Skip to Content

07.அஜெண்டா

“Agenda”

Sri Aurobindo's hernia bandages; Sadhaks are editing his books. In the subtle plane an Italian told Sri Aurobindo not to touch some books without the permission of The Mother.

ஸ்ரீ அரவிந்தருக்கு ஹெர்னியா கட்டுப் போட்டிருந்தது. சாதகர்கள் அவர் எழுதியவற்றைத் திருத்துகிறார்கள். சூட்சும உலகில் ஓர் இத்தாலியர் ஸ்ரீ அரவிந்தரை அன்னை உத்தரவில்லாமல் சில புத்தகங்களைத் தொடக்கூடாது என்றார்.

1950இல் ஸ்ரீ அரவிந்தர் சமாதியானபின் 1959வரை அன்னை அவரை சூட்சும உலகில் காணவில்லை. 1959இல்தான் முதல் முதலி ல் சூட்சும உலகில் அன்னை ஸ்ரீ அரவிந்தரைச் சந்தித்தார். அது முதல் தினமும் அவரால் ஸ்ரீ அரவிந்தரைச் சந்திக்க முடிந்தது.

கம்ப்யூட்டர், பார்வைக்கு டைப்ரைட்டர் போலிருக்கும். அனுபவமில்லாதவர் டைப்ரைட்டர் என்றும் நினைப்பார். விவரம் தெரியாமல் கம்ப்யூட்டரை டைப்ரைட்டர்போல் நினைத்து டைப் அடிக்க ஆரம்பித்தால் எழுத்து டைப்ரைட்டரில் விழுவதுபோல் விழும். ஏதாவது கை தவறி வேறு பட்டனில் கைபட்டுவிட்டல், ஸ்கிரீனில் டைப் செய்த அவ்வளவும் அழிந்துபோகும். அல்லது கம்ப்யூட்டருக்குரிய டிக்ஷனரி பக்கம் ஸ்கிரீனில் வரும். சமயத்தில் கம்ப்யூட்டருள் என்ன நடக்கிறது என்று நமக்குத் தெரியாது. ஏதேதோ நடக்கும்.

சூட்சும உலகம் ஒருவகையில் கம்ப்யூட்டரைப் போன்றது. நாம் அனுபவமில்லாமல் கம்ப்யூட்டரை உபயோகப்படுத்தும்பொழுது கம்ப்யூட்டர் என்ன ஆகிறது என நாம் அறிவதில்லை.

பகவான் ஸ்ரீ அரவிந்தர் சம்பந்தப்பட்ட அத்தனை விஷயங்களும் கம்ப்யூட்டரைப் போன்றவை. அவர் எழுதியவை பிரம்மாஸ்திரம் போன்றவை. அதை ஆங்கில அறிவு மட்டும் உள்ளவர் புரிந்துகொள்வது கடினம். திருத்த முயல்வது elephant என்பது ஒருவரை ant என்பது போலாகும். Ant என்பதே இரண்டிற்கும் பொது, eleph என்பதுதான் மாற்றம் என்று பேசுபவரின் தர்க்கம் போலாகும்.

. நாம் ஸ்ரீ அரவிந்தரை மகான், ரிஷி என நினைக்கிறோம்.

. மேல் நாட்டவர் அவரை அறிஞர் என்கின்றனர்.

. தேசபக்தர்கள் பகவான் ஸ்ரீ அரவிந்தரைச் சுதந்திரப் போராட்டத் தலைவர் என்கிறார்கள்.

. அன்று பிரிட்டிஷ் சர்க்கார் அவரை political refugeeபிரான்ஸ் நாட்டின் பகுதியில் தஞ்சம் புகுந்த அரசியல் அகதியாகக் கருதினர்.

. ஸ்ரீ அரவிந்தர் அரசியல் தலைவரோ, அறிஞரோ, மகானோ, ரிஷியோயில்லை. அவர் பேசும்பொழுது சத்தம் தரையில் பட்டால் பட்ட இடம் சத்தியஜீவியமாக மாறிற்று என்றார் அன்னை.

இது உலகுக்கு இறைவன் வரும் தருணம் என அறிவிக்க வந்த இறைவனின் பகுதி என அன்னை கூறுகிறார்.


 

****


 



book | by Dr. Radut