Skip to Content

"சிறு குறிப்புகள்''

"இந்தியாவில் 21/2 மனிதர்கள் இருக்கிறார்கள்"

- மன்மோகன் கோஷ்

 

ஸ்ரீ அரவிந்தருடைய தம்பி பரீன் கோஷ் அலிப்பூர் வெடி குண்டு கேஸில் முதல் எதிரி. அவர் தாம் செய்த எதையும் ஒளிக்கவில்லை. பெருமிதத்துடன் தாம் வெடிகுண்டு செய்த விவரங்களைக் கோர்ட்டில் வெளியிட்டார். அவருக்குத் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டது. முகமலர்ச்சியுடன் பெற்றுக் கொண்டார். பின்னர் தூக்குத் தண்டனை ஆயுள் தண்டனையாக மாற்றப்பட்டது. சிறைவாசம் முடிந்து விடுதலையாகி 1959இல் காலமானார். மன்மோகன் ஸ்ரீ அரவிந்தருடைய அண்ணன். 1904இல் ஸ்ரீ அரவிந்தர் அரசியலில் நுழைந்தார். 1910இல் புதுவை வந்தார்.

சிறையிலிருந்து விடுதலையானபின் மேடையில் பேசும்பொழுது, "நான் சிறைக்குச் செல்லுமுன் நாடு துடிப்புடன் இருந்தது. எங்கும் விடுதலை வேட்கையைக் கண்டேன். இன்று திலகர் ரங்கூன் ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ளார். நாடு இருளில் அமிழ்ந்துள்ளது. சாவின் அமைதியை எங்கும் காண்கிறேன். எங்கே போயிற்று நான் கண்ட விழிப்பு?'' என்று ஸ்ரீ அரவிந்தர் கதறினார்.

இறைவன் திட்டம் வேறு, சூட்சும உலகில் இந்தியச் சுதந்திரம் நிறைவேறிவிட்டது என்பதால் இறைவன் ஸ்ரீ அரவிந்தர் யோகத்தை மேற்கொள்ளும்படியும், அதற்காகப் புதுவை செல்லும்படியும் பணித்தார் உள்ளிருந்து எழுந்த அசரீரீ சொல்லியதெல்லாம் "புதுவைக்குப்போ...'' என்பதே. என்றும் அக்குரலுக்குப் பணிந்தார் ஸ்ரீ அரவிந்தர். அன்றே ஏற்றுக் கொண்டார்.

பரீனும், மன்மோகனும் நாட்டு விடுதலையைப் பற்றிப் பேசினர். விடுதலை என்பது ஓர் இயக்கம். இயக்கத்திற்குத் தலைவர்கள் தேவை. தொண்டர்களும், ஊழியர்களும் ஏராளமாகத் தேவை. ஆதரவாளர்கள் ஆயிரக்கணக்கில் தேவை. இவர்கள் எல்லாம் வீரர்களாகவும், தியாக மூர்த்திகளாகவும், இலட்சியப் புருஷர்களாகவும் இருந்தால் விடுதலை நிறைவேறும்.

1995இல் ஒரிசா மாநிலத்தில் தொழில்களைஆரம்பிக்க முயன்ற முதன் மந்திரி தொழிலை ஏற்க தம் மாநிலத்திலிருந்து எவரும் முன் வரவில்லை எனக் கண்டபொழுது அவரிடம் அருகிருந்தவர், "நம் மாநிலத்தில் 5லட்சம் ரூபாயுள்ளவர்கள் எவரும் இல்லை'' என்றார். கூட்டத்திற்கு ஆயிரம் பேர் வந்தாலும் பணமுள்ளவரே தொழிலை ஆரம்பிக்கலாம். 5லட்சத்தில் தொழிலுக்கு மனை வாங்க முடியாது. தொழில் எப்படி ஆரம்பிப்பது?

1904இல் இந்தியர் புழுக்களாக இருந்தனர். எதைக் கண்டாலும் பயம், எவரைக் கண்டாலும் பயம். மூட நம்பிக்கை. போலீஸ் என்ற சொல் ஆரவாரமான கூட்டத்தை அமைதியாக்கும். மனிதனாக வாழ்பவனைக் காண்பது சிரமம். இலட்சியப்புருஷனை எங்குத் தேடுவது? இந்நிலையை சித்தரிக்கும் வகையில் அரவிந்தர் தமையன் மன்மோகன் கோஷ்,

"இந்தியாவில் மனிதர்கள் இல்லை. 21/2 பேர் இருக்கின்றார்கள்'' என்றார். அவர் கூறிய அந்த 21/2 பேரில் முதல்வர் ஸ்ரீ அரவிந்தர், அடுத்தவர் பரீன் கோஷ், அவருடைய தம்பி, அடுத்த 1/2 மனிதன் பாலகங்காதர திலகர்.

ஸ்ரீ அரவிந்த சுடர்

பெருமையை நாடும் வீறாப்பும், புண்படும்அன்புள்ளமும் ஒரே நாணயத்தின் இரு புறங்களாகும். ஒன்றை அழித்தால், அடுத்ததும் மறையும்.

Comments

"சிறு குறிப்புகள்'' -

"சிறு குறிப்புகள்'' - "இந்தியாவில் 21/2 மனிதர்கள் இருக்கிறார்கள்'

Para No.1, Line No. 4 - வெüயிட்டார் - வெளியிட்டார்

Para No.4, Line No. 3 - ஆதரவாளர் கள் - ஆதரவாளர்கள்

ஸ்ரீ அரவிந்த சுடர்

Line No. 1 - புண்படும்அன்புள்ளமும் - புண்படும் அன்புள்ளமும்



book | by Dr. Radut