Skip to Content

13. பிரார்த்தனை பலிக்க வேண்டும்

தம்பி - கதையில் பணத்தைப் பற்றிய நிகழ்ச்சிகளுண்டா?

அண்ணன் - பொதுவாக பணத்தின் குணங்கள் பல. பணத்தால் வருபவை பல, பணத்தை நாடுபவர் குணங்கள் சில. பொதுவாக வெளிப்படாத குணங்களைப் பணம் வெளிப்படுத்தும். இக்கதையில் அவற்றில் சில விவரமாக வருகின்றன. முக்கிய கருத்து அது இல்லை. கதையில் வெளிப்படுபவை,

 • பணம் அனுபவம் தரும்.
 • நெடுநாள் பணம் பெற்றவர்க்கு நிதானம் உண்டு.
 • நயத்தக்க நாகரீகம் பல வழிகளில் வரும். நீண்ட நாள் செல்வம் ஒரு வழி.
 • பணம் தன்னை மட்டும் உயர்வாகக் கருதும்.
 • எல்லா வழிகளும் அடைபட்ட பின், பணம் வழியுண்டு பண்ணும்.
 • எட்டாத பணம் வெறுப்பையும், அது எட்டியவுடன் வெறுப்பு விருப்பாக மாறுவதும் மனித இயல்பு.
 • பணத்தையும் மீறி அழகு பெண்ணுள்ளத்தை நெகிழ வைக்கும்.
 • மேல்நாட்டு நாகரீக உள்ளம், பணத்தைக் கடந்து செயல்படும் திறனுள்ளது.
 • பணம் அவசியமானபொழுது அனைவரும் வெறுக்கும் குணத்தையும் மீறி மனம் பணத்தை நாடும், விரும்பி ஏற்கும்.
 • அடிப்படை சுபாவம் பணத்திற்கும் கட்டுப்படாது.
 • உயர்ந்த அன்பு பணத்தின் சட்டங்களை மீறிச் செயல்படும்.
 • உயர்ந்த பண்பால் ஈர்க்கப்படும் பணம், நல்ல வழியில் சம்பாதித்ததாக இருக்கும்.
 • தன்மானமுள்ளவருக்குப் பணமும் கண்ணுக்குத் தெரியாது.
 • கர்வமான தன்மானம் பொதுவாகப் பணத்திற்கு எதிரி, உயர்ந்த தன்மானத்திற்குப் பணம் பணியும்.
 • பணம் என்றால் பிணமும் வாய் திறக்கும் என்ற பழமொழி உண்மை. Character, self-respect, goodnessஉயர்ந்த சுபாவம்,தன்மானம், நல்லெண்ணம் இவற்றிற்கு விலக்கு. பண்பும் அக்கருத்திற்கு விலக்காக நடக்கும்.

உதாரணங்களை எடுத்துக் கூறினால் கதை அதிகமாக நீளும். இது போன்ற எழுத்தாளர்களுக்கு Life Knowledge வாழ்வின் ஞானம் உண்டு என்கிறார் அன்னை. உயர்ந்த அன்பு கர்வியிடம் மட்டும் காணப்படுகிறது. உயர்ந்த அன்பு செயல்படும்பொழுது கட்டுமீறிச் செயல்படும். பிரதிபலனாக எதையும் எதிர்பார்க்க அன்பால் முடியாது. அந்த அன்பு எழுந்த பின் மனம் எத்தனை நாளானாலும் தன்வயமிருக்காது. உயர்ந்த அன்பு எந்த நல்லதைப் பெற்றாலும், இவ்வுலகில் உயர்ந்த அன்பைப் பெறுவதில்லை. உயர்ந்த அன்பு வாழ்வில் வெளிப்படும்பொழுது பொதுவாக நிகழ்பவை -கீழே காணப்படுபவை -பல இக்கதையில் வருகின்றன.

எவர் கண்ணிலும் அது அன்பாகப் படாது. வெறுப்புக்கு ஆளாகும்.

அது பண்பாக மாறுமிடங்களில் வாழ்வு துரோகம் செய்யும்.

அன்புக்கு ஜெயிக்கும் வலிமையில்லை. பணத்திற்குண்டு.

அன்பும், பணமும் சேருமிடத்தில் பணம் தவறாது வெற்றியைப் பெற்றுத் தரும்.

அன்பின் பலனாக எவர் எதைப் பெற்றாலும், பலனை மட்டும் கருதுவர். அன்பு கண்ணுக்குத் தெரியாது.

அன்பு பொதுவாக, தவறாக வெளிப்படும். உயர்ந்த நேர்மையாக வெளிப்பட்டாலும் தவறாகவே பெறுபவர் கண்ணுக்குத் தெரியும்.

பணம் தரும் வலிமை தவிர அன்புக்கு இவ்வுலகில் பாதுகாப்பேயில்லை.

தம்பி - ஸ்ரீ அரவிந்தர் எந்த உண்மையைப் பற்றிப் பேசினாலும் அதற்கெதிரானதும் உண்மை என்கிறாரே, அதற்கு இக்கதையில் உதாரணம் உண்டா?

அண்ணன் - நேரடியான உதாரணமில்லை. அத்துடன் கதைச் சுருக்கத்தில் அதை நான் சேர்க்கவில்லை.

‘ஒரே சட்டம் எதிரான சந்தர்ப்பங்களில் எதிரான பலன் தரும்' என்று ஒரு சட்டம் நீ அறிந்ததாகும்.

குழந்தை அதிக முன்னேற்றமடைய வேண்டும் என்று ஏராளமாகச் சிறு வயதில் பாடம் கற்பித்தால், தொடர்ந்து முதல் ராங்க் வருவதும் உண்டு. பாடத்தில் கசப்பு ஏற்பட்டுப் படிப்பை விட்டுவிடுவதும் உண்டு. அந்தச் சட்டத்திற்கு இங்கு ஓர் உதாரணம் வருகிறது.

சமூகத்தில் மந்திரியாக இருப்பவர், செல்வர், செல்வாக்குள்ளவர் சாதாரண மக்கள் வாழ்வில் தலையிட்டால், சாதாரண மக்கள் அவர்களை மீறமாட்டார்கள், மீற முடியாது. மீறினால் மீறுபவர்கள் தரைமட்டமாக்கப்படுவார்கள். அது எதிராகவும் நடக்கும்.

கர்வியின் சித்தப்பா Sir பட்டம் பெற்றவர். அவர்கள் நாட்டில் மாமன் பெண்ணை மணப்பதில்லை. சித்தப்பா பெண்ணை மணப்பதுண்டு, சித்தப்பா பெருஞ்செல்வர். காலமாகிவிட்டார். சின்னம்மா, கர்வி தம் பெண்ணை மணக்க விரும்பினார். அந்தஸ்தில் தாழ்ந்த பெண்ணை மணக்க இருப்பதாகக் கேள்விப்பட்டார். அதிகக் கோபம் வந்தது. இரண்டாம் பெண் வீட்டிற்கு வந்து அதிகாரமாக, கோபமாக ‘நீ என் தமக்கை மகனை மணக்கக் கூடாது' என்று சொல்கிறார். இந்த அந்தஸ்திலுள்ளவரை எளியவர் மீற முடியாது. ஆனால் இரண்டாம் பெண் தன்மானம் அதிகமானவள். நிலைமை வேறு. கர்வி இரண்டாம் பெண்ணை மணக்கும்படிக் கேட்டான். அவள் மறுத்துவிட்டாள். அதன் பிறகு கர்வியின் உண்மையைப் பெண் அறிகிறாள். அத்துடன் ஓடிப்போன பெண்ணை கர்வி காப்பாற்றுகிறான். எனினும் பெண் மனத்தை அவன் அறியவில்லை. தன் மீதுள்ள வெறுப்பு பெண்ணுக்கு மாறுமா என அவன் காத்திருக்கிறான்.

இரண்டாம் பெண் கர்வியினுடைய சின்னம்மாவின் வேண்டுகோளை மறுத்தவுடன், சின்னம்மா கர்வியிடம் போய் பெண் தலைக்கனமானவள், அவளை மணக்காதே எனக் கூறி நடந்த உரையாடலை விவரமாகக் கூறுகிறார். கர்விக்கு இதன் மூலம் பெண்ணின் மனம் தெரிய வருகிறது. தன்னை வெறுக்கவில்லை என அறிந்து நேரே பெண்ணை வந்து பார்த்து தன் திருமணத்தை முடித்துக் கொள்கிறான்.

சின்னம்மா தடை செய்ய எடுத்த முயற்சி தடையை விலக்கி திருமணத்தைப் பூர்த்தி செய்கிறது. நேர் எதிர்மாறான பலனைத் தருகிறது.

நெடுநாளாக ரிக்ஷாவில் போனவர், கார் வாங்கினார். ரிக்ஷாக்காரன் அவரிடம், கார் வேண்டாங்க ஐயா. பெட்ரோல் செலவாகும். எப்பொழுது கூப்பிட்டாலும் நான் வருகிறேன். காரை விற்றுவிடுங்கள் என்றான். இதைக் கேட்பவனுக்கு என்ன புத்தியிருக்கும்? நாம் இவனை மடையன் என்பதா? என்னென்பது? பெரிய உத்தியோகஸ்தர். அவர் மகன் IAS பாஸ் செய்து வேலையிலிருக்கிறான். தாம் முன்னேறுவதைவிட அடுத்தவர் முன்னேற்றத்தைத் தடை செய்வதில் அக்கறை கொண்ட உள்ளமுடையவர். அன்னை மையம் வந்தார். எதற்கும் உதவாத உறவினர் பையனை அங்கு கண்டார். அவனுக்குப் பிரார்த்தனையால் IAS பாஸாயிற்று. இவர் மனம் பொறுக்கவில்லை, எப்படியாவது இவன் IASஐ விட வேண்டுமென நினைத்தார். "IASஇல் என்ன இருக்கிறது. அதில் சேராதே" என அறிவுரை கூறினார். தம் அந்தஸ்தைப் பயன்படுத்தி எதிரியைக் கெடுக்கவிரும்பினார். அவர் பேசிய இடம் அன்னை மையம். அன்னைச் சூழல் உள்ள இடம்.

இவருடைய மகன் IASயை விட்டு வெளியேறினான்.

இவர் மனம் விரும்பியதற்கு எதிரான பலனை அன்னைச் சூழல் தரவல்லது என்று இவர் அறியார். பிறர் வாழ்வு மலர்வதில் பெருமிதம் கொள்பவரே அன்பராவார். இவர் அன்னை அன்பராக முடியாது. இவர் உறவினர் பையனை ‘வாழ்த்திய' பொழுது அவனுக்கு செலக்ஷன் ஆகியிருந்தாலும் போஸ்ட்டிங் வர அதிகத் தாமதமானால் போஸ்டிங் வாராமல் போய்விடுமோ என அவன் பயந்து கொண்டிருந்த நேரத்தில் இந்தச் செய்தியை பையன் மையத்தில் வந்து சொன்னான். சொல்லிய 3ஆம் நாள் பையனுக்குப் போஸ்ட்டிங் வந்தது. அவருடைய மனம் கீழ்த்தரமானது. எவரும் வெட்கப்படும் எண்ணங்களை விருப்பமாகப் பேசுகிறார். அன்னையிடம் பலன் என்ன? தாமதமான போஸ்ட்டிங் வந்துவிட்டது.

தம்பி - மேலும் விளக்கினால் நல்லது.

அண்ணன் - நான் கூறப்போகும் சட்டம் வினோதமாகத் தோன்றும். அன்பர்கட்கு இது அடிப்படையான சட்டம்.

வாழ்வில் தவறு என்பது இல்லை. அன்னைச் சூழல் தவறு என நாம் கருதுவதும் திருவுருமாறும். நல்லது மட்டுமே நடக்கும். கேவலமான கயவர்களாலும் அன்பர்கட்கு நல்லது மட்டுமே செய்யமுடியும்.

தம்பி - விரிவான விளக்கம் தேவை.

அண்ணன்-அருள் பையனுடைய தாமதமாகும் ஆர்டரை விரைவுபடுத்த விரும்புகிறது. அவன் மனதில் ஆழ்ந்திருப்பவர்கள் அவன் உறவினர்கள். (அவன் உறவில் நல்லெண்ணமுள்ளவரிருந்தால் அவர்கள் மூலம் அருள் செயல்பட முடியும். ஒரு வேளை எவரும் இல்லை போலிருக்கிறது.) இருப்பவர் மூலம்தான் அருள் செயல்பட முடியும். அவர்கள் இப்படித்தான் மட்டமாக நினைப்பார்கள். எனவே அருள் மட்டமான எண்ணத்தின் மூலம் செயல்பட அவர்களை மையத்தில் சந்திக்க வைக்கிறது. மட்டமான எண்ணம் வெளிப்பட்டவுடன் மையம் அதை நல்லதாக மாற்றுகிறது. அது பலிக்கிறது.

தம்பி - விநோதமாகவேயிருக்கிறது. உறவில் நல்லவர்களே இல்லையா?

அண்ணன் - விபரம் தெரியவில்லை. பொதுவாகக் கீழ்க்கண்டவை நடப்பது வழக்கம்.

 • பையன் மனதில் நல்லவர்களிருக்க மாட்டார்கள். தவறானவர்களே இருப்பார்கள். அவர்களை ஜெயிக்க வேண்டும் என பையன் நினைத்தால் அவர்கள் மட்டுமேயிருப்பார்கள்.
 • நல்லவர்களிருந்தால், பையன் தானே அவர்களை விட்டு விலகியிருப்பான்.
 • நல்லவர்கள் மூலம் நல்லது நடக்கும்பொழுது, அவர்களை விட்டு விலகுவது எல்லோரும் செய்வது. இவன் விஷயம் தெரியவில்லை.

தம்பி - ஏன் நல்லவர்களை விட்டு விலகுகிறான்?

அண்ணன் - இந்த கேஸை விபரம் தெரியாமல் பேச முடியாது. பொதுவாக உதவி செய்யப்போனால், காரியம் முடிவதற்குள் செய்தவரை அவமானப்படுத்த முயல்வதால், விலகுவார்கள். தான் கெட்டுப் போக வேண்டும் என முயல்பவர்களை வலுவாக நம்புவார்கள். அதுதான் வழக்கம். விபரம் தெரிந்தால் தெளிவாகப் பேசலாம்.

தம்பி - இரண்டு விஷயம் ஆச்சரியமாக இருக்கிறது.

 • அவர்(திட்டியவர்) பையன் IASஐ விட்டு வெளியேறியது.
 • போஸ்டிங் வந்தது.

அருள் எப்பொழுதும் இப்படித்தான் செயல்படுகிறதா?

அண்ணன் - இப்படி மட்டுமே என அடித்துப் பேசுகிறார் அன்னை. நம்மிடம் விஷயம் வரும்பொழுது ஒரு பகுதிதான் வருவதால், நாம் விளக்க முடிவதில்லை. நம் சொந்த விஷயங்களை மட்டுமே விபரமாக அறியலாம். அதிலும் எதிரியின் பங்கு தெரியாது.

தம்பி - அன்பர்கள் அன்பரல்லாத மற்றவருடன் பழகினால் உடல் சோர்ந்துவிடுகிறது. உடனே தவறு நடக்கிறது. ஆபத்தும் வருகிறது. இது விஷயத்தில் அன்பர்கள் என்ன செய்வது என அறியாமல் தவிக்கிறார்கள்.

அண்ணன் - நாமெல்லாம் ஆரம்பத்தில் அனுபவித்த சிரமம் தானே இது.

தம்பி -நாம் உறவினர்களும், நண்பர்களும் அன்பர் அல்லாதவரானால் விட்டுவிட்டோம். எல்லோராலும் அதைச் செய்ய முடிவதில்லை.

அண்ணன் - அப்படிச் செய்தால் சரி எனப்படும். நாம் செய்தது பெரியகாரியமில்லை. எல்லோரும் அவரவர்கள் சொந்த விஷயத்தில் செய்வதை நாம் அன்னை விஷயத்தில் செய்கிறோம்.

தம்பி - எப்படி?

அண்ணன் - அக்கா மகன் மெடிகல் கல்லூரியில் சேரக்கூடாது என தம்பி கங்கணம் கட்டிக் கொண்டிருந்தால் அந்த அட்மிஷன் விஷயமாக அக்கா தம்பியிடம் எவ்வளவு பேசுவாள்?

தம்பி - ஒரே வீட்டிலிருந்தாலும், தம்பி காதில் படாதபடி விஷயத்தை முடித்துவிடுவாள்.

அண்ணன்-நண்பர்களும், உறவினர்களும் அன்னையை ஏற்கவில்லை. அதனால் நாம் பாதிக்கப்படுகிறோம் என்று நாம் கூறுகிறோம். உண்மை வேறு. அவர்கள் நாம் முன்னுக்கு வருவதை அன்னை பேரால் எதிர்க்கிறார்கள். உன் அனுபவத்தை யோசித்துப் பார்.

தம்பி - ஆமாம், ஆமாம், அப்படித் தெரிந்தால் யார் எதை எவரிடம் சொல்ல முடியும்?

அண்ணன் - வாழ்க்கையில் நாம் நம் பொருள், அந்தஸ்து, காரியம், நல்லது என்பவற்றைக் காப்பாற்றுவதுபோல் அன்னை மீதுள்ள பக்தியைக் காப்பாற்றினால் போதும்.

தம்பி - இது எளிமையாக இருக்கிறதே. யோசனை செய்தால் விஷயம் இங்குதானிருக்கிறது. பேருக்கு ஆசிரமம், ஸ்ரீ அரவிந்தர், அன்னை.

அண்ணன் - நாம் அன்னையை முக்கியமாகக் கருதவில்லை என்பதே முக்கியம். மெடிகல் காலேஜ் அட்மிஷன் முக்கியமாக இருப்பதைப்போல் நமக்கு அன்னை முக்கியமில்லை. அப்படி முக்கியமாகக் கருதினால், நமக்கு நம்மைக் காப்பாற்றிக் கொள்ளத் தெரியும்.

தம்பி - நெடுநாளைய சந்தேகம் எளிமையாகத் தீர்ந்துவிட்டது. பெரிய பாரம் இறங்குவதுபோல் தோன்றுகிறது. நீங்கள் சொல்லிய கதையில் முடிவு நல்லதாக இருந்தாலும், பெண் ஓடிப் போனாள் என்பது நன்றாக இல்லையே, அதற்கு ஏதாவது காரணம் உண்டா?

அண்ணன் - காரணமுண்டு. கதையை ஊன்றிப் படித்த பின்னரே விளக்கம் விளங்கும், நான் சுருக்கமாகத் தானே சொன்னேன். சொல்லிப் பார்க்கிறேன். எலிசபெத்திற்கு விக்காம் டார்சி தங்கையோடு ஓட முயன்றது தெரியும். லிடியா பிரைட்டனுக்குப் போகும்பொழுது தாயாரிடமும், தகப்பனாரிடமும் எச்சரிக்கிறாள். ஆனால் தனக்குத் தெரிந்த இரகஸ்யத்தை மறைத்து எச்சரிக்கிறாள். பெற்றோரிடம்  விவரமான பதில் சொல்லியிருந்தால் - விக்காமின் பழைய விஷயத்தைக் கூறியிருந்தால் - லிடியாவை அனுப்பியிருக்கமாட்டார்கள். அசம்பாவிதம் நடந்திருக்காது.

தம்பி - பின் ஏன் அது நடந்தது?

அண்ணன் - அதுவே கதையின் உயர்வைக் குறிக்கிறது.

தம்பி - எப்படி?

அண்ணன் - முக்கியமானவை மூன்று விஷயங்கள். உனக்குப் புரியும்படிச் சொல்லமுடியுமா எனத் தெரியவில்லை.

1. Strategy யுக்தி சரியில்லாவிட்டால் பலிக்காது.

2. அழகனைக் குறை கூறப் பெண் மனம் சம்மதிக்காது.

3. லிடியாதான் அதிர்ஷ்டம் கொண்டு வரமுடியும். லிடியாவால் இப்படித்தான் அதிர்ஷ்டத்தைக் கொண்டு வரமுடியும்.

‘நான் எச்சரித்தேன் நீங்கள் ஏற்கவில்லை' என எலிசபெத் சொன்னால், அது சரியாகாது. எச்சரிக்கை பலன் தர மனம் தவறானவனை நாடக் கூடாது.

தவறானவன் மீது மனம் இதமாக இருந்தால், அவனால் அவளுக்குத் தீங்கு செய்ய முடியும். விக்காம் மோசமானவன் -சூதாடி, பொய் சொன்னான், துரோகம் செய்தான் - என்று தெரிந்த பின்னும் எலிசபெத் மனம் அவனைக் கண்டிக்கவில்லை. அவனால் தவறு மட்டும்தான் செய்யமுடியும்.

டார்சிக்கும், லிடியாவுக்கும், எலிசபெத்திற்கும், எவர்க்கும் விக்காமால் தவறு மட்டும்தான் செய்ய முடியும். தவறு செய்பவனை மனம் அன்பாக ஏற்கிறது எனில் அவன் மீண்டும் தவறு செய்வான். லிடியா திருமணத்திற்குப் பின்னும் எலிசபெத்தால் விக்காமை மனதால் கண்டிக்க முடியவில்லை. அழகான பெண்ணை ஆண் மனம் கண்டிக்காது. அழகனை மனம் போற்றும். தவறு தெரியாது, தெரியவே தெரியாது.

தம்பி - அப்படியானால் தவறு உற்பத்தியானது லிடியாவால் இல்லை, எலிசபெத்தால்தான் என்றாகுமா?

அண்ணன் - அதுவே பெரிய கருத்து.

தம்பி - அகந்தையை அழிக்க அகந்தை மூலமே நாம் முயல்வதால் அது தடையாகிறது என்று பகவான் கூறுவதன் அர்த்தம் என்ன?

அண்ணன் - கோபத்தைக் கட்டுப்படுத்த வேண்டுமானால் அதைவிட உயர்ந்த கருவியைப் பயன்படுத்த வேண்டும். கோபம் என்பது vital உணர்ச்சி. உணர்ச்சியை அதற்கடுத்த உயர்ந்த கருவியான மனத்தால், மனத்தின் அறிவால் கட்டுப்படுத்துகிறோம். அதுபோல் அகந்தையை அழிக்க அடுத்த உயர்ந்ததான ஆத்மாவைப் பயன்படுத்த வேண்டும். உண்மையாக முயல்பவர் "நான் என் அகந்தையைச் சரணம் செய்கிறேன்". என்கிறார். அதுவும் நல்லதே. பலன் மிகக் குறைவாக இருக்கும். நாம் ஓர் சூத்திரத்தை - என் அகந்தை அழியவேண்டும் - பயன்படுத்துகிறோம். சூத்திரம் என்பது சொல். சொல் சிந்தனைக்குரியது. சிந்தனை அகந்தையின் கருவி. அகந்தைக்கடுத்த ஆன்மாவின் கருவி மௌனம்.

ஆன்மாவால் அகந்தையை அழிக்க மௌனம் கருவியாகும். சிந்தனை -சூத்திரம், சொல் அகந்தையின் கருவியாவதால், அகந்தையால் அகந்தையை அழிக்க முடியாது. முடியாது என்பதன்று. அங்கும் sincerity உண்மை பூரணமாக இருந்தால் சூத்திரத்தைச் சொல்லும்பொழுது மௌனம் தானே எழும். மௌனம் ஆத்மாவுக்குக் கொண்டு செல்லும். ஆத்மாவுக்கு அகந்தை கட்டுப்படும்.

சரியான முறை என்பது சூத்திரத்தைச் சொல்லாமல், ஆழ்ந்து தியானம் செய்து மனத்தைக் கடந்து ஆத்மாவுக்குப் போய், ஆன்ம விழிப்புப் பெற்று, அகந்தை கரைய நினைத்தால், அகந்தை கரைய ஆரம்பிக்கும், அது பலன் தரும்.

தம்பி - ஒரு விஷயம் எனக்குச் சமீபத்தில் தெளிவாயிற்று. அதற்கு நீங்கள் இக்கதையில் சொன்ன விளக்கம் உதவியாயிற்று. ஆணோ, பெண்ணோ அழகைக் கண்டுவிட்டால் அழகு இருந்தாலும் இல்லாவிட்டாலும், அழகு என நினைத்துவிட்டால் அவர்கள் மீது குறை தெரியாது, தெரிவதில்லை. அவர்களால் ஆபத்து வந்தாலும், வேறு காரணம் சொல்வார்களே தவிர, இது கண்ணுக்குத் தெரியாது. தெரியவே தெரியாது.

அண்ணன் - அழகும் அப்படித்தான். பணமும் அப்படியே. பதவியும் அது போலவே. மனம் அழகு, பணம், பதவியை இதமாக நினைப்பதைப்போல் நியாயத்தைக் கருதுவதில்லை, அன்னைக்கு மனம் அந்த இடத்தைக் கொடுப்பதில்லை. அன்னைக்கு மனத்தில் அந்த இடம் கொடுப்பவனே பக்தன். அதுபோன்ற பக்தரைக் காண்பது அரிது.  நமக்குத் தெரிந்த யாராவது ஒருவர் தேறுவாரா? ஏன், நாம் தேறுவோமா? நாம் பிறரை நினைக்க வேண்டாம். நாம் இவ்விஷயத்தில் தேறினால், நாம் அன்பர்கள் எனக் கூறலாம்.

தம்பி - நாம் தேறிய இடத்திலெல்லாம் காரியம் கூடி வந்துள்ளது. நாமும், பிறர்போல நினைத்தபொழுது காரியம் கெட்டுப் போயிருக்கிறது. காரியம் கெட்டுப்போன பின்னும் நாம் அவர்களை மனதிலிருந்து எடுக்கவில்லையே. அதனால்தானே சூழல் சரியாக மாறவில்லை. விஷயம் நூற்றுக்கு நூறு சரியாக வரவேண்டுமானால், நம் மனம் நூற்றுக்கு நூறு அன்னை பக்கமேயிருக்க வேண்டும்.

அண்ணன் - விஷயம் நமக்குக் கெட்டுப் போகிறது எனில், நாம் வேறெந்தத் தவறும் செய்வதில்லை. உறவு, நட்பு, நியாயம், இதம், இங்கிதம், எப்படிச் சொல்வது நல்லாயில்லையே என நாம் தயங்கித் தயங்கி எதிரியை ஆதரித்ததால் மட்டுமே நமக்குக் கெட்டது, ஆபத்து வந்தது. சட்டம் தெளிவாக இருக்கிறது.

 • தவறு செய்பவர்களைத் தண்டிக்க வேண்டும், மனம் இதமாக அவர்களை நினைக்கக்கூடாது.
 • அன்னைக்குத் தவறு செய்பவர்களை நாம் மனதாலும் நினைக்கக் கூடாது. அவர்களைவிட்டுக் காத தூரம் போகவேண்டும்.
 • அவர்களால் நடப்பதை மறந்து, அவர்கள் சொல்வதை ஏற்பது அறிவீனம்.
 • இந்தத் தவறு மட்டும் செய்யவில்லை எனில் நமக்கும், மற்ற அன்பர்கட்கும், தொந்தரவு என்பதே இல்லை என்பதே நமது நெடுநாளைய அனுபவம்.

தம்பி - பிறருக்கு உதவவேண்டும் என்பதால் மட்டும் வரும் தீங்கல்லவா இது! எலிசபெத் விக்காம் விஷயத்தில் கனிவாக நடப்பது எனக்கு ஆச்சரியமாக இருந்தது. எவ்வளவு பெரிய ஆபத்தில் கொண்டு போய் விட்டுவிட்டது. இது புரிய இத்தனை நாளாயிற்று. இனி ஜாக்கிரதையாக இருக்கவேண்டும். அன்னையும் அருளும் நமக்கு அழியா இலக்கியம், அமரத்வம், குபேரச் சம்பத்து, பூலோகச் சுவர்க்கம் தருகின்றார்கள். நாம் நஷ்டம், கஷ்டம், விபத்து, ஆபத்து என்பதிலிருக்கிறோம்.

அண்ணன் - அழியா இலக்கியத்தை ஷேக்ஸ்பியர் எப்படி எழுதினார் என ((Centenary Vol. No. 12)) 33ஆம் பக்கத்திலிருந்து 43ஆம் பக்கம்வரை பகவான் எழுதியுள்ளார். ஷேக்ஸ்பியர் எழுத்து சகஸ்ரதளத்தின் கீழேயிருந்து உற்பத்தியாயிற்று. வேதம் சகஸ்ரதளத்திற்கு மேலிருந்து எழுதியது என்கிறார்.

தம்பி -நான் அதைப் படித்திருக்கிறேன். தெளிவாக இருக்கிறது. அதுபோல் மற்றவற்றிற்கு விளக்கம் எழுதவில்லையா?

அண்ணன் - பூலோகச் சுவர்க்கம், காயகல்பம், குபேரச் சம்பத்து, அழியா இலக்கியம் ஆகிய அனைத்திற்கும் சட்டம் ஒன்றே. இவற்றிற்கெல்லாம் விளக்கம் பொதுவாக பயன்படாது. யாராவது செய்தால், கண்ணால் பார்த்தால் புரியும்.

தம்பி - மற்றதெல்லாம் புரியாது, குபேரச் சம்பத்து புரியும்.

அண்ணன் - ‘பணம்' என்ற கட்டுரையிலும், ‘அதிர்ஷ்டம்' என்பதிலும், பூலோகச் சுவர்க்கத்திலும் இவ்விளக்கமிருக்கிறது.

தம்பி - விளக்கம் தேவையில்லை. உதாரணம் தேவை.

அண்ணன் - உதாரணம் இல்லை என்று கூறுமுடியாது. உதாரணம் ஏற்பட்டால் பொறாமை வருமே தவிர, பின்பற்ற முன்வரமாட்டார்கள்.

தம்பி - அனைவரும் அப்பலனையடைய என்ன செய்யலாம்?

அண்ணன் - அந்த எண்ணம் (பிறர் பலன் பெறவேண்டும் என்ற எண்ணம்) தவறு என உணர்ந்தால், அது பலிக்கும் வாய்ப்புண்டு.

தம்பி - இது எப்படித் தவறாகும்?

அண்ணன் - இது தவறான எண்ணமல்ல. நல்லெண்ணம்தான். நாம் அதை எப்படி ஏற்கிறோம் என்பது நல்லதா, கெட்டதா என்பதை நிர்ணயிக்கும். தம் பெருமை இதன் மூலம் வருவது தவறு. அதுதான் வழக்கமாக வரும். பலிக்கவில்லை என்றால் மனம் தவறாக இருக்கிறது எனப் பொருள். மனம் சரியாக இருந்தால் அது பலித்திருக்குமே?

- தொடரும்.

....

ஸ்ரீ அரவிந்த சுடர்

படபடப்பு சக்தியாவது, தீமை, நல்லதை உயர்ந்த நல்லதாக்குவது, பிரிவினை பேரானந்த இனிமையை மீண்டும் கண்ட ஒற்றுமையால் காண்பது ஆகியவை நம்வாழ்விலும், உணர்விலும் காணும் வரை வெறும் சொற்களாகவே இருக்கும். உள்ளிருந்து ஆன்மா எழுந்து, ஜடத்தை ஆட்சி செய்யும் வரை இதன் உண்மை புரியாது.

ஜடத்தை ஆன்மா ஆட்சி செய்தால் படபடப்பு சக்தியாகும். 

Comments

13. பிரார்த்தனை பலிக்க

13. பிரார்த்தனை பலிக்க வேண்டும்

1st set of bullet points -

point no.15 -

From பணம் என்றால் to நாளானாலும் தன்வயமிருக்காது.

In the above bullet point - line no.4 -

From உதாரணங்களை எடுத்து to இக்கதையில் வருகின்றன.

separate paragraph after the 15 bullet points. 

In the above bullet point - After line no.10 - extra space.

             do.                     -       do.    no.12 -     do.

              do.                     line no.12 -

From உயர்ந்த அன்பு to அன்பைப் பெறுவதில்லை. - bold letters.

2nd set of 8 bullet points - There is no bullets marked.

From எவர் கண்ணிலும் to படாது.

வெறுப்புக்கு ஆளாகும்.

From  அது பண்பாக to செய்யும்.

From அன்புக்கு to பணத்திற்குண்டு.

From அன்பும், to பெற்றுத் தரும்.

From அன்பின் to  தெரியாது.

From அன்பு to  தெரியும்.

From பணம் தரும் வமை  to பாதுகாப்பேயில்லை

last bullet point - line no.1 - வமை - வலிமை

After the bullet points -

para no.6 - line no.2 - மாமன்பெண்ணை -மாமன் பெண்ணை

     do.    9 - line no.6 -வேலையிருக்கிறான் - வேலையிலிருக்கிறான்

      do.    9 - line no.11 -   ஒஆநஐ - IASஐ

para no.14 - From வாழ்வில் தவறு to  மட்டுமே செய்யமுடியும். - bold letters.

para no.16 - line no.3 - உறவில்நல்லெண்ணமுள்ளவரிருந்தால் -

                                      உறவில் நல்லெண்ணமுள்ளவரிருந்தால்

para no.28, line no.1 - வீட்டிருந்தாலும் - வீட்டிலிருந்தாலும்

       do.  29 - After line no.3 - extra space.

       do.   35 - After line no.6 -       do.

        do.   35 - line no.7 -   சொல்லியிருந்தால் -விக்காமின் -

                                           சொல்லியிருந்தால் - விக்காமின்

         do.   35 - line no.8 -  கூறியிருந்தால் லிடியாவை -

                                           கூறியிருந்தால் - லிடியாவை

para no.39 -  point no.3 - From லிடியாவால் to வரமுடியும்.- 2nd line to 3rd point.

 From ‘நான் எச்சரித்தேன் to தெரியவே தெரியாது - Separate paragraph.

After point no.3, After line no.3 - extra space.

After point no.3, line no.5 - மோசமானவன் -சூதாடி -மோசமானவன் - சூதாடி

 After point no.3, After line no.8 - extra space.

para no.44, line no.8,  -என் - - space என்

    do.         - after line no.11 - extra space.

     do.    44, line no.13 -  சொல் அகந்தையின் - சொல் - அகந்தையின்

     do.     44, After line no.14 - extra space.

      do.    44 , line no.15 - sincerety - sincerity

para no.47, after line 3, extra space.

       do.        line no.4 -  From அன்னைக்கு to  கொடுப்பதில்லை - bold letters

       do.    47 - after line 6, extra space. 

para no. 48, line no.3 - மனதிருந்து - மனதிலிருந்து

     do.             do.    4 - from விஷயம் to  வேண்டும். - bold letters

para no.51, line no.4 -  மேருந்து - மேலிருந்து

     do.    55, line no.1 - ‘அதிர்ஷ்டம்'என்பதிலும், - ‘அதிர்ஷ்டம்' என்பதிலும்,

ஸ்ரீ அரவிந்த சுடர்

To be justified.

line no.1 - உயர்ந்தநல்லதாக்குவது, - உயர்ந்த - நல்லதாக்குவது,

 do.      2 - இனிமையைமீண்டும் - இனிமையை மீண்டும்

  do.      3 - நம்வாழ்விலும் - நம் வாழ்விலும்

line no. 4 - வெறும்சொற்களாகவே - வெறும் சொற்களாகவே

      do.     - எழுந்து,ஜடத்தை - எழுந்து, ஜடத்தை

14. சமூகம் என்ன செய்யும்?

para no.1, line 1 - கிராமத்திருந்து -கிராமத்திலிருந்து

    do.        After line no.1 - extra space.

para no.3, line no.5 - From Internet உலகுக்கு to முன்வருபவர்கட்குண்டு. - separate paragraph

para no.3, line no.7 - தள்.1200,  தள்.1,60,000 - Rs.1200,  Rs.1,60,000

para no.4, line no.1 - சாகரம் -அன்னை - சாகரம் - அன்னை

     do        after line no.1 - extra space.

para no.4, line no.6 - from சமூகம் பெரியதை to காண்பதற்கு முன்படியாகும். -

separate paragraph.

para no.4 - after lines 6 and 7 - extra space.

From trend letter etc. - after line 2 -  extra space.

15. குணமான கேன்சர்  

para no.1, line no.6 - from  சில to அவசியமில்லை.- separate para.

    do.         after line no.9 - extra space.

    do.        line no.17 - அளவிருக்கிறது - அளவிலிருக்கிறது

    do.           do.     18 - தொந்தரவில்லாமருப்பதால் -          

                                      தொந்தரவில்லாமலிருப்பதால்

 

 

 book | by Dr. Radut