Skip to Content

பகவானுடைய இதர நூல்கள்

Archives Apr '83

ஸ்ரீ அரவிந்தரை நாடு கடத்தும் எண்ணம்

அலிப்பூர் கேஸில் ஸ்ரீ அரவிந்தர் விடுதலையான பின் பிரிட்டிஷ் சர்க்கார் மேல் கோர்ட்டிற்கு அப்பீல் செய்வதா, அவரைக் கைது செய்வதா, நாடு கடத்துவதா என யோசனை செய்த தஸ்தாவேஜுகள் சுதந்திரத்திற்குப் பின் கிடைத்தன. அது சம்பந்தமான தகவல்கள், கருத்துகளில் பல,

  • 9 தேசீயவாதிகளை விசாரணையின்றி வங்காளத்தைவிட்டுக் கடத்தி ஆக்ரா ஜெயிலில் வைத்தனர். அவர்களுள் ஸ்ரீ அரவிந்தரின் தாய் மாமன் கிருஷ்ணகுமார் என்பவரும் ஒருவர்.
  • பிப்ரவரி 1910இல் ஸ்ரீ அரவிந்தர், கிருஷ்ணகுமார் வீட்டில் தங்கியிருந்தார்.
  • அலிப்பூர் கேசில் ஆங்கிலேய ஜட்ஜ் கொடுத்த தீர்ப்பு, குறிப்பாக ஸ்ரீ அரவிந்தரை விடுதலை செய்தது பிரிட்டிஷ் சர்க்காருக்குப் பிடிக்கவில்லை.
  • அலிப்பூர் ஜெயிலிலிருக்கும்பொழுது ஸ்ரீ அரவிந்தருடனிருந்த இளைஞர் யோகம் செய்து என்ன பலன் கண்டீர்கள் எனக் கேட்ட பொழுது பதிலாக நான் தேடியதைக் கண்டேன் என்றார் பகவான். கேஸ் என்னாகும் என மேலும் அவ்விளைஞர் கேட்டபொழுது தாம் விடுதலை செய்யப்படுவேன் என்றார்.
  • மே 1909இல் விடுதலை செய்யப்பட்டார் ஸ்ரீ அரவிந்தர். ஜுலை 1909இல் பதிவு செய்யப்பட்ட ரிப்போர்ட் கூறுகிறது:-

விடுதலை செய்யப்பட்ட ஸ்ரீ அரவிந்தரை வக்கீல் சங்க நூலகத்திற்கு அழைத்துச் சென்றனர். அவரைப் பெரிய மரியாதையுடன் நடத்தினர். ஒரு வக்கீல் ஸ்ரீ அரவிந்தர் காலைத் தொட்டு வணங்கினார். அங்கிருந்து C.R.தாஸ் வீட்டிற்குப் போய், மீண்டும் கிளம்பி கிருஷ்ணகுமார் வீட்டிற்குப் போய்த் தங்கினார்.

ரிப்போர்ட் தொடர்ந்து சொல்வதாவது:-

ஸ்ரீ அரவிந்தர் ஆன்மீக நூல்களைப் படிப்பதிலும், எழுதுவதிலும் தம் நேரத்தைக் கழித்தார். யார் அவரை வந்து சந்திக்க விரும்பினாலும் அவர்களைச் சந்தித்தார்... அங்கு உலகப் பிரசித்தி பெற்ற கவி இரவீந்தரநாத தாகூர் வந்தார். வந்து ஸ்ரீ அரவிந்தருடனும், மற்றவர்களுடனும் உரையாடினார்...

இளைஞர் பலர் ஆகஸ்ட் 15, 1909 - ஸ்ரீ அரவிந்தருடைய 39ஆம் பிறந்த தினம் - அன்று கூடினர். "வந்தே மாதரம்'' எனவும் "ஸ்ரீ அரவிந்தர் வாழ்க'' எனவும் கோஷமிட்டனர். "நாடு நிலையற்றுள்ளது. அது தவறு. எத்தனைத் தடைகளிருந்தாலும் நாம் உறுதியுடன் போராட வேண்டும்'' என்று ஸ்ரீ அரவிந்தர் கூறினார்.

அந்நாளில் வங்காளம் லெப்ட்டினன்ட் கவர்னரால் ஆளப்பட்டது. அவர் "ஸ்ரீ அரவிந்தர் பயங்கரமானவர்.... அவர் ஆன்மீகத் தேசபக்தியை மக்களிடம் எழுப்புவதால் மிகவும் பயங்கரமானவர்'' என எழுதினார். அதை வங்காளச் சர்க்கார் ஏற்றது. சீப் செக்ரடரியான  F.W.டியூக் "ஜெயிலைவிட்டு வெளியேயுள்ள பயங்கரமான எதிரிகளில் முக்கியமானவர் ஸ்ரீ அரவிந்தர்'' என்றார்.

ஓராண்டாயிற்று. பிரிட்டிஷ் சர்க்கார் மனம் மாறவில்லை. "வங்காளத்தில் முக்கியமாக இந்தியாவிலேயே சர்க்காருக்குப் பிரதம எதிரியாக இருப்பவர் ஸ்ரீ அரவிந்தர். ராஜத் துரோகமான தஸ்தாவேஜுகள் நாட்டில் பரவுவதற்கு நான் ஸ்ரீ அரவிந்தரையே முக்கியக் காரணமாகக் கூறுவேன்'' என சர்க்காரின் தலைமை அதிகாரி எட்வர்ட் பேக்கர் கூறினார். இந்தச் செய்தியை அவர் வைஸ்ராய் மிண்டோ பிரபுவுக்கு எழுதினார்.

  • வைஸ்ராய் கவர்னருடைய கடிதத்தில் ஸ்ரீஅரவிந்தரை, "பயங்கரமானவர்'' எனப் பலமுறை குறிப்பிட்டதை கவனித்தார்.
  • சில மாதம் கழித்து வைஸ்ராய் இலண்டனுக்கு எழுதிய கடிதத்தில் அதே சொற்களைப் பயன்படுத்தி "மிகப் பெரிய பயங்கரவாதி'' என ஸ்ரீ அரவிந்தரை விவரித்தார். 

அடுத்த மாதம் எழுதிய கடிதத்திலும் "நான் மேலும் சொல்ல எதுவுமில்லை. ஸ்ரீ அரவிந்தர் பயங்கரமானவர்'' என்றார்.

அப்பீல், கைது, நாடு கடத்துவது

  • அப்பீலுக்குப் போனால் சர்க்காருக்குப் பழிவாங்கும் மனப்பான்மையுள்ளது என நினைப்பார்கள் என்பதால் அப்பீல் செய்வதைக் கைவிட்டனர்.
  • அலிப்பூர் கேசில் விடுதலையானபின் சர்க்கார் அவருடைய எழுத்து, பேச்சை அலசிப் பார்த்து "ஸ்ரீ அரவிந்தரைக் கைது செய்யும் படியாக அவற்றுள் எதுவுமில்லை'' என சீப் செக்ரடரி கருதினார்.
  • அப்பீலும் முடியாது, அரெஸ்ட் செய்யவும் முடியாது எனில் வங்காளத்தைவிட்டுக் கடத்தமுயன்றனர். அதற்குச் சட்டம் இடம் கொடுத்தது.
  • லெப்ட்டினன்ட் கவர்னர் சர்க்காருக்கு எழுதுகிறார்:-  வைஸ்ராய் அவசரமாகக் கவனிக்க வேண்டிய விஷயம் ஸ்ரீ அரவிந்தரை நாடு கடத்துவது. அவரே ring leader தலைவர், மிகவும் கெட்டிக்காரர், பிடிவாதக்காரர், பயித்தியக்காரரைப் போன்ற வேகமுடையவர், சேனைத்தலைவராக எவர் கண்ணிலும் படாமலிருக்கிறார்.
  • விவேகாநந்தருடைய சிஷ்யை நிவேதிதா, தாய் நாட்டிலிருந்து கல்கத்தா திரும்பினார். இவர் ஸ்ரீ அரவிந்தருடன் வேலை செய்பவர். அவருடைய சர்க்கார் நண்பர்களிடமிருந்து ஸ்ரீ அரவிந்தரை நாடு கடத்தப் போவதாகக் கேள்விப்பட்டார்.

நிவேதிதா ஸ்ரீ அரவிந்தரிடம் இதுபற்றிப் பேசினார். 36 வருஷம் கழித்து இது பற்றி ஸ்ரீ அரவிந்தர் எழுதியதாவது:

சர்க்கார் என்னை நாடு கடத்தப் போவதாகவும், நான் எனது சேவையைக் காப்பாற்ற தலைமறைவாக இருக்க வேண்டும் எனவும் நிவேதிதா கூறினார். எனது கருத்து வேறு. இது அவசியம் என நான் கருதவில்லை. "கர்மயோகி" பத்திரிகையில் நான் இதுபற்றி எழுதினால் சர்க்கார் என்னை நாடுகடத்த முடியாது என நினைத்தேன். அதேபோல் எழுதினேன். பிறகு சர்க்கார் தம் போக்கை மாற்றிக் கொண்டனர்

"கர்மயோகிக்'' கட்டுரையிலிருந்து சில கருத்துகள்:

  1. எங்கள் இலட்சியம் சுயராஜ்யம்.
  2. எந்த நாடும் தன்னைத் தானே ஆளவேண்டும்.
  3. உயர்ந்த பண்புள்ளவர் ஆங்கிலேயர் என்பதை மறுக்கிறோம்.
  4. நம் மரபைத் தடுக்கும் ஆட்சியை எதிர்க்கிறோம்.
  5. நாம் எவருக்கும் தாழ்ந்தவரில்லை. சுயராஜ்யத்தில்தான் நாடு வளரும்.
  • வங்காள சர்க்கார் 11 பேரை நாடுகடத்த இந்திய சர்க்காருக்குச் சிபாரிசு செய்தது.
  • மொத்தத்தில் 53 பேர் கடத்தப்படவேண்டும்.
  • இதில் ஸ்ரீ அரவிந்தரின் நம்பர் 48.
  • சீப் செக்ரடரிக்கு மனம் மாறியது.
  • பதட்ட நிலை கல்கத்தாவிலிருந்தது.
  • ஏற்கனவே கைதான 9 பேர் விடுதலை செய்யப்பட்டுள்ள நேரம் என்பதால் மேலும் நாடு கடத்தும் எண்ணம் தற்சமயம் தேவையில்லை என சர்க்கார் முடிவு செய்தது.
  • விடுதலை செய்யப்பட்டவர்களில் ஒருவர் கிருஷ்ணகுமார் மித்ரா.
  • அவர் 15ஆம் தேதி பிப்ரவரி விடுதலை செய்யப்பட்டார்.
  • மீண்டும் பிப்ரவரி 19ஆம் தேதி ஸ்ரீ அரவிந்தரை நாடு கடத்தும் யோசனை புதுப்பிக்கப்பட்டது.
  • கிருஷ்ணகுமார் வீட்டில் அந்த நேரம் ஒரு விழா கொண்டாடப்பட்டது.
  • அவருடைய நண்பர்கள் உறவினர் அனைவரும் - ஒருவர் தவிர - குழமினர்.
  • அந்த ஒருவர் ஸ்ரீ அரவிந்தர்.
  • தம்மீது வாரண்ட் பிறப்பித்தனர் எனக் கேள்விப்பட்டு "அசரீரி'' யை ஏற்று ஸ்ரீ அரவிந்தர் சந்திரநாகூர் சென்றார்.

********

Comments

பகவானுடைய இதர நூல்கள்No space

பகவானுடைய இதர நூல்கள்

No space is there after the full stops of the sentences.

Para No.4, Line No.1 - அந்நாüல் - அந்நாளில்

Para No.4, -extra space is there in between 4th and 5th lines.

After Para No.5, after 2nd bulletet point extra space is there. 

சர்க்கார் என்னை நாடு கடத்தப் ............ between 5th and 6th lines extra space is there

"கர்மயோகிக்'' கட்டுரையிலிருந்து சில கருத்து

5th bullet point - கல்கத்தாவிலிருந்தது.* - கல்கத்தாவிலிருந்தது.

 



book | by Dr. Radut