Skip to Content

15.Life Response

Life Response

        “நான் Pride and Prejudiceயை மீண்டும் ஒருமுறை Life responseகோணத்தில் படிக்க ஆரம்பித்தேன். இம்முறை என் முயற்சியை சமர்ப்பணம் செய்தேன். காலையில் முதற்பாகம் Videoயை T.V.யில் போட்டுப் பார்த்தேன். பல இடங்களில் நிறுத்தி குறிப்புகள் எடுத்தேன். அவற்றுள் Life response வந்த இடங்களைக் குறித்துக் கொண்டேன். மறுநாள் என் வகுப்புக்குப் போனபொழுது எனக்கு higher ratingஅதிகபட்ச பாராட்டு கிடைத்தது.* வகுப்பு பெரியது. பெரிய வகுப்பில் பெயர் எடுப்பது கஷ்டம். மேலும் நான் cleaningயை அதிக சிரத்தையுடன் எடுத்து குளிக்குமிடத்தில் இதுவரை சுத்தம் செய்யாத இடங்களைச் சுத்தம் செய்தேன். அத்துடன் தபால் பார்த்தேன். தபாலில் பெரும் தொகை வந்திருந்தது. நெடுநாளாக வரவேண்டிய பணம் இது.

       தபாலில் பாண்டியிலிருந்து Sri Aravindam பெற்றேன். எந்த செயலுக்கு எது பலன் எனக் கூறுவது முடியாது. எது எப்படியானாலும் பலவிதமான என் முயற்சிகட்குப் பலவிதமான பலன்கள் கிடைத்தன.

       எனது நண்பருக்கும் Sri Aravindam இதே போல் Life responseஆகக் கிடைத்ததை அறிந்தேன். அவர் நாள் முழுவதும் அன்னையை அழைத்தார் என நான் அறிவேன். நான் Pride and Prejudice படத்தில் Life response யைப் படிப்பதை சமர்ப்பணம் செய்தேன்.

- சமர்ப்பணம் Life response தரவல்லது.

- Cleaning அதுவும் இதுவரை சுத்தம் செய்யப்படாத இடங்களை சுத்தம் செய்வதற்கும் இப்பலன் உண்டு.

- Life response ஆராய்ச்சி, நம் Lifeல் response கொண்டு வருகிறது.

(இவர் ஒரு பிரபல பேராசிரியர், சொந்தமாக தொழில் நடத்துகிறார். பல இடங்களில் கல்லூரி வகுப்புகளை நடத்துகிறார். அமெரிக்காவில் எந்த கூட்டத்திலும், வகுப்பிலும் (audience) மாணவர்களும், பிரதிநிதிகளும் பேச்சாளருக்கு மார்க் (rating) போடும் பழக்கம் உண்டு.)

 

 

 

 



book | by Dr. Radut