Skip to Content

15. குணமான கேன்சர்

வெளிநாட்டு அன்பர் தம் மைத்துனருக்கு கான்சர் வந்துள்ளதாகவும், தாம் பிரார்த்தனை செய்யப் பிரியப்படுவதாகவும் மைத்துனர் காணிக்கை கொடுத்துள்ளார், ஆனால் இதெல்லாம் அவர் நம்ப மாட்டார் என்று எழுதியிருந்தார். நம்பிக்கையில்லாதவருக்காகப் பிரார்த்தனை செய்தால் அவருக்குக் குணமாகும், பிரார்த்தனை செய்தவருக்கு நோய் வரும். மைத்துனரே பிரார்த்தனை செய்து குணமானார்.

சில ஆண்டுகட்குப் பின் இந்த அன்பருடைய தாயாருக்கு வயிற்றில் கட்டி இருப்பதாகவும், அது கான்சராக இருக்கலாம் எனச் செய்தி வந்தது. Testக்குப் போகும் முன் தாயார் ‘இது கான்சராக இருக்கக் கூடாது' என்று பிரார்த்தனை செய்யச் சம்மதிக்கவில்லை. Test கான்சர் என வந்தது. மகன் எடுத்துக் கூறியதன் பேரில் கட்டி கரைய தாயார் அன்னைக்குப் பிரார்த்தனை செய்தார். கட்டி சுருங்கியது. டாக்டருக்கு ஆச்சரியம். தாயார் "கட்டி அன்னை சக்தியால் கரைந்தது என டாக்டர் கூறினால் தான் நம்புவேன்' என்று பிடிவாதம் பிடிக்க ஆரம்பித்தார். டாக்டர் கட்டி கரைந்தது எப்படி என எனக்குப் புரியவில்லை. எதுவானால் என்ன? கரைந்தது நல்லது என்றார். மகனும் தாயாரிடம் பலவகையாக எடுத்துச் சொன்னார். கட்டி சிறு அளவிலிருக்கிறது. அதுவும் கரைய வேண்டும். கரையாவிட்டாலும் தொந்தரவில்லாமலிருப்பதால் கரையவேண்டும் என்ற அவசியமில்லை.

 "எனக்குப் புரிவது அவசியம். கட்டி கரைந்தது உண்மை. என்னால் டாக்டரை மட்டுமே நம்ப முடியும். அன்னை சக்தி எனக்குப் புரியாது. பிடிக்காதது. புரியாமல் ஒரு விஷயத்தை என்னால் ஏற்க முடியாது' என்றார் தாயார். கட்டி மீண்டும் வளர்ந்தது. தாயார் இறந்துவிட்டார்.

குணமான கான்சரை, மனம் பிடிவாதமான கேள்விகளை எழுப்பி, மீண்டும் உயிர்ப்பித்தது.



book | by Dr. Radut