Skip to Content

05.அன்பர் கடிதம்

அன்பர் கடிதம்

ஓம் நமோ பகவதே ஸ்ரீ அரவிந்தாய.

ஸ்ரீ அரவிந்தர், மஹாசக்தி அன்னை மலர்ப்பாதங்களே சரணம்.

என் கணவரின் வேலை : (அன்னையின் அருள்)

நான் அன்னையிடம் வந்தது 2000, April 14th . நான் அம்பத்தூர் தியான மையத்தில்

இரவு 7 - 7.30 கூட்டுத் தியானம் செய்தேன். அதன் பலன், ஏழு வருடங்களாக நிரந்தர

வேலையில்லாமல் இருந்த அவர், நல்லதொரு companyயில் ரூ.7,500/- ஊதியத்தில் வேலையில் சேர்ந்தார். அன்னை எதிர்பார்க்கும் hard work, sincerity, punctualityமற்றும் job allignmentஎன்ற நல்ல qualities அவரிடம் இருந்ததால், May 2nd, 2000 வேலையில் அன்னையின் அருளால் சேர்ந்தார். இப்போது, அவருடைய ஊதியம் ரூ.10,000/-. எங்கள் குடும்பத்தில் சந்தோஷமும், குதூகலமும் அன்றுதான் தொடங்கியது.

குழாயில் தண்ணீர் வந்தது :

(ஸ்ரீ அரவிந்தரின் அருள்)

நான் என் தாயார் வீட்டிற்குச் சென்றிருந்தேன் (Mambalam- Brindavan St. extn,). அவர்கள் வீடு, மூன்றாவது மாடியில் உள்ளது. அன்று காலை 6 மணி முதல் குழாயில் தண்ணீர் வரவில்லை. என் தந்தையிடம் கூறியபோது, watchman மோட்டார் போடுவார், இன்னும் சிறிது நேரத்தில் தண்ணீர் வந்துவிடும் என்றார். ஆனால் வரவில்லை.kitchen குழாயில் மட்டும் தண்ணீர் வந்தது. ஒவ்வொருவராகப் பிடித்து குளித்து, சமையல் வேலையும் முடிந்தது. நான் மட்டும்தான் இன்னும் குளிக்கவில்லை. பாத்ரூமில் தண்ணீர் இருக்கும் என்ற தைரியத்தில், தலையில் எண்ணெய் வைத்துக்கொண்டு சீயக்காயையும் எடுத்துக்கொண்டு குளிக்கச் சென்றேன். Bathroomஇல் அரை bucket தண்ணீர்தான் இருந்தது. என் தம்பியின் மனைவி, கதவைத் தட்டி "அக்கா, tankஇல் தண்ணீர் இல்லை, motor repair, அதனால் நீங்கள் குளிக்கவேண்டாம், வெளியே வாருங்கள்'' என்று கூறிப் போய்விட்டாள். அந்த வேளையில் நான் தலையில் சீயக்காயை தேய்த்துக்கொண்டுவிட்டேன். இப்போது நான் குளித்தே ஆக வேண்டும். உடனே, நான் ஸ்ரீ அரவிந்தரை மனதில் நினைத்துக்கொண்டு, Savitriஇல் page 571 – Then suddently there came on her the change - 32nd line - அதைக் கூறத் தொடங்கினேன். எங்கிருந்துதான் தண்ணீர் வந்ததோ தெரியாது, 6 - 7 bucketதண்ணீர் வந்தது. என் கண்ணில் கண்ணீரும் வந்தது.

குளித்து முடித்துவிட்டு வெளியே வந்து, ஸ்ரீ அரவிந்தரின் படத்தைப் பார்த்தேன். அவர், "நன்றாகக் குளித்தாயா?'' என்று கேட்பதுபோலப் புன்னகை செய்தார். உடனே என் இரு கரங்களைக் கூப்பி அவருக்கு நன்றி கூறினேன்.

என் வாழ்வில் நான் கண்ட அனுபவத்தில், மதர்ஸ் ஸர்வீஸ் சொசைட்டி வெளியீடான, "அருளமுதம்'', ஸ்ரீ அரவிந்தரின் "Savitri' இந்த இரண்டுமே, எல்லா அன்னை, ஸ்ரீ அரவிந்தர் அன்பர்கள் வீட்டில் இருக்கவேண்டிய புத்தகங்கள்.

****
 

ஸ்ரீ அரவிந்த சுடர்

சத்தியம் தெரிந்தால் கண்ணை மூடிக்கொண்டு அதை நாடலாம். வழிவகை தெரிந்தால், சந்தர்ப்பங்களை மாற்றிப் பலன் பெற முயலலாம். சாரம் தெரிந்தால் அதை முழுவதும் ஆளமுடியும்.

ஒரு பொருளைப் பயன்படுத்தலாம், செய்யலாம், திருவுரு மாற்றலாம்.


 


 


 



book | by Dr. Radut