Skip to Content

10.பாங்க் பணத்தை உற்பத்தி செய்கிறது

பாங்க் பணத்தை உற்பத்தி செய்கிறது

ஒருவர் இலட்சரூபாய்க்கு உற்பத்தி செய்து அப்பணத்தை பாங்கில் போட்டால் அது சமூகத்தில் 15 இலட்ச செலாவணியாகிறது என்பது பொருளாதாரக் கணக்கு.

நிலம் ஒரு விதையை 100 விதையாகப் பெருக்குவதுபோல் சமூகம் இலட்சரூபாயை 15 இலட்சமாக்குகிறது. உடல் உழைப்பால் நிலம் உற்பத்தி செய்கிறது. உணர்வின் நம்பிக்கையால் ஊர் பணத்தைப் பெருக்குகிறது. உடலையும், உணர்வையும் கடந்த நிலையில் மனம் பணத்தை ஸ்தாபனமாக்குகிறது (organisation). ஸ்தாபனம் இலட்சத்தை ஒரு கோடியாகவும், 10 கோடியாகவும் மாற்றவல்லது. முதல் 5 ஐந்தாண்டு திட்டங்களில் செலவான கோடிகளைத் தலைக்கு ஒரு நாளைக்கு 75 பைசா என ஒருவர் கணக்கிட்டார். இந்தச் சிறு துளி அந்தப் பெருவெள்ளமானது பணம் என்ற ஸ்தாபனத்தால். மனத்தைக் கடந்தது ஆன்மீகம். ஆன்மாவின் திறன் மனத்தைவிட அதிகம். ஆன்மா என்பது பண்பு. அன்னை ஆன்மாவைக் கடந்தவர்

*சமூகம் உற்பத்தியைப் பெருக்க உதவும்.

*சமூகத்தில் பாங்க் பணத்தைப் பலமடங்கு பெருக்கும்.

*மனம் என்பது ஸ்தாபனம். பணத்தை மனத்தூய்மை பாங்கை விட அதிகமாகப் பெருக்கும்.

*ஆன்மா மனத்தைக் கடந்தது. ஆன்மா வாழ்வில் பண்பாக வெளிப்படுகிறது.

*எளிய மனிதன் உழைப்பால் உற்பத்தியை அதிகபட்சமாக்கிய பின், மனத்தால் பணம் என்ற ஸ்தாபனத்தை பாங்க், சர்க்கார், தொழில் இன்ஷுரன்ஸ் மூலம் பயன்படுத்தினால், அவன் ஆன்மா பண்பாக - நாணயம், நல்லெண்ணம் போன்றவை - வாழ்வில் வெளிப்படுமானால் முதல் நிலையில் ஆயிரம், பல ஆயிரமாகவும், அடுத்த நிலையில் இலட்சமாகவும், அவன் நேர்மையான உழைப்புக்கு பலனாக இலட்சம் கோடியாகவும் பெருகுகிறது என்பது உலகம் இதுவரை அனுபவத்தால் கண்ட உண்மை. அன்னை அதையும் கடந்தவர். அவரை அறிவது அதிர்ஷ்டம், பின்பற்றுவது அருள், அவருள் நாம் கரைவது பேரருள்.

****



book | by Dr. Radut