Skip to Content

04. சிறு குறிப்புகள்

" தண்ணீர் "  

Economics பொருளாதாரம் என்பது கிராக்கியான பண்டங்களைப் பற்றியது. ஒரு பொருள் அளவில்லாமல், மண்போல், கிடைத்தால் இந்தப் பாடத்தின் சட்டங்கள் அதற்கு சரி வராது. கண்ணாடியானாலும், தான்யமானாலும் ஓர் அளவோடு கிடைக்கும் பொருளுக்கே இச்சட்டங்கள் பொருந்தும். Economics is a science of scarcity என்பது வாக்கு. ஸ்ரீ அரவிந்தம் இதன் உண்மையை முழுவதும் ஏற்றுக் கொண்டாலும், தன்னை அவ்வுண்மைக்குக் கட்டுப்படுத்திக் கொள்வதில்லை. ஸ்ரீ அரவிந்தத்தின் அடிப்படை, மனிதன் தன்னை அகந்தை மையத்திலிருந்து மாற்றிக் கொண்டால்,

அப்படிப்பட்ட மனிதனுக்கு எந்தப் பொருளும் அபரிமிதம்

என்பது கொள்கை. மனிதன் மாறலாம், நிலைமை எப்படி மாறும் என்பது கேள்வி. மாறும் வகையை ஒன்றாகவோ, பலவாகவோ கூறலாம். முதன்மையானதை மட்டும் விளக்கமாகக் கருதுவோம்.

மனிதன் மாறியவுடன் பொருள் அபரிமிதமாகும்படி நிலைமை மாறும்.

அன்னை நேரடியாகச் சொல்லிய எதையும் பொருட்படுத்திப் பழக்கமில்லாத அன்பர் மில்லுக்குக் கோதுமை கோட்டா (quota) மூலமாகக் கிடைத்துக் கொண்டிருந்தது. கோட்டாவை ரத்து செய்யும்படி சர்க்கார் உத்தரவு. கோதுமை பஞ்சம் என்பதால் சர்க்கார் நடவடிக்கையை அப்படி எடுத்தது. அன்னையின் ஆசீர்வாதம் தேடிப் போனார். எதையும் அதுவரை இவர் நடைமுறைப்படுத்துவதில்லை என்பதால், அன்னைக்குப் பதில் கூற இஷ்டமில்லை. வற்புறுத்தி கேட்டார். ‘முடிந்தவரை பார்க்கிறேன்' என்றார் அன்னை. கோட்டாவை ரத்து செய்யும் உத்தரவு ரத்தாயிற்று. அடுத்தாற்போல் கோட்டாவை அதிகப்படுத்தினர். முடிவாக கோட்டா கொடுக்கும் சட்டத்தை ரத்து செய்தனர். கோதுமை உபரியாகி ஏற்றுமதியாயிற்று. மனிதன் மனம் மாறினால் பொருள் அபரிமிதமாகும். அனந்தம் (infinite) எனும்படி அபரிமிதமாகும் என்பது அனுபவம்.

உலகத்திற்கே தண்ணீர்ப் பஞ்சம் வருகிறது. இனி landlord என்றது போய் waterlord வரும் என்று பேசுகின்றனர். இது அபரிமிதமாகுமா? உலகத்திலுள்ள நீரில் 1% தான் பயன்படும் நீராக இருக்கிறது. மீதி பனிக்கட்டியாகவும் உப்பு நீராகவும் உள்ளது. இத்தண்ணீர் ஏரி, குளம், நதி ஆகியவற்றில் உள்ளது. அதாவது மேற்சொன்ன 1% இல் 2% ஆகும். மற்ற 98% பூமிக்கடியிலுள்ளது என பிரிட்டானிக்கா கலைக் களஞ்சியம் கூறுகிறது.

  • நாம் பயன்படுத்துவது 2%.
     
  • நம் கண்ணுக்குத் தெரியாதது 98%.

பூமிக்கடியிலுள்ள நீர் சுமார் 50 மடங்கு என்றால் நம் தேவையைப்போல் பல மடங்கு நீருள்ளது எனப் பொருள். மனிதத்திறமை, கனிப்பொருள்கள், பணம், தான்யம், ஆகிய அனைத்தும் இன்றுள்ளதுபோல் 10 மடங்கு, 50 மடங்கு பெருகும் நிலையுள்ளது என்பது ஆராய்ச்சியாளர் கூறுவது.

  • மனம் மாறினால் நிலைமை மாறும் என்பது அடுத்த கட்டம்.
     
  • மனிதனுக்குரியது அனந்தம், அபரிமிதம். அவனே ஏற்படுத்தியது "அளவு"...

 



book | by Dr. Radut