Skip to Content

09.லைப் டிவைன் -கருத்து

லைப் டிவைன் -கருத்து”

P.7. Objective analysis or subjective synthesis

       ஜடமும் ஆன்மாவும் ஒன்றே என்று இரண்டாம் அத்தியாயம் கூறுகிறது. ஆன்மா என்ற உடலுக்கு ஜடம் ஆடை என்று உருவகப்படுத்துகிறது. பகுத்தறிவுவாதி ஆன்மா இல்லை என்றால் சன்னியாசி வாழ்வு தேவையில்லை என்கிறார். இவை இரண்டையும் இணைத்து, இரண்டும் ஒன்றே என்பது ஸ்ரீ அரவிந்தம். அவற்றை இணைப்பதை மேற்சொன்ன இருவழிகளாகச் செய்யலாம் என்கிறார் ஸ்ரீ அரவிந்தர்.

       மரம், உலோகம், மனிதன் ஆகியவற்றை ஆராய்ச்சி செய்ததில் அவை அனைத்தும் அணுக்களால் ஆனவை என்று விஞ்ஞானம் கூறுகிறது. அந்த அளவில் அவை அனைத்தும் ஒன்று. அதே போல் விஞ்ஞானம் ஆன்மாவை ஆராய்ச்சி செய்யவில்லை. செய்தால் ஆன்மா அணுவாலானது என்று முடிவு வராது. ஆன்மா சக்தி என்ற முடிவு வரும். அணுவெல்லாம் சக்தியானலானவை என்றும் விஞ்ஞானம் கூறுவதால் சக்தி என்ற அளவில் ஆன்மாவும், மும் ஒன்று தெரியும். அடுத்த கட்டம் உண்டு. ஆராய்ச்சி அதுவரை போவது நல்லது. அக்கட்டத்தில் சக்தி என்பது சத் எனப் புரியும். எனவே ஜடமும், ஆன்மாவும் சத் என்ற அளவில் ஒன்று என முடியும். இது புறத்திலுள்ள விஞ்ஞான, தத்துவ ஆராய்ச்சி.

       அகத்தால் மனிதர்களை உணர முடியும். தியானம் கலைந்தவுடன் எதிரில் வருவது வேண்டிய, வேண்டாதவர் ஒன்றாகத் தெரிவார்கள். தியானம் முதிர்ந்தால் கல்லும், ஆன்மாவும் தியானத்தில் ஒன்று சேர்வதைக் காணலாம். இது அகத்திற்குள்ள ஆராய்ச்சி. அகமானாலும், புறமானாலும் ஆராய்ச்சியைப் பாதியில் நிறுத்தாவிட்டால் ஜடமும், ஆன்மாவும் ஒன்றே என விளங்கும்.

வாழ்வுக்குரிய உதாரணம்

      கடைக்குப் போவதை புற நிகழ்ச்சியாகவும் - ஜடமாகவும் தியானம் செய்வதை அகவுணர்வுக்குரிய ஆராய்ச்சியாகவும் கருதலாம். ஒன்று எளிமையான செயல். தியானம் உன்னதமானது.

       சமர்ப்பணத்தால் இரண்டையும் இணைக்க முயல்வோம். காலையில் கடைக்குப் போவதின் 100 பாகங்களை சமர்ப்பணம் செய்வோம். போய் வந்த பின் தியானம் ஆட்கொள்வது தெரியும். மாலையில் தியானத்தை மேற்கொள்வோம். காம்பவுண்டில் 2" இடிந்து விட்டதை கட்ட வேண்டிய வேலையை மறுநாள் மேற்கொள்ள வேண்டியிருக்கும் பொழுது இன்று மாலை தியானத்தை முழுவதும் சமர்ப்பணம் செய்து மேற்கொண்டு முடித்து எழுந்து வந்தால் கடைக்குப் போய் வந்தபொழுதிருந்தது போலவே தியானம் அமைந்தது தெரியும். அத்துடன் வீட்டிற்கு வெளியில் வந்தால் கொத்தனார் காம்பவுண்டைக் கட்டிக் கொண்டிருப்பார். நாம் ஒன்றும் சொல்லவில்லையே என நினைத்தால், கொத்தனார், பக்கத்தில் வேலைக்கு வந்தேன். இடிந்து போனதை முடிக்க வேண்டும் என்று தோன்றியது. செய்கிறேன் என்பார். ஜடமும், ஆன்மாவும் ஒன்றே என்பதை வாழ்வு தினமும் காண்பிக்கிறது.

****

ஸ்ரீ அரவிந்த சுடர்

நம்பிக்கை உற்பத்தி செய்வதை திறமை உருவாக்குகிறது.

 

 

 

 

 

 

 



book | by Dr. Radut