளுக்குப் பயம் விளைவிப்பதைக் கண்டறிந்தார். தியான் அன்னையிடம் அந்தத் தீய சக்திகளைக் கட்டுப்படுத்தும்படி கட்டளையிட்டார். அன்னையும் தன் உடம்பை விட்டு வெளியேறி அந்தத் தீயசக்திகளை கட்டுப்படுத்திக் கடலை மீண்டும் அமைதி அடையச் செய்தார்.
  35. தியான் மரணத்தின் தலைவன் என்ற அசுரனுடைய மானிடப் பிரதிநிதி என்பதை அறிந்து தன்னுடைய வருங்கால ஆன்மீகப் பணி அவரோடு இல்லை என்பதை உணர்ந்து அவரை விட்டு விலகினார். இரண்டு தடவை அவரோடு தங்கி பயிற்சி மேற்கொண்டவர் அதன் பிறகு அவரைப் பார்க்கச் செல்லவில்லை.
  36. பால் ரிச்சர்ட் என்பவரைச் சந்தித்த பொழுது பொய்யின் தலைவன் என்ற அசுரனுடைய மானிடப் பிரதிநிதி இவர் என்று அறிந்தார். அவரைத் திருவுருமாற்றம் செய்வதற்காக அவரோடு இருக்க விரும்பி அவரைத் திருமணம் செய்து கொண்டார்.
  37. ரிச்சர்ட் புதுவைக்குச் செல்ல தயாரான பொழுது அன்னை அவரிடம் நற்ஹழ் ர்ச் உஹஸ்ண்க் என்ற சின்னத்தைக் கொடுத்து அதனுடைய ஆன்மீக அர்த்தத்தைப் புதுவையில் இருக்கின்ற மகான் யாரிடமாவது கேட்டுத் தெரிந்து கொண்டு வரச் சொன்னார். புதுவைக்கு வந்த ரிச்சர்ட் பகவானைச் சந்தித்த பொழுது அவர் அதற்குச் சரியான விளக்கத்தை வழங்கினார். அந்த விளக்கத்தைக் கேட்டறிந்த அன்னை பகவானைக் காண வேண்டும் என்று ஆவல் கொண்டார்.
  38. அதன்படியே புதுவைக்கு வந்து பகவானைச் சந்தித்தார். அவரைக் கண்ட மாத்திரத்திலேயே சிறு வயதில் தன் அகக் காட்சியில் காட்சியளித்துத் தன்னால் கிருஷ்ணா என்று பெயரிடப்பட்ட மகான் இவர்தாம் என்று அவர் உணர்ந்தார். இந்தியர்களைப் போலவே பகவானுக்குத் தானும் நமஸ்காரம் செய்தார். அப்படி அவர் நமஸ்காரம் செய்த பொழுது தனக்குப் பூரண சரணா- கதியை அன்னை வழங்கியதாக பகவான் உணர்ந்தார். அவர் நமஸ்காரம் செய்யும் பொழுதே பூரண மௌனத்தை அன்னைக்கு ஆன்மீகப் பரிசாக வழங்கினார்.
  39. முதலாம் உலகப் போரில் ஜெர்மன் ராணுவம் பாரீஸ் நகரை தாக்க முற்பட்ட பொழுது கரிய நிற காளி தேவதை பாரிஸை தான் வென்றுவிட்டதாக அன்னையிடம் பெருமையடித்தது. அன்னை தன் ஆன்மீக சக்தியைப் பயன்படுத்தி அந்தத் தீய குணம் படைத்த காளியை அடக்கி, முன்னேறி வந்த ஜெர்மானிய ராணுவத்தைத் திடீர் பிரஞ்சு தாக்குதலுக்கு ஆளாகுவோமோ என்று பயம் கொண்டு பின்வாங்கச் செய்தார்.
  40. பாரீஸுக்குத் திரும்ப நேரிட்ட பொழுது அன்னை தன்னுடைய சைத்தியப் புருஷனை பகவானிடம் ஒப்படைத்துவிட்டுச் சென்றார்.
  41. அன்னை ஜப்பான் சென்ற பொழுது ரவீந்திரநாத் தாகூர் அவர்களைச் சந்தித்தார். சந்தித்த பொழுது அவர் சச்சிதானந்- தத்துடன் தொடர்பில் இருப்பதை அறிந்தார்.
  42. அன்னை ஜப்பானில் இருந்த பொழுது அங்கு ஒரு விஷக் காய்ச்சல் பரவிக் கொண்டிருந்தது. முதல் உலகப் போரில் இறந்த ஜப்பானிய வீரர்களுடைய ஆவிகள்தான் இப்படி மக்களின் உடம்பிற்குள் புகுந்து வியாதியை உண்டு பண்ணுகின்றன என்பதைக் கண்டறிந்தார். இந்தக் காய்ச்சலுக்குப் பின்னால் இருக்கின்ற அசுர சக்தியை அழித்து காய்ச்சலைக் கட்டுப்பாட்டிற்- குள் கொண்டு வந்தார்.
  43. தொடர்ந்து ஜப்பானில் இருக்கும் பொழுது புத்தபிரான் அன்னைக்குக் காட்சியளித்து அன்னையின் இதயத்திற்குள் ஒரு வைரம் இருப்பதாக அன்னைக்குத் தெரிவித்தார். மேலும் எதற்கும் பயப்பட வேண்டாம் என்றும் உலகத்து மக்களுக்குத் தன்னுடைய அன்பையும், கருணையையும் வழங்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்.
  44. இந்தியாவிற்கு அன்னை நிரந்தரமாகத் திரும்பி வந்த பிறகு தியானத்தில், ஆங்கிலேயர், இந்தியாவிற்கு வன்முறை இல்லா- மலும், தேசம் இரண்டுபடாமலும் சுதந்திரம் கொடுப்பதாக அகக்காட்சி ஒன்றைப் பார்த்தார்.
  45. அன்னை ஞஸ்ங்ழ்ம்ங்ய்ற்ஹப் நிலையில் ஒரு புதிய படைப்பையே தொடங்க விரும்பினார். ஆனால் பகவான் அம்முயற்சியைத் தடுத்து நிறுத்தி சத்தியஜீவிய படைப்பைத்தான் நாம் நாடிப் போக வேண்டும் என்று வலியுறுத்தினார்.
  46. நவராத்திரி விழா சமயத்தில் துர்க்கை அன்னைக்குக் காட்சியளித்த பொழுது மக்களுடைய வழிபாட்டில் மகிழ்ந்து போய் தன்னுடைய பெருமையையே நினைத்துக் கொண்டிருக்காமல் பரம்பொருளுக்குச் சரணம் அடையும்படி துர்க்கைக்கு அன்னை அறிவுறுத்தினார்.
  47. ஆசிரம விடுதி ஒன்றின் சுவரைக் கடல் அலைகள் அரித்துக் கொண்டிருந்த பொழுது அன்னை கடற்கரையில் அமர்ந்து தியானம் செய்து கடல் தெய்வத்தைச் சந்தித்து இப்படி அரிக்க வேண்டாம் என்று கேட்டுக் கொண்டார். அந்த தெய்வமும் அதற்குச் சம்மதித்தது. அதன் பின்னர் விடுதியின் சுவர்கள் அரிக்கப்படவில்லை.
  48. விநாயகருடைய சின்ன சிலையிலிருந்து விநாயகர் நிஜமாக வெளிவருவதை அன்னை கண்டார். அவரிடம் ஆசிரமத்திற்கு நிறைய பணம் ஏற்பாடு செய்யுமாறு அன்னை கேட்டுக் கொண்டதன் பேரில் அவரும் சம்மதித்து ஒரு சில வருஷத்திற்கு ஆசிரமத்திற்கு நிறைய பணம் வரும்படி செய்தார்.
  49. சூட்சும நிலையில் கிருஷ்ண பகவானைப் பார்த்து சத்திய ஜீவியத்தை இறக்குவதற்குப் பகவான் எடுத்துக் கொண்ட முயற்சிக்குத் துணை போகுமாறு அன்னை கேட்டுக் கொண்டார். கிருஷ்ண பகவான் அதற்குச் சம்மதித்தார். ஆனால் சிவபெருமான் பிஸிக்கல் லெவலுக்கு இறங்கி வர சம்மதிக்கவில்லை. அதற்குப் பதிலாக சிவபெருமான் உடல் அளவில் அகந்தை கரைவதற்கான வரம் ஒன்றை அன்னைக்கு அளித்தார். அன்னையின் உடல் உடனே கரையத் தொடங்கியது. இத்தகைய முயற்சிக்கான நேரம் இன்னும் வரவில்லை என்று சொல்லி பகவான் அந்த முயற்சியைத் தடுத்து நிறுத்தினார்.
  50. அன்னை யார் என்பதைப் பகவான் முறையாக ஆசிரமவாசி- களுக்குத் தெரியப்படுத்தினார். அன்னையும் அந்த அறிவிப்பை மற்றவர்களோடு சேர்ந்து கேட்டுக் கொண்டார்.
  51. பால்கனியில் இருந்து தினமும் ஆசிரமவாசிகளுக்குத் தரிசனம் கொடுக்க ஆரம்பித்தார். தரிசனம் பார்க்கக் காத்திருப்பவர்- களோடு தன்னை ஐக்கியப்படுத்திக் கொண்டு அவர்களுக்கு இறைவனுடைய அன்பு, அருள், ஒளி எல்லாவற்றையும் கொடுப்ப- தற்கான கருவியாகத் தன் உடம்பைப் பயன்படுத்திக் கொண்டார்.
  52. அன்னையினுடைய ஆனந்தம் என்ற அம்சம் பிஸிக்கல் லெவலுக்கு இறங்கி வந்தது. ஆனால் எதிர்பார்த்த வரவேற்பு மக்களிடம் இல்லை என்பதால் அந்த அம்சம் மீண்டும் திரும்பிச் சென்று விட்டது.
  53. அன்னை மலர்களோடு உறவாடி அவற்றுடைய ஆன்மீக அம்சங்களை உணர்ந்து ஏறக்குறைய 800 மலர்களுக்கு ஆன்மீகப் பெயர்களை வழங்கினார்.
  54. இரண்டு உலகப் போர்களையுமே அன்னை சத்தியஜீவியம் இறங்குவதற்குத் தீய சக்திகள் தெரிவித்த எதிர்ப்பாக எடுத்துக் கொண்டார். ஹிட்லருக்கு வழிகாட்டிக் கொண்டிருந்த பொய்யின் தலைவன் என்ற அசுரனுடைய வேஷத்தை அன்னை ஏற்றுக் கொண்டு ரஷ்யாவைத் தாக்கும்படி ஹிட்லருக்கு அறிவுறுத்தினார். ஹிட்லரும் அவ்வாறு செய்யவே இறுதியில் அது ஜெர்மனிக்குத் தோல்வியாக முடிந்தது.
  55. இந்திய சுதந்திரத்தின் பொழுது நாடு இரண்டாகப் பிரியும் என்று மௌண்ட்பேட்டன் பிரபு தெரிவித்த பொழுது இந்தியாவின் ஆன்மா ஒன்றுதான் என்று அன்னை வலியுறுத்தினார். அதைப் பிரதிபலிக்கும் வகையில் இந்தியா, பாகிஸ்தான், நேபாளம், இலங்கை மற்றும் பர்மாவைச் சேர்த்து ஒரே நாடாக இந்தியாவிற்கு ஒரு ஆன்மீக வரைபடத்தை உருவாக்கினார்.
  56. பகவான் சமாதி அடைந்த பொழுது அவர் உடம்பில் தங்கியிருந்த சத்தியஜீவிய சக்தியெல்லாம் அன்னையின் உடம்பிற்குள் வந்து சேர்ந்தது. அதன் விளைவாக பகவான் ஏற்கனவே வர்ணித்- திருந்த ஒளிமயமான அறிவு என்ற ஆன்மீக அனுபவம் அன்னைக்குக் கிடைத்தது.
  57. தீய சக்திகள், திருவுருமாற்றத்தை வெற்றிகரமாகச் செய்ய முடியாது என்று அன்னைக்கு இடைவிடாமல் சந்தேகங்களை எழுப்பி அவரைத் துன்புறுத்தி வந்தன. அன்னை "ஓம் நமோ பகவதே'' என்ற மந்திரத்தை இடைவிடாமல் சொல்லி இந்த சந்தேகங்களை முறியடித்துத் தன் மனதிற்குள் ஒரு அமைதியை நிலைநாட்டினார்.
  58. பகவான் சமாதி அடைந்த பிறகு சுமார் பத்து வருடங்களுக்கு சூட்சும உலகத்தில் அன்னையோடு தொடர்பு கொள்ளாமல் விலகி இருந்தார். இறுதியாக அன்னையால் அவரைச் சந்திக்க முடிந்த பொழுது வேண்டும் என்றே அப்படி விலகி இருந்ததாகவும், அப்பொழுதுதான் அன்னை தன்னுடைய திருவுருமாற்றப் பணியில் கவனம் செலுத்துவார் என்று தாம் நம்பியதாகவும் தெரிவித்தார்.
  59. 1956ஆம் ஆண்டு பிப்ரவரி 29ஆம் தேதி ஆசிரம விளையாட்டு அரங்கில் தியானம் நடந்து கொண்டிருந்த பொழுது அறிவுமயமான உலகத்தையும், அறியாமை நிரம்பிய நம்முடைய உலகத்தையும் பிரித்து வைத்திருந்த ஒரு பொன்னிறமான கதவை அன்னை பொன்னிறமான சுத்தியால் உடைத்த பொழுது சத்தியஜீவியம் பூமிக்குள் அலை அலையாக இறங்கியது. அதே சமயம் இறங்கிய பொன்னொளியைப் பூமியிலிருந்து எழும்பிய அறியாமையினுடைய கருமையான அலைகள் விழுங்கியதையும் கண்டார்.
  60. தியாகத்தினால் இந்த உலகத்தைத் தீமையிலிருந்து காப்பாற்ற முடியாது என்று அன்னை கண்டறிந்தார். மாறாக பிஸிக்கல் நிலையில் வேரூன்றி இருக்கின்ற தீமையை ஆனந்தத்தால் தான் முறியடிக்க முடியும் என்று கண்டறிந்தார்.
  61. சத்தியாரோகணம் என்ற தன்னுடைய நாடகத்தின் மூலம் திருவுருமாற்றத்தினுடைய உச்சகட்ட நிலையில் நம்முடைய தனிப்பட்ட சொந்த முயற்சி உதவாது என்றும் அருள்தான் உதவிக்கு வர வேண்டும் என்றும் தெரிந்து கொண்டார்.
  62. சத்தியஜீவியத்திற்கும் ஜட நிலைக்கும் இடையே ஒரு இடைப்பட்ட உலகத்தை அன்னை சத்தியஜீவியப் பொருளை வைத்துக் கொண்டு தயார் செய்தார். அவருடைய அகக் காட்சியில் அந்த இடைப்பட்ட உலகம் சத்தியஜீவிய திருவுருமாற்றத்திற்குத் தயாராக உள்ள மனிதர்களை ஏற்றிச் செல்லும் ஒரு படகாகக் காட்சி அளித்தது.
  63. நம்முடைய சாதாரண மானிட நிலைக்கும், சத்தியஜீவிய மானிட நிலைக்கும் இடைப்பட்ட ஒரு மானிட நிலையைப் பற்றி அன்னை விவரித்தார். இந்த இடைப்பட்ட மானிட நிலையில் மனிதன் ஜீவியத்தைப் பொறுத்தவரை சத்தியஜீவியத்தைச் சார்ந்திருப்- பான். அதே சமயத்தில் நம்மைப் போல் பிஸிக்கலாக இனவிருத்தி செய்யாமல் ஆன்மீக முறையில் தன்னை இனவிருத்தி செய்து கொள்வான்.
  64. உணர்வற்று இருக்கின்ற அடிமனத்தின் ஆழத்தில் வளைந்து கொடுக்காமல் இறுகி இருக்கின்ற ஒரு ஸ்பிரிங்கை அன்னை தொடுவதாகவும் அது அப்படியே அன்னையைத் தூக்கி புதிய படைப்பின் வித்துகள் நிரம்பிய ஒரு வரம்பில்லாத அகண்ட வெளியில் தள்ளுவதாகவும் ஒரு ஆன்மீக அனுபவத்தைப் பெற்றார்.
  65. ஆசிரமத்தில் உயிர் நீத்த ஒரு சாதகியின் நெற்றியில் பகவானுடைய சின்னத்தை அன்னை கண்டார். அச்சமயம் ஆசிரமத்தில் உயிர் நீப்பவர்களுக்கு எந்தவித நிபந்தனையும் இன்றி தன்னுடைய பாதுகாப்பை வழங்கப் போவதாகவும் பகவான் தன்னிடத்தில் சொல்வதையும் அன்னை கேட்டுக் கொண்டார்.
  66. ஸ்ரீ அரவிந்தரைப் போல் வேடம் தரித்த ஒரு அசுரனை அன்னை சந்திக்க நேரிட்டது. அது பொய் வேடம் என்று அன்னை தெரிந்து கொண்டாலும் போட்ட வேடம் பகவானுடைய வேடமாக இருப்பதால் அதற்கு மரியாதைக் கொடுத்து அசுரன் சொல்வதை அன்னை கேட்டுக் கொண்டார்.
  67. இந்தி எதிர்ப்புப் போராட்டத்தின் பொழுது ஆசிரமத்தின் மேல் நிகழ்ந்த வன்முறை தாக்குதலின் பின்னால் காளி இருப்பதை அன்னை அறிந்தார். ஏன் இப்படிக் காளி ஆசிரமவாசிகளுக்கு அடி கொடுக்கிறார் என்பதையும் அறிந்து கொண்டார். பின்னர் காளியை அடக்கி நிலைமையைக் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்தார்.
  68. ஒவ்வொரு தரிசனத்தின் பொழுதும் அன்னை தன்னுடைய வெவ்வேறு பர்சனாலிட்டிகளை வெளிப்படுத்தியதாகச் சொல்- கிறார். 1967ஆம் ஆண்டு நவம்பர் 24ஆம் தேதி அன்னை வழங்கிய தரிசனத்தில் நித்தியமான உலகத்திலிருந்து செயல்படுகின்ற ஒரு ஜீவன் அன்னையின் மூலம் வெளிப்பட்டு தரிசனத்திற்கு வந்திருப்பவர்களை எல்லாம் கருணையோடு பார்த்ததாக அன்னை தெரிவித்துள்ளார்.
  69. 1968ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 28ஆம் தேதி உலக ஒற்றுமைக்கு அடையாள சின்னமாக அன்னை ஆரோவில் நகரத்தை நிறுவும் வகையில் அடிக்கல் நாட்டினார்.
  70. இறை ஜீவியத்தையும், அதனுள் அடங்கி இருக்கின்ற இறை அன்பு, அமைதி, இனிமை போன்ற உணர்வுகளையும் அன்னை நிதர்சனமாக அனுபவித்தார். அந்த அனுபவம் கிடைத்த பொழுது ஒரு கருங்கல்லைத் தன் கையாலேயே நசுக்கும் அளவிற்குத் தன் உடம்பிற்குள் சக்தி வந்ததாகக் கூறினார்.
  71. 1965ஆம் ஆண்டு நிகழ்ந்த இந்தியா-பாகிஸ்தான் போரின் பொழுது இந்தியத் துணைக் கண்டத்தின் ஒற்றுமையை மீண்டும் நிலைநாட்டுவதற்கான ஒரு நல்ல வாய்ப்பு இது என்று அன்னை எடுத்துக் கொண்டு அவ்வாறே செய்யும்படி பிரதமர் சாஸ்திரி அவர்களுக்கு யோசனை வழங்கினார். அதற்கு உண்டான சக்தியை வழங்குவதற்கு அன்னை தன்னுடைய ஒளியை அனுப்பினார். ஆனால் அந்த ஒளியே அவருக்கு ஒரு பெரிய பாரமாகி அவர் உயிர் இழக்கும்படி நேரிட்டது.
  72. சத்தியஜீவியத்தை அனுபவிக்கும் சந்தர்ப்பம் அன்னைக்குக் கிடைத்தது. பூரண சுதந்திரத்தையும் எந்தவித கட்டுப்பாடு இல்லாத நிலையையும் அன்னை அந்நேரம் அனுபவித்தார். மற்ற எல்லா உடம்புகளும் அன்னையினுடைய உடம்பின் அங்கங்களாகத் தான் தெரிந்தன. எல்லாமே ஜீவியத்தின் ஒரு விளையாட்டாகத் தான் தெரிந்தது.
  73. அவருடைய உடம்பால் சத்தியஜீவியத்தை ஏற்று வெளிப்படுத்த முடியும் என்ற நம்பிக்கையை கொடுப்பதற்கு அன்னை ஒரு வருடம் முயற்சி எடுத்து இறுதியில் வெற்றி கண்டார்.
  74. தனக்கு நமஸ்காரம் செய்த ஒரு பெண் சாதகியின் சைத்தியப் புருஷனை அன்னை பார்க்க நேரிட்டது. அப்பொழுதுதான் அவருக்கு மனிதனுடைய சைத்தியப் புருஷன்தான் இறங்குகின்ற சத்தியஜீவிய சக்தியை ஏற்று திடவடிவம் பெற்று சத்தியஜீவிய மனிதனாக உருமாறும் என்று உணர்ந்தார்.
  75. பிரபஞ்ச அன்னைக்காக எழுப்பக்கூடிய கோயில் ஒன்றைப் பற்றிய அகக்காட்சி அன்னைக்குத் தெரிந்தது. அக்காட்சிக்கு வெளி வடிவம் கொடுக்கும் வகையில் ஆரோவில்லில் அன்னை மாத்ரு மந்திர் கட்டும் வேலையைத் தொடங்கினார்.
  76. சத்தியஜீவியம் என்பது முரண்பாடுகளை உடன்பாடுகளாக்கும் ஒரு ஜீவிய நிலை என்ற ஓர் அனுபவம் அன்னைக்குக் கிடைத்தது. ஒரே சமயத்தில் சத்தியஜீவியம் இயக்கம் நிறைந்ததாகவும் மற்றும் அமைதியும் நிரம்பியதாகவும் இருப்பதாக அன்னை அனுபவித்தார்.
  77. மனிதர்களைச் சந்தித்துப் பேசிக் கொண்டிருக்கும் பொழுதுகூட அன்னை உள்ளே தன்னுடைய மனநிலையைப் பரிசுத்தம் செய்து கொண்டிருப்பதாகவும் இறை ஜீவியத்தை ஏற்று வெளிப்படுத்து- வதற்குத் தடையாக இருப்பவற்றை எல்லாம் அகற்றிக் கொண்டி- ருப்பதாகவும் தெரிவித்தார்.
  78. இருக்கின்ற எல்லா தடைகளையும் மீறி இறைவனோடு தான் ஐக்கியமானதாகவும் ஓர் அனுபவம் தனக்குக் கிடைத்ததாக அன்னை கூறியுள்ளார்.
  79. பொய்யிலிருந்து நிரந்தர விடுதலை கிடைக்க வேண்டுமென்றால் இறை ஜீவியத்திற்கு எதிராக அவரவருக்குள் இருக்கின்ற விஷயங்களை அகற்றுவதுதான் முழு நிவாரணம் தரும் என்று தெரிவித்துள்ளார்.
  80. அன்னை அவர்களுடைய வாழ்நாளின் இறுதி கட்டத்தில் சத்தியஜீவியத்தைக் கண்டு அவருடைய அறிவு சஞ்சலம் அடைவதாகக் கண்டறிந்தார். "ஓம் நமோ பகவதே'' என்ற மந்திரத்தை இடைவிடாமல் சொல்லி அவர் தன்னுடைய அறிவை அமைதிப்படுத்தவும் முயன்றார்.

******



book | by Dr. Radut