Skip to Content

07. பகவானுடைய இதர நூல்கள்

"அந்தராத்மாவின் குரல்"

"நான் நிர்வாணத்தை எய்தியபின் எனக்கு ambition பேராசை அழிந்துவிட்டது என நினைத்தேன். நாட்டுக்குச் செய்யும் சேவையில் எனக்குச் சொந்த இலாபமில்லை எனக் கருதினேன். கல்கத்தாவை அடைந்தபொழுது உள்ளிருந்து குரல் சில எண்ணங்கள் எழுவதைக் காட்டியபொழுது சொந்த ஆதாயம் மனதிலிருப்பது தெரிந்தது."- ஸ்ரீ அரவிந்தர்.

நம்முள் உள்ள குறைகள் நெடுநாள்வரை நம்முள் ஒளிந்திருக்கும் என பகவான் சுட்டிக் காட்டுகிறார்.

கோபத்தை அழிக்க சிலர் முற்படுவதுண்டு. கோபம் வந்துபோன சில நாட்களுக்குப் பின் கோபமில்லை என்பது தெரியும். கோபத்தின் தன்மையை உணராதவர் கோபமில்லை, இப்பொழுதில்லை என்பதை கோபமே தன்னை விட்டுப் போனதாகப் புரிந்துகொள்வார். அடுத்த முறை கோபம் வரும்பொழுதுதான் உண்மை நிலை தெரியும்.

நம் குணங்கள் வெளிப்படும்பொழுதுதான் அவையிருப்பது தெரியும்.

வெளிப்படாதபொழுது அவற்றின் தன்மை, விவரம், வேகம், வீச்சு தெரியாது.

சிலர் மீது சாமி வரும். அப்பொழுது அவர்கள் ஆவேசமாகப் பாடுவார்கள், ஆடுவார்கள். இவர்களில் சிலர் சாதுவான சுபாவமுள்ளவராகவுமிருப்பார்கள். ஆவேசம் வந்தபொழுது அவர்களை அடையாளம் தெரியாது.

வேறு சிலர் நான் உங்களுடன் உள்ளபொழுது நீங்கள் சொல்வது சரி எனப்படுகிறது. நண்பர்களுடனுள்ள பொழுது அவர்கள் சரி எனப் படுகிறது. யாருடன் இருந்தாலும் அவர்கள் சரி எனப்படுகிறது என்பர். அவர்களை unformed personalities எடுப்பார் கைப்பிள்ளை, யார் எதைச் சொன்னாலும் ஏற்றுக்கொள்வான் என்பார்கள். சொந்தமாகப் புரியும் திறமையற்றவர்கள் இவர்கள்.

அன்னையைத் தீவிரமாக வழிபட ஆரம்பித்தால் நம் குறைகளே இருக்கா. பார்ப்பவர்கள் நாம் அளவு கடந்து மாறிவிட்டதாக நினைப்பார்கள். அவர்கள் நினைப்பது மேலெழுந்தவாரியாகச் சரி. ஆனால் அது நிரந்தர மாற்றமில்லை. கோபம் வரும்பொழுது குணங்கள் வெளிப்படும். இல்லை என நினைத்தேன் எங்கேயிருந்து புறப்பட்டு ஆசை வருகிறது எனத் தோன்றும். நாம் என்பது இரு பிரிவாக -மேலும், கீழுமாக consciousness, substance அமைந்துள்ளது. நாம் அதிகபட்சம் அறிவது மேல் பாகமே. ஆழம் என்பது அதன் ஆழமே. அதைக் கடந்த நிலையைக் கண்ட ரிஷிகள் காயமே இது பொய் என்றனர். சுபாவம் ஆழ்ந்தது. லேசில் மாறாது. ஆனால் யோகத்தை மேற்கொள்பவர்கட்கு சுபாவம் மாறுவது அவசியம்.

....

ஸ்ரீ அரவிந்த சுடர்

கட்டுக்கடங்காதது கட்டுப்பட்டால் நிறைவேற்றப்படும். சிறிய ஆசைகளை நாடிச் செல்வதை விட்டொழித்தால் நிறைவு தேடிவரும். அடியிலுள்ள துவாரத்தை அடைத்தால் நம் நிலை உயருகிறது. பின் நிறைவுக்குச் செறிவும், வேகமும் வரும்.

சிறியதை விட்டால், பெரியது தேடி வந்து நிறைவு தரும்.



book | by Dr. Radut