Skip to Content

Savitri

Page 3

The darkness failed and slipped like a falling cloak From a reclining body of a god

இருள் தோல்வியுற்றது, தெய்வத்தின் உடலிலிருந்து நழுவிவிழும் ஆடைபோல் இருளின் திரை உலகினின்று விலகுகிறது

வேதத்தில் உஷைக் காலம் என்பதை இப்பகுதி விவரிக்கிறது. இறைவன் இருளாக மாறியபின் இருளால் புதைந்துள்ள ஒளி வெளிவர முயல்வதையும், அம்முயற்சியின் ஆனந்தத்தையும் அனுபவிப்பதற்காகவே இறைவன் சிருஷ்டித்தான் என்பது ஸ்ரீஅரவிந்தரின் லீலை என்ற தத்துவம்.

Child is the father of the man என்பது ஆங்கிலச் செய்யுளின் ஒரு வரி. தாயார் குழந்தை கற்பதைப் பொன்போலப் போற்றுகிறார். தகப்பனார் குழந்தையின் மழலையை ரசிக்கிறார். குழந்தை பேசுவது அனைத்தும் நாம் குழந்தைக்குக் கற்றுக் கொடுத்ததாகும்.

  • குழந்தை என்பது நம்முடைய சிறு உருவம்.
  • நாமறிந்த அனைத்தையும் குழந்தைக்குக் கற்பிக்க முயல்கிறோம்.
  • ஓரளவு குழந்தை கற்றாலும் நாம் சந்தோஷப்படுகிறோம், பெருமிதப்படுகிறோம்.
  • குழந்தையின் கல்வி முடியும் நிலையில் நம்மை விட அதிகமாகக் குழந்தை அறிகிறது.
  • நம்முடைய அறிவைக் குழந்தையினுள் ஒளித்து வைத்துள்ளோம். அது வெளிப்படுவதைக் காணும் ஆனந்தம் பேரின்பம்.
  • அதைப்போல் இறைவன் தன்னை நம்முள் ஒளித்துவைத்து, அதைக் கட்டாயமாக வெளிப்படுத்தும் திறனை இழந்து தானே மனிதனினின்று தெய்வம் வெளிப்படுவதை (பரிணாமம்) கண்டு ஆனந்தப்படுகிறான்.
  • மனிதன் தன் குழந்தையிடம் பெறும் இன்பத்தை இறைவன் மனிதனிடம் காண்கிறான்.
  • "சாவித்திரி'' காவியம் அந்த உஷைக்(விடியல்) காலத்தில் ஆரம்பிக்கிறது.
  • இருள் திரை விலகுவதுபோல் விலகும் நிகழ்ச்சியை மேற் சொன்ன வரிகள் குறிக்கின்றன.

இந்தப் பக்கத்தில் இறைவனின் ஸ்பரிசம் எதையும் சாதிக்கும், மறைபொருளின் பொலிவின் பெருமை, வழி தவறிய அற்புதம் இடமின்றி தவிப்பது, காலத்தின் நெஞ்சில் கனியும் நினைவு போன்ற கருத்துகள் உள்ளன.

மகாபாரதச் சாவித்திரி எமனிடமிருந்து சத்தியவானை மீட்டாள். ஸ்ரீஅரவிந்தரின் சாவித்திரி எமனை இருளிலிருந்து ஒளியாக மாற்றி, உலகில் மரணத்தை அழித்தாள்.

சாவித்திரியின் எந்தப் பகுதியும் இந்த மையக் கருத்துடன் தொடர்புள்ளது. சாவித்திரி எந்த ஆன்மீக முயற்சியை - தவம் - எமனிடம் மேற்கொண்டாளோ, அதே போன்ற முயற்சியை மனிதன் வாழ்வில் மேற்கொண்டால், எமனை, சாவித்திரி ஒளிமயமாக்கியது போல் அன்பன் வாழ்வை அதிர்ஷ்டமயமாக்க முடியும்.

இறைவனின் ஸ்பரிசம் எதையும் சாதிக்கும்.

என்ற வரி இக்கருத்தைக் கூறுகிறது. இறைவனின் ஸ்பரிசத்தைப் பெறுவதெப்படி? மனிதன் அடுத்த மனிதனில் இறைவனைக் காண்பது இறை தரிசனத்தைவிடப் பெரியது. மனித உறவில் நாம் அடுத்தவரை - இறைவனை - இதமாகவும், இனிமையாகவும் தீண்டினால் இறைவனுடைய ஸ்பரிசத்தை நம் இதயம் பெறும்.

நல்லெண்ணத்தால் மட்டும் நிரம்பிய மனம் இறைவனுக்குரியதாகும்.

*******

Comments

SavitriBullet PointsPoint No.

Savitri

Bullet Points

Point No. 5, Line No.1 - வைத்துள் ளோம் - வைத்துள்ளோம்



book | by Dr. Radut