Skip to Content

05. சாவித்ரி

P. 16. In her he met his own eternity

அவளுள் அவன் தன் பிரம்மத்தைக் கண்டான்

அன்றிலிருந்து இன்றுவரை மனிதன் இறைவனைத் தேடுகிறான். இறைவனைக் கடவுள் எனவும், சுதந்திரம் எனவும், சாகாவரமாகவும், ஜோதியாகவும் மனிதன் கருதுவதுபோல், காலத்தைக் கடந்த (eternity) நிலையாகவும் கருதுகிறான். பிரம்மம் காலத்தைக் கடந்ததால், அதையே பிரம்மமாகவும் மனிதன் நினைக்கிறான்.  

  • எந்த வேலை செய்தாலும், எதைத் தேடினாலும் மனிதன் இறைவனையே நாடுகிறான்.
     
  • தனக்குத் தேவையானவற்றிலும், தன்னைக் கவர்வதிலும் இறைவனைக் காண்பது மனிதனுக்கு முக்கியம்.
     
  • மனிதன் தான் விரும்பும் பெண்ணை தெய்வமாக மனதில் வரிக்கிறான்.
     
  • பிரம்மத்தைத் தேடும் மனிதன் பெண்ணில் பிரம்மத்தைக் காண்கிறான்.
     
  • ஆரம்ப நிலையில் பெண்ணைத் தேடும் ஆண் தான் பெறும் பிள்ளைகளால் தன் உடலை நித்தியமாக்குகிறான்.
     
  • முடிவான கட்டத்தில் மனிதன் ஈஸ்வரனாகி, சக்தியைத் தேடி பூரணம் பெறும்பொழுது ஆன்மா நித்தியம் பெறுகிறது.
     
  • மரபு பெண்ணை விலக்கி தவத்தை நாடியது.
     
  • பூரண யோகம் பெண்ணை ஏற்று விலங்குணர்வை விலக்கி அவளுள் ஆன்மீகப் பூரணம் பெறுகிறது.

      இந்தப் பக்கத்திலுள்ள இதர கருத்துகள் :

  • எதையும் தெய்வீகமாக்கும் ஆன்மீகம்.
     
  • இடையில் வெளியாக எழுந்தாலும் ஒளியின் இரகஸ்யம் ஒளிந்துள்ள இடங்களாகும்.
     
  • சொல்லை அமைதியாகத் தொகுத்தவள் அவள்.
     
  • அமைதியின் ஊற்றென அமைந்த பெருவெளிக் கண்டம்.
     
  • ஆதியின் அக்னி அமைதியாகப் பரவிய சமுத்திரம்.
     
  • தெய்வத்தின் வலிமையையும், மோனத்தின் பொறுமையையும் உடையவள்.
     
  • உள்ளத்து வெளி அவளுள் பரந்து நின்று தன்னைப் பிரதிபலிக்கிறது.
     
  • சூட்சும வெளியின் இதமான அரவணைப்பு உயர்ந்து திரண்டது.
     
  • அவளே அவனுடைய சொந்த இல்லமென உலவும் வகை.
     
  • அவளது இளமை அரியாசனத்தில் ஆனந்த கொலுவிருந்தது.
     
  • சுவர்க்கத்தின் அமைதியான கவசம் தெய்வீகக் குழந்தையைப் பாதுகாத்தது.
     
  • புவியின் கடும் சுவாசம் அப்பளிங்குக் கண்ணாடியைக் கரைப்படுத்தவில்லை.
     
  • மனித வாழ்வின் பாரத்தைச் சுமக்க அவள் முடிவு செய்தாள்.



book | by Dr. Radut