Skip to Content

11. B.P.,Sugar சர்க்கரையின் அளவு

B.P., Sugar சர்க்கரையின் அளவு

அன்று எந்த வியாதி வந்தால் வாழ்வு முடியுமோ, அந்த வியாதிக்கு இன்று மருந்து வந்துள்ளது. ஆப்பரேஷன் வந்திருக்கிறது. பெரிய ஆப்பரேஷன், சிறியதாக மாறியுள்ளது. எவ்வளவு வசதி வந்தாலும், அது ஏழைக்கு அன்று என்ற விதி என்றும் செல்லும். ஏழைக்கும் தர்ம வைத்தியம் பல சமயம் கிடைக்கும். மருத்துவமிருந்தாலும், பணவசதியிருந்தாலும் வேறு பல காரணங்களால் உள்ளதை அனுபவிக்க முடியாத பொழுது மனிதன்,

"கர்மம் அனுபவிக்க வேண்டியதாயிற்றே' என்று முடிவு செய்கிறான்.

ஒரு பெரிய அதிகாரி தொழில் சம்பந்தமாக மையம் வந்தார். அவர் வேலையை அவர் செய்யும்பொழுது மனதில் அமைதி குடி கொண்டது. பலரும் தியானத்திலிருப்பதைக் கண்டார். அவருக்கு ஒரு பிரச்சினை. தாயாருக்குக் கண்ணில் ஆப்பரேஷன் தேதி குறித்தாயிற்று. B.P., Sugar நார்மலானால்தான் ஆப்பரேஷன் செய்ய முடியும். அவை நார்மலாக நடைமுறை வைத்தியம் முடித்தாயிற்று. பணம் பிரச்சினையில்லை. அவை நார்மலாக மறுக்கின்றன. தேதியை ஒத்திப் போட வேண்டும். ஒத்திப் போட்டால் என்ன நடக்கும்? தாயாருக்கு வயது 75. அவருக்கு வழி தெரியாத நேரம். இந்த மதர் கிட்டேயாவது சொல்லிப் பார்ப்போம் என அவருக்குத் தோன்றவில்லை. தாயாரைப் போய்ப் பார்த்தார். டாக்டர் B.P., Sugar நார்மல், ஆப்பரேஷன் செய்யலாம், என்றார்.

ஆப்பரேஷன் முடிந்தது. அவருக்குச் சந்தோஷம். மீண்டும் மையம், பக்தனாக வந்தார். "நான் திகைத்துப் போன நேரம் இங்கு வந்தேன். என் பிரச்சினை பிரார்த்திக்காமல் தீர்ந்தது'' என்றார். அனுபவிக்க வேண்டிய கர்மத்தினின்று அன்னை தரும் விடுதலை. அவர் அமைதி மூலம் வருகின்றது.

****
 



book | by Dr. Radut